கவிதைகளில் வரும் முருங்கைக் காய் - சுவைத்து பாருங்கள்!

முதலில் எஸ். பொ. நினைவுகளிலிருந்து ஈழத்து கவிஞர் நீலாவணனின் " முருங்கைக் காய்" என்கின்ற கவிதையை தருகிறேன்.

கனநாள் கழிந்தொரு கவிதை சுரந்தது!
கோப்பியொன் றடித்தேன்;
கொப்பியை விரித்தேன்
கூப்பிட்டாள் இவள்?
ஏனோ? என்றேன்.

கறிக்குப்
புளியம் பழம்போல றால்
வாங்கியிருக்கின்றேன்.
அதற்குள் வைத்துக் குழம்பு வைக்க
முருங்கைக் காய்தான் ருசியாய் இருக்கும்!
ஆதலால்,
அதோநம் வாசல் முருங்கையின்
உச்சிக் கந்தில்...
ஒன்று...இரண்டு....மூன்று,
நீண்டு முற்றிய காய்கள்
ஒருக்கால்...ஏறி
உசுப்பி விடுங்கள்; என்றாள்!

மறுக்கலாம்....
மீண்டும் இரவுகள் வராவேல்!
அதற்காய் இசைந்தேன்;
அவள் விருப்பின்படி
முருங்கையில் ஏறி, முறிந்து
விழுந்தேன்!

" மறுக்கலாம்....
மீண்டும் இரவுகள் வராவேல்!"
முருங்கைக் காயின் பின்விளைவை முன்கூட்டியே கவிஞர் உணர்ந்துதான் இப்படிப் பாடுகிறாரோ?. படிப்போரை இப்படிச் சிந்திக்க வைக்கிற வரிகள் இவை.
பாவம் கவிஞர்! "மனிதன் ஒன்றை நினைக்கத் தெய்வம் வேறொன்றை நினைக்குமாம்" என்பதுபோல் ஆகிவிட்டது. கடைசியில் "
முருங்கையில் ஏறி, முறிந்து
விழுந்து" அன்றிரவு படுிக்க வேண்டி வந்துவிட்டதே! அருமையான கவிதை! நான் ஈழத்தில் வாழும் காலத்தில் வாழ்ந்த இந்த கவிஞரை சந்திக்கவில்லையே என்று கவலையாயிருக்கிறது.
மேலும், கவிஞர் கையாண்ட " கோப்பி(காப்பி-தமிழகத்தில்), கொப்பி(பயிற்சிப் புத்தகம்), குழம்பு, உச்சிக் கந்தில், உசுப்பி விடல்" போன்ற சொற்கள் என்னை மீண்டும் ஈழத்திற்கு இழுத்துச் செல்கிறது

அடுத்து, முத்துப் போல் சோற்றுடன் முருங்கைக்காய்க் குழம்பு உண்டால் எப்படி இருக்கும் என்பதை முனைவர் தமிழப்பன் வர்ணிப்பதை "வல்லார்யார் சச்சியல் லால்" என்கின்ற கவிதையில் காணலாம்.


இஞ்சி முருங்கை இனியதோர் நெல்லிக்காய்
கொஞ்சம் உருளையதும் கூட்டிவர - பஞ்சனைய
சோறிட்டான் பாயசத்தால் சொக்கவைத்தான் சச்சியைப்போல்
வேறெவர்தாம் செய்வார் விருந்து.

முத்தைப்போல் சோறு முருங்கைக்காய் நற்குழம்பு
சத்தான இஞ்சிநெல்லி சார்ந்துவர - இத்தரையில்
வல்லாரை(ப்) போற்றி வளைத்துமே போடுவதில்
வல்லார்யார் சச்சியல் லால்.

விருந்தென்றால் நானும் விருப்புடனே சென்றேனா
விருந்தா மருந்தா வியந்தேன் - அருந்திடவே
இஞ்சிநெல்லி வல்லாரை இவைவைத்தால் என்சொல்ல
கொஞ்சு தமிழ்மொழியே கூறு.

மீண்டும் அழைப்பானோ மாட்டானோ என்றேநான்
தூண்டிற் புழுவாய்த் துடிக்கின்றேன் - தூண்டுசுவை
உண்டார் மறப்பாரோ ஒண்டொடியே என்வயிறு
அண்டாவாய் ஆகிவிட்ட தே.

கவிஞர் கண்ணதாசன் குறிப்பிடும் ஒரு நாடோடிப் பாடல்

மந்தையிலே மாடு மேய்க்கும்

மச்சானுக்கு மத்தியானம்

மொந்தையிலே சோற்றைப் போட்டு

முருங்கைக் கீரையை வதக்கிக் கொட்டி

என்று தொடங்குகிறது.

