எந்த விருந்து உபசாரமானாலும் அங்கு பிரதான உணவாக சோறு ஆக்குவதற்கு அரிசி முக்கியம் பெறுகிறது. பூப்பு நீராட்டு விழா, திருமணா வைபவம், தற்போது பரவலாக கொண்டாடப்படும் பிறந்தநாள் வைபவங்கள் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.
கோயிலில் நடைபெறும் பூசைகளுக்கு அரிசி முக்கியமானதாக உள்ளது. பிரசாதத்திற்கும், நிறைகுடங்களின் கீழ் நெல்லுக்குப் பதிலாக வைக்கவுக் அய்யர் ஆசீர் வதிக்கவும் அரிசி அவசியம் வேண்டப்படுகிறது.
திருமணவைபவங்களில் மணமக்களை ஆசீர்வதிக்க அறுகரிசியாக அரிசி அங்கும் முக்கியம் பெறுகிறது. தமிழர் உணவுப் பழக்கத்தில் அரிசி சோறு வடிவில் பிரதான இடத்தைப் பெறுகிறது.
ஆறுமாதத்தில் குழந்தைக்குச் சோறூட்டுதலில் இது ஆரப்பிக்கப்படுகிறது.ஏனெனில் முதன் முதலில் குழந்தை தாய்ப்பாலுக்குப் பிறகு திட (solid) உணவு உண்ணத் தொடங்குகிறது. தமிழ்க் கலாச்சாரத்தில் அரிசிக்கும் மனிதனுக்கும் முதற் தொடர்பு ஆரம்பிக்கிறது. இங்கு குழந்தைக்கு 4 மாதத்திலேயே அரிசி சீரியல் கொடுப்பது தொடங்கிவிடும்.குழந்தைக்கு சோறு தீர்த்தல் ஒரு விசேட நாளாகச் சிலர் கொண்டாடுவர். மறுபுறம்,ஏழைச் சிறுவர் ஒரு வேளைச் சோற்றுக்கே
திண்டாடுவர்.இந்தப் பிஞ்குகளை சோகத்திற்கு உள்ளாக்குவதும் அந்தப் பாழாய்ப்போன அரிசிதான்.இறுதியாக, மனிதன் இறந்த பின்னும்கூட அரிசியின் பங்கு முக்கியம் பெறுகிறது.மரணச் சடங்குகளின்போது சொந்தங்கள் வாய்க்கரிசி போடுகிறார்கள். அதன் பின்னர்,வருடாந்த இறந்தவரின் திதி வரும்போது கொடுக்கப்படும் திவசத்திற்கு, பிண்டம் போடுவதற்கும், அய்யருக்குத் தானம் கொடுப்பதற்கும் அரிசி அவசியம் தேவையாகிறது.
படம், நன்றி: கூகிள் இமேஜ்




