கேட்டு மகிழ (5) கண்ணம்மா என் காதலி

கண்ணனைக் காதலியாக கற்பனை செய்து பாடும் பாடல் இது.
காதல் என்றால் காத்திருப்பது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
இந்தக் காதலில் ஜீவாத்மா பரமாத்மாவுக்காக காத்திருக்கின்றது."பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி" என்பது எங்கும் நீக்கமற நிறைந்த பரமாத்மாவைக் குறிப்பிடுகிறது. தெய்வத் தன்மையிலிருந்து சற்றும் வழுவாது பாரதியார் கண்ணனைக் காதலியாக வைத்துப் பாடுகிறார்.மிகவும் கருத்துள்ள பாடல்.இதில் கடைசி இரு பாடல்களும் ஒலிவடிவில் இடம்பெறவில்லை.
பாடியவர்கள்: Bombay sisters. பாடலைக் கேட்க
பாடியவர்: S.P. பாலசுப்பிரமணியம். பாடலைக் கேட்க
படம்: வறுமையின் நிறம் சிவப்பு. இப் பாடலை இப் பதிவிற்கு தந்தவர் : தி.ரா.ச.







தீர்த்தக் கரையினிலே

தீர்த்தக் கரையினிலே தெற்கு மூலையில் ஷெண்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால்
வருவேன் வெண்ணிலாவிலே பாங்கியோடென்று சொன்னாய
வார்த்தை தவறிவிட்டாய் அடி
கண்ணம்மா மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி


(தீர்த்தக்)

மேனி கொதிக்குதடி தலை சுற்றியே வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா வந்து தழுவுது பார்
மோனத்திருக்குதடி இந்த வையகம் மூழ்கித் துயிலினிலே
நானொருவன் மட்டிலும் பிரிவென்பதோர் நரகத் துழலுவதோ


கடுமை யுடைய தடீ! - எந்த நேரமும்
காவலுன் மாளிகையில்;
அடிமை புகுந்த பின்னும் - எண்ணும்போது நான்
அங்கு வருவதற் கில்லை;
கொடுமை பொறுக்க வில்லை - கட்டுங் காவலும்
கூடிக் கிடக்கு தங்கே;
நடுமை யரசி யவள் - எதற்காகவோ
நாணிக் குலைந்திடுவாள். ...

கூடிப் பிரியாமலே - ஓரி ரவெலாம்
கொஞ்சிக் குலவி யங்கே,
ஆடி விளை யாடியே, - உன்றன் மேனியை
ஆயிரங்கோடி முறை
நாடித் தழுவி மனக் - குறை தீர்ந்து நான்
நல்ல களி யெய்தியே,
பாடிப் பரவசமாய் - நிற்கவே தவம்
பண்ணிய தில்லை யடி! ...







இந்தப் பாடல் "வறுமையின் நிறம் சிவப்பு"என்ற படத்தில் S.P. பால்சுப்பிரமணியம் மிகவும் அருமையாகப் பாடுகிறார்.

வந்ததுதான் வந்தீங்க, உங்க கருத்தையும் சொல்லீட்டு போங்க.


4 Responses to “கேட்டு மகிழ (5) கண்ணம்மா என் காதலி”

மிகச்சிறந்த பாரதியின் கண்ணம்மா பாடல்களைத் தருகிறீர்கள் நன்றி.

நன்றி தி.ரா.ச.
உங்க தியாகராஜர் நினைவு தினம் பற்றிய பதிவையும் படித்தேன். மிகவும் அருமை.

http://www.musicindiaonline.com/p/x/vA2g23QJxd.As1NMvHdW/


you can paste it in your blog and dispaly the SPB'S song in varumaiyin neram sirippu

தி.ரா.ச.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி


உங்க பெயருடன் இப் பாடலைப் பதிவில் சேர்க்கிறேன்.