வேளைக்கு எழும்புது ஏன் முக்கியமானது? வாசித்துப் பாருங்கள். .

"வேளைக்கு எழும்பும் உங்களது பழக்கம் என்பது உங்களுக்கு நீங்களே கொடுக்கும் ஒரு கொடை" எனலாம்.அதிகாலை நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்பார்கள். அந்த நேரத்தில் நல்ல சிந்தனைகள் மனதில் ஏற்படும்; யோகா போன்ற உடற்பயிற்சி, தியானப் பயிற்சி செய்ய ஏற்ற நேரமாகும்.இந்தக் காலத்தில் தொலைக்காட்சி , இணையம் என இரவுநேரங்களில் நீண்டநேரம் செலவழிப்பதால் அநேகம்பேர் காலையில் தாமதமாகவே எழும்புகிறார்கள். இதனால் அவர்கள் பகலில் செய்யவேண்டிய வேலைகளை அவசரத்துடன் செய்வதால் வேலையின் தரமும் கெட்டு, தேவையில்லா சிக்கல்களிலும்,விபத்துகளிலும் மாட்டிக் கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகிறார்கள். ஆனா வேளைக்கு எழும்புவதால அன்றய நாளில் நிறைய நேரம் இருக்கும். அதால அவரப்படவோ அந்தரப்படவோ வேண்டியிருக்காது. நிதானமாக, திறமையாக பயனுள்ள பல வேலகளைச் செய்யமுடியும்.

வேளைக்கு எழும்பும் பழக்கத்தை கோண்டு வருவதற்கு எங்களை நாம் அதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். நீண்ட நேர நித்திரையை விட 6 மணித்தியால ஆழ்ந்த தூக்கமே நல்லது. நித்திரை அடிக்கடி சிலருக்கு குழம்புவது உண்டு.
அதற்கு பின்வரும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும்படி றொபின் சர்மா சொல்கிறார்
• நித்திரை கொள்ள தயாராகும்போது அன்றய நாள் பகலில் நடந்தவைகளை அசைபோட வேண்டாம்.

•எட்டுமணிக்குப் பிறகு சாப்பிட வேண்டாம். விரும்பினால் சூப் குடிக்கலாம்.

• படுக்கைக்குப் போகுமுன் தொலைக் காட்சியில் செய்திகளைப் பார்ப்பததைத் தவிர்க்க வேண்டும்.

• படுக்கையில் இருந்துகொண்டு வாசிப்பது சிலரது வழக்கம். அதைத் தவிர்க்க வேண்டும்.

வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த தொடர்ச்சியான முயற்சியும், பயிற்சியும், எல்லாத்திற்கும் மேலாகப் பொறுமையும் தேவை. அதனால் வரப்போகும் நல்ல விளைவுகள் நமக்குப் பயனுள்ளவையாகவே இருக்கும்.

வேளைக்குப் படுத்து வேளைக்கு எழும்புங்கள்..!

2 Responses to “வேளைக்கு எழும்புது ஏன் முக்கியமானது? வாசித்துப் பாருங்கள். .”

நல்ல பயனுல்ல விடயம். கடைபிடிப்பது கடினம் போல தோன்றினாலும் கட்டாயம் செய்யவேண்டிய செயல். நன்றி செல்லி. நலமா?

நல்ல பயனுல்ல விடயம். கடைபிடிப்பது கடினம் போல தோன்றினாலும் கட்டாயம் செய்யவேண்டிய செயல். நன்றி செல்லி. நலமா?