அரிசி 3 அரசியலில், ..வர்த்தகத்தில்,..அங்கத்தில்........

அரிசியானது எத்தகைய தாக்கத்தை அரசியலிலும்,வர்த்தகத்திலும் ஏற்படுத்துகிறது என்பதை ஆராய்ந்து பார்க்கலாம்.இந்த அரிசி அரசியல் இலங்கையில் 1958 லேயே ஆரம்பித்துவிட்டது.
1958ல் இலங்கையில் பொதுக் கர்த்தால் ஒன்று நடந்த்தது, ஏன் தெரியுமா?அரசு ஒரு படி அரிசியைக் குறைத்ததிற்காகத் தான் அக் கர்த்தால் பரவலாக நடந்த்ததாம். அப்போது ஒரு பொருலியலாளர் "இலங்கையில் அரிசியலே அரசியல்" எனக் கூறியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் இலங்கை வடக்கு, கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் சூழல்களைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு 5,200 மெட்ரிக் தொன் அரிசியும், 1,500 மெட்ரிக் தொன் சர்க்கரையும் (சீனி) 300 மெட்ரிக் தொன் பால் பவுடரும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.இந்த அறிவிப்பை தமிழகம் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றது
ஆனால் உண்மையில் நடந்தது என்ன?யாழ்ப்பாணப் பகுதியில் இறக்கப்படும் உணவுப் பொருள்களில், 80 சதவிகிதத்தை ஒரு லட்சம் சிங்களக் கூலிப்படைக்கு போய்ச்சேருகிறாது. ஆனால் ஐந்தரை லட்சம் மக்கள்தொகை கொண்ட யாழ்ப்பாணத்திற்கு 20 சதவிகித உணவுப் பொருள்கள்.இந்தப் பங்கீடு வேடிக்கையானதாகவும் வேதனையாகவும் இருக்கிறாது. இதுதான் சிங்கள அரசின் அநியாயத்தைக் காட்டுகிறது. அங்கே பாமர மக்கள் ஒரு கிலோ அரிசி, 235 ரூபாய். ஒரு தீப்பெட்டி, 250 ரூபாய்.எனக் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. அங்கே இராணுவப் படையின் கொடுமையோடு, தொடர்ந்து கூடிக் கொண்டு போகும் அரிசியின் விலை மேலும் மக்களைத் துன்பத்திற்கு உள்ளாக்குகிறது.

அதன்பின் தமிழகத்தின் அரசியலிலும் அரிசி தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் 13.03.1962 அன்று சுமார் ஐந்து இலட்சம் மக்கள் மத்தியில் நடாத்திய கண்டனக்கூட்டத்தில் அறிஞர் அண்ணாவின் பேச்சிலும் அரிசியின் தாக்கத்தைக் காணலாம்
"இந்த மக்களுக்கு அரிசி கிடைக்காமற் செய்துவிட்டால்? சோறின்றி இவர்கள் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும்? வயிறு வாடினால் எதுவும் வழிக்கு வந்துவிடுமன்றோ? அரசு அரிசி அனுப்பாவிடில் போகிறது. கழனிகளிலே நாங்கள் அறுத்தெடுத்த நெல்மணிக்கதிரை விற்றால் எமக்குப் பணந்தான் கிடைக்கும், மானத்துக்கு போரிடும் உம்மைவிடப் பணமோ எமக்குப் பெரிது? இதோ எமது உதவி எங்கெங்கு அரிசி கிடைக்குமோ அதையெல்லாம் வாங்கி நியாய விலைக்கு நாங்கள் தருகின்றோம். அதோடு உமது அறப்போருக்கு உதவியாக நிதியும் அளிக்கிறோம் எமது நெஞ்சம் உமக்கே என முன்வந்தனர். "
1967ஆம் ஆண்டு தேர்தலில் ரூபாய்க்கு 3 படி எப்படி அளிபபதென்பதற்கு அண்ணா "3 படி லட்சியம், 1 படி நிச்சயம் "என்று கூறியமை யாராலும் மறக்கப்பட முடியாத ஒன்று. தமிழகத்தில் 2006 தேர்தல் பிரச்சாரத்தில் 10 கிலோ, 15 கிலோ, இலவசம் (அ.தி.மு.க) எனவும், 2 ருபாய்க்கு ஒரு கிலோ எனவும் (தி.மு.க) அரிசி அரசியல் நடைபெற்றது. தி.மு.க வின் வெற்றிக்கு இந்த இலவச அரிசியும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
1983 ஐப்பசி 10ந் திகதி அண்ணாசாலை முன்னாலே அ.தி.மு.க தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் உண்ணா விரதம் இருந்தாரே, எதற்காக?. மத்திய அரசு தமிழ் நாட்டுக்கான அரிசி ஒதுக்கீட்டை 9000 தொன்னாகக் குறைக்கச் சொன்னதுதான் காரணமாம்.