மேலும், காய்களைப் பற்றிய சிறுவருக்கான ஒரு பாடலில் முருங்கைக் காய் பச்சைக் கம்பு போல வருகிறது.

படத்தில் இருப்பது எங்கள் வீட்டு முருங்கைக் காய்

கம்பைப் போல முருங்கைக் காய்

கல்லைப்போல பறங்கிக் காய்

பாம்பைப்போலப் புடலங்காய்

பானைபோலப் பூசணிக் காய்

விரல்கள்போல வெண்லைக் காய்

விதையே இல்லா வாழைக் காய்

நன்றி: தமிழம்.நெற்.

இந்த சிறுவருக்கான பாடல் "மொட்டு வகுப்பு ஆசிரியர் கையேடு" என்ற தலைப்பின் கீழ் சிறுவர்க்கான தமிழ்ப் பாடற் தொகுப்பில் வருகிறது.

_________________________________________________________________________________________

சுவைத்துப் பார்த்துக் கருத்தைச் சொல்லுங்கள. நன்றி். அன்புடன் செல்லி.


16 Responses to “கவிதைகளில் வரும் முருங்கைக் காய் - சுவைத்து பாருங்கள்!”

கவிதைகளைச் சுவைத்தேன். நீலாவணனைச் சந்திக்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்காது. காரணம் அவர் எங்கள் காலத்துக்கு முந்தியவர். அவரின் தளமுகவரி, இன்னும் பல அருமையான கவிதைகள் அங்கு உள்ளன.

http://www.neelaavanan.com/

செல்லி கவிதப் பாடல்கள். பிரமாதம்.
உங்க பக்கத்து முருங்கைக் குழம்பும் வைப்பீர்களோ என்றூ விரைந்து வந்தேன்.
மனசு சுவைத்த முருங்கையை நாவு சுவைக்கப்
போடுங்கள் பதிவு ஒன்று.:-)

வணக்கம் பிரபா
//கவிதைகளைச் சுவைத்தேன்.//உவந்து வந்து கருத்துச் சொன்னதற்கு மிகவும் சந்தோசம்.
//இன்னும் பல அருமையான கவிதைகள் அங்கு உள்ளன//
உண்மைதான். ஈழத்தில் நான் இருக்கும்போது இவரைப் பற்றி அறியவில்லை என்பது கவலையாயிருக்கிறது.
மிகவும் நன்றி

வணக்கம் வல்லி

இதற்கு முதற் பதிவில் பிறிஸ்பேன் எங்க வீட்டு முருங்கையைப் பற்றிப் போட்டிருக்கேன் ஒரு தடவை அதையும் படித்துப் பாருங்க.
முருங்கைக் காய் அவியல் குழம்பு செய்வது எப்படி என்று விரைவில் போட இருக்கிறேன்.

வருகைக்கும்,உள்மார்ந்த உங்க கருத்துக்கும் மிகவும் நன்றி.

முருங்கை பதிவு 2ஆம் பகமும் மிக நன்றாக இருக்கிறது.முருங்கையில் நான் மசாலாகறி பண்ணுவேன்.முருங்கைகாயை சிறு சிறு துண்டுகளாக செய்து வேக வைத்து
பின்பு வெங்காயம்,இஞ்சி,தக்காளி,மிளாகாப்பொடி மஞ்சள் பொடியுடன் மசாலாப் பொடியும் கலந்து சேர்த்து வத்க்கி எடுத்தால் மசாலா கறி. இதை தோசை இட்லிக்கு தொட்டுக்க ருசியாக இருக்கும்

வாங்க, வாங்க தி.ரா.ச அவர்களே!

மசாலா சமையற் குறிப்பு நல்லாயிருக்கு.
நீங்கள் போடும் தக்காளிக்குப் பதிலாக நாங்க பழப் புளி சேர்த்துச் சமைப்போம். இதை சோறு,இடியப்பம்,பிட்டு, தோசை எல்லாவற்றுடனும் சாப்பிட உருசியாயிருக்கும்.
ஆனால், முருங்கைக் காயில் மலச்சிக்கல் ஏற்படுத்தும் தன்மை, சூடு இருப்பதால் முருங்கைக் காயுடன் உருளைக்கிழங்கு,அல்லது கத்தரிக் காய் சேர்த்துச் சமைப்போம்.
//முருங்கை பதிவு 2ஆம் பகமும் மிக நன்றாக இருக்கிறது.//
உங்கள் பாராட்டுக்கு மிகவும் நன்றி, ஐயா.

