கேட்டு மகிழ (1) நிற்பதுவே, நடப்பதுவே,

பாரதியார் ஒரு விஞ்ஞானி.தற்போது பரபரப்பாக பேசப்படும் வேச்சுவல் றியாலிற்றியை (virtual reality) எப்பவோ கண்டுபிடித்துவிட்டார்.உண்மையைப் போலத் தெரியும் ஆனால் அது உண்மையல்ல. அதாவது காண்பதெல்லாம் மாயை என்கிறார் பாரதியார்.அவர் ஒரு மெஞ்ஞானிதான். மெஞ்ஞானிகளுக்கு மட்டும்தான் இவை மாயை என்று தெரியும், மற்றவர்க்கு இவை உண்மைபோலத் தோன்றும்.இந்த பாடலை படித்துப் பாருங்கள் புரியும். எனக்குப் பிடித்த வரிக்ள்
"காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ? -என்னே லொஜிக்(logic)!
வீண்படு பொய்யிலே -நித்தம் விதிதொடர்ந் திடுமோ?"
இந்தப் பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும.

இந்தப் பாடல் "பாரதி" திரைப்படத்தில் வருகிறது. கேட்கக் கேட்கத் தெவிட்டாத பாடல். ஆன்மீகக் கருத்துள்ள பாடல். இதைக் கேட்டுக்கொண்டே இயற்கைக் காட்சியைப் பாருங்கள், அப்படியே மெய்...... மறந்து விடுவீர்கள்.

பாரதியாரின் ஞானப்பாடல்
உலகத்தை நோக்கி வினவுதல்

நிற்பதுவே, நடப்பதுவே,பறப்பதுவே நீங்களெல்லாம்
சொற்பனந்தானோ? பல தோற்றமயக்கங்களோ?
கற்பதுவே,கேட்பதுவே,கருதுவதே நீங்களெல்லாம
அற்பமாயைகளோ? உம்முள் ஆழ்ந்தபொருளில்லையோ?

வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்களெல்லாம்
கானலின் நீரோ? வெறும்காட்சிப் பிழைதானோ?
போனதெல்லாம் கனவினைப்போல் புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?

காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றெ பலநினைவும்
கோலமும் பொய்களோ?அங்கு குணங்களும் பொய்களோ?
சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்
சோலை பொய்யாமோ? இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ?

காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே -நித்தம் விதிதொடர்ந் திடுமோ?
காண்பதிலே உறுதிகொண்டோம் காண்பதெல்லாம உறுதியில்லை
காண்பது சக்தியாம் -இந்தக் காட்சி நித்தியமாம்

உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்.

4 Responses to “கேட்டு மகிழ (1) நிற்பதுவே, நடப்பதுவே,”

jeevagv said...

இந்திய ஆன்மீக கருத்தினையே இங்கே பாரதி எடுத்துரைக்கிறார்!
//
காண்பது சக்தியாம் -இந்தக் காட்சி நித்தியமாம்
//
பாரதி விஞ்ஞானியை விட பலபடிகள் மேல் - அவன் மெய்ஞானி!

வணக்கம் ஜீவா
பாரதி மெஞ்ஞானிதான்.எல்லாவற்றிலும்
சக்தியை -சக்திமயமாகக் -காண்கிறார்.
இன்றும், நடப்பது, ஓடுவது-கார்-, பறப்பது-விமானம்-,கேட்பது-mp3- பார்ப்பது-திரைப்படம்-,பேசுவது-ஒலிபெருக்கி-,இவை மட்டுமன்றி, நாம் காணும், உபயோகிக்கும் எல்லாத்திலுமே சக்தியைக் காணலாம். அதாவது energy -இந்த சக்தி இறை சக்திக்குச் சமம். இது இல்லாவிட்டால் எல்லாமே மாயைதான்,
நன்றி. மீண்டும் வருக.

பாரதி ஒரு விஞ்ஞானி மட்டும்மல்ல தீர்கதரிசியும் கூட.1920 களிளேயே "ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே" என்று பாடியவன் எங்கெங்கு நோக்கினும் சக்தியடா என்றவனும் அவனே.

வணக்கம் தி.ரா.ச
//பாரதி ஒரு விஞ்ஞானி மட்டும்மல்ல தீர்கதரிசியும்//
ஆமாம், பாரதியார் சகலதும் அறித வல்லவர்.
//எங்கெங்கு நோக்கினும் சக்தியடா என்றவனும் அவனே.//
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்.,வெள்ளைத் தாமரை,திருமகள் துதி,கண்ணம்மாவின் காதல் இவற்றிலெல்லாம் பாரதியாரின் "சக்தி"மீது வைத்துள்ள பக்தியைக் காணலாம்.
மீண்டும் வருகை தந்து உங்கள் கருத்தகளைக் கூறியதற்கு மிக நன்றி.