அரிசி வர்த்தகத்தினை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இனிப் பார்க்கலாம்.யாழ்ப்பாணத்தில் பொருட்களின் விலை ஏற்றத்தை நிர்ணயிப்பதில் அரிசிக்கு முக்கிய பங்கு உண்டு. உதாரணமாக,"ஏனப்பா, இந்தச் சாமான்களின்ர விலை மலைமாதிரி ஏறிக் கொண்டு போகுது?" என்று ஒரு சில்லறை வர்த்தகரைக் கேட்டீர்களேயானால், அவர் சொல்லும் பதில் "அரிசி விக்கிற விலையில மற்றச் சாமான்களின்ர விலையும் ஏறிக்கொண்டு போகத் தானே செய்யும்" என்பதாகத் தான் இருக்கும்.
ஈழத்தில் மட்டுமல்ல, இந்தியாவிலும் வர்த்தகத்தில் அரிசி ஏற்படுத்தும் தாக்கம் பெருமளவுக்கு உண்டு.
கேரள மாநிலம் முகமா பகுதியில் உள்ள துரத்தன் சந்திப்பு பகுதியில் கள்ளுக்கடை ஒன்றில் கள் குடிக்க கடைக்கு வரும் நபர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று கடைக்காரர் அறிவித்தாராம்.அதனைத் தொடர்ந்து வியாபாரம் அமோகமாக களை கட்டத் தொடங்கியதாம்.தற்போது அதிக மக்கள் வருவதால் குலுக்கல் முறையில் பரிசுக்குரிய நபர்களை தேர்ந்து எடுத்து இலவச அரிசி வழங்கி வருகிறாராம்.

இந்த அரிசி சோறாகி,அந்தச் சோற்றைத் தின்னுகின்றதால் வலக்கையிற்கு "சோற்றுக்கை" என்று மனித உடம்பிலும் அரிசி அங்கத்துவமாகிவிட்டது.

அரிசியை வெறுமனே சாதாரணமாக பொருளாக நினைத்துவிட முடியாது.உணவுகளில்,கலாச்சாரத்தில்.அரசியலில்,வர்த்தகத்தில், உடம்பில் என பெரும் சக்திவாய்ந்த பொருளாக விளங்குகிறது எனில் மிகையாகாது.

7 Responses to “அரிசி 3 அரசியலில், ..வர்த்தகத்தில்,..அங்கத்தில்........”

highly informative blog.this should be read by school children

வணக்கம் செல்லி. நல்ல பதிவு. தரவுகளை தொகுத்து அழகாக சொல்றீங்கள்.

வருகைக்குக் கருத்துக்கும் மிக நன்றி, தி.ரா.ச. சார்.

சின்னக்குட்டி
பாராட்டுக்கு நன்றி.

வருகைக்குக் கருத்துக்கும் மிக நன்றி, தி.ரா.ச. சார்.

சின்னக்குட்டி
பாராட்டுக்கு நன்றி.

செல்லி!
பசி ஒன்றென ஒன்றிருக்கும் வரை; நம் மக்கள் கையேந்தும் நிலையிருக்கும் வரை இந்த அரிசி
அரசியல் இருக்கும்.
அழகான தொகுப்பு

யோகன்
//பசி ஒன்றென ஒன்றிருக்கும் வரை; நம் மக்கள் கையேந்தும் நிலையிருக்கும் வரை இந்த அரிசி அரசியல் இருக்கும்.//
ஆமாம், அதாவது பாமர மக்களின் கல்வி அறிவு உயரும் வரை அரிசி அரசியலுக்கு நல்ல ஆயுதமாகவும் (கருவியாக)இருக்கும்.
வருகைக்கு நன்றி.

வெற்றி said...

செல்லி,

நல்ல பதிவு. பல சுவாரசியமான தகவல்கள் அடங்கிய பதிவு.

/* அரிசியை வெறுமனே சாதாரணமாக பொருளாக நினைத்துவிட முடியாது.உணவுகளில்,கலாச்சாரத்தில்.அரசியலில்,வர்த்தகத்தில், உடம்பில் என பெரும் சக்திவாய்ந்த பொருளாக விளங்குகிறது எனில் மிகையாகாது.*/

எமது சைவ மரபின்படி, இறந்த பிணத்திற்குக் கூட அரிசி போடுவது வழக்கம் என நினைக்கிறேன். இவ் வழக்கம் இப்பவும் புழக்கத்தில் உண்டா எனத் தெரியவில்லை. அந்தளவுக்கு, அதாவது ஒருவர் இறந்த பின் கூட அரிசி எமது வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கிறது என்பது உண்மைதான்.

திருமதி.சிறீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சி காலத்தில் இலங்கை விவசாயத்துறையில், குறிப்பாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருததாக நினைக்கிறேன், இல்லையா?

வெற்றி
//பண்டாரநாயக்காவின் ஆட்சி காலத்தில் இலங்கை விவசாயத்துறையில், குறிப்பாக அரிசி உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருததாக நினைக்கிறேன்//
உள்நாட்டு உற்பத்தி கூடியது என்னவோ உண்மைதான், ஆனால் வயல் இல்லாதவர்கள் அதிக விலை குடுத்து வாங்க வேண்டியும் வந்தது. இது 70 களின் ஆரம்பங்களில் இருந்தது.
இதிலிருந்து விடுபடத்தான் UNP சனம் நல்லதென நினைத்து வாக்களித்தது. இதன் பிதான் பிரச்சனைகளே பூதாகரமாயின.