Unknown said...

I am Neelavanan's brother living in USA for the last 28 years and I am very pleased to see you guys enjoying my brother's work.Thank you.

Bala Balasanmugam PhD
balasanmugam@msn.com

வணக்கம் பாலா

எப்பிடிக் கண்டு பிடிச்சீங்க என் பதிவை?
ஈழத்தின் வடக்கே ஒரு மகாகவி போல கிழக்கே நீலாவணன் எழுத்துலகில் பேர் போனவர்கள்.
அவர்களைப் பாராட்டாவிட்டால் நாங்களும் ஒரு ஈழத்தமிழரா?

உங்க வருகைக்கும் பாரட்டுக்கும் மிக மிக நன்றி, பாலா.

கவிதையெல்லாம் படிக்க முடியாத படிக்கு, அந்தப் படம் மனசுல வந்து உட்கார்ந்து கொண்டது செல்லி.
அச்சோ...பூவோடு எவ்வளவு முருங்கைகள்!

எட்டிப் பறிக்கலாமா? இல்லை, கண்ணன் செய்தது போல் பசங்களைக் கூப்பிட்டு உறியடி போல் பறிக்க வேண்டுமா? :-))

முருங்கைப் பூ சமையலுக்கு என்ன செய்யலாம்?

சோமி said...

நல்லாயிருந்தது...தொடர்ந்து செய்யுங்கள்.

முருங்கைக்காய் குழம்பைக்காட்டிலும் பதிவு சுவைத்தது.

வாங்கோ ரவி

// கவிதையெல்லாம் படிக்க முடியாத படிக்கு, அந்தப் படம் மனசுல வந்து உட்கார்ந்து கொண்டது செல்லி.
அச்சோ...பூவோடு எவ்வளவு முருங்கைகள்!//

அவற்றில 8 கிலோ மெல்போனுக்கு அனுப்பி எல்லாரும் நல்லாயிருக்கு என்று நன்றி சொன்னாங்க. "யாம் உண்ட உருசி பெறுக மெல்போனும்"

நாங்க குடுத்து வச்சவங்க.

//எட்டிப் பறிக்கலாமா? இல்லை, கண்ணன் செய்தது போல் பசங்களைக் கூப்பிட்டு உறியடி போல் பறிக்க வேண்டுமா? :-)) //
இதுக்கென்று ஒரு கொக்கத்தடி 4மீ நீளத்தில வச்சிருக்கிறேன்.

//முருங்கைப் பூ சமையலுக்கு என்ன செய்யலாம்?//
யாழ்ப்பாணத்தில் இது சமைப்பதாக எனக்குத் தெரியவில்லை.
இங்கு வந்த பின் நான் கீழே விழுந்த பூக்களை எடுத்துக் காய வைத்து வடகம் செய்திருக்கிறேன். படு உருசி!

நீண்ட நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க.உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றிகள்!

வாருங்கோ சோமி

// நல்லாயிருந்தது...தொடர்ந்து செய்யுங்கள்.// பாராட்டுக்கு நன்றி.
முதமுதலா எங்க வீட்டுக்கு வந்திருக்கிறியள்.சரி ஓய்வெடுப்பம் எண்டு பாத்தன். ஒவ்வொரு பின்னூட்டமும் வந்தவுடன சரி இனி எழுதுவம் என்று வருகுது.இது ஒரு உற்சாகந் தருகுது.
//முருங்கைக்காய் குழம்பைக்காட்டிலும் பதிவு சுவைத்தது. // அப்பிடியா,
மிக்க நன்றி, சோமி.

செல்லி,
மிகவும் அருமையான பதிவு. நல்ல பழைய பாடல்களையெல்லாம் தேடிப்பிடித்து அறிமுகம் செய்கிறீர்கள். மிக்க நன்றி. உங்களின் தளம்[Blog] நூல்நிலையத்திற்கு ஒப்பானது என்றால் மிகையாகாது.

வெற்றி

ரொம்பப் புகழுகிறீர்கள் என நினைக்கிறேன்.
ஏனென்றால் என்னை விடப் பலர் பிரமிக்கத் தக்கவகையில் எழுதும்போது, என்னைப் போய்...........என்ன வெற்றி...

வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி.

Unknown said...

Selli,

Sorry, I didn't have a chance to look at the blog for a while. I was in Sri Lanka in 2006 for my brother's book publication. They also launched his website then. During that time I came across your blog. Thank you again. If you come to this part of the world, please don't hesitate to contact me. I live close to NY city.

Bala