Showing posts with label மாநிலம். Show all posts
Showing posts with label மாநிலம். Show all posts

குயின்ஸ்லாந்து மாநிலம் பகுதி 2 - 16.2.07

குயின்ஸ்லாந்தின் பொருளாதாரம்

.2005ம் ஆண்டு புட்டாதி முடிவில் மாநில பொருளாதார வளர்ச்சி வீதம் 4 சதவீதமாக இருந்தது. இது 2006/07 ம் நிதிஆண்டில் 4.25சதவீதமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.(5). .

குயின்ஸ்லாந்தின ஆரம்ப கைத்தொழிற் துறைக்குள் கரும்புச் செய்கை, சுரங்கத்தொழில்,மீன்பிடித் தொழில்,விவசயம்,காட்டுத் தொழில்,தண்ணீர் முகாமை, சுற்றுப்புற முகாமை என்பன அடங்குகின்றன.(9) அண்மைக் காலங்களில் குயின்ஸ்லாந்தின் சுற்றுலாத்துறையிலும், சுரங்கத் தொழிலிலும் அதிக முன்னேற்றத்தைக் அடைந்து வருகிறது. இதில் நிலக்கரி முக்கிய இடத்தைப் பெறுகிறது.. இங்குள்ள நிலக்கரிச் சுரங்கங்களை கீழுள்ள படத்தில் காணலாம்.

குயின்ஸ்லாந்தின் வர்த்தக ஏற்றுமதி வருமானங்களில் 35 சதவீதத்துக்கு மேலாக நிலக்கரி மூலம் கிடைக்கிறது.(6) ஜப்பான், தென் கொரியா, சீனா, இந்தியா, தைவான், நெதர்லாந்து போன்ற நடுகள் அதிக அளவில் குயின்ஸ்லாந்தின் நிலக்கரியை இறக்குமதி செய்யும் நாடுகளாகும்.(7) ஜப்பான், தென் கொரியாவைத் தொடர்ந்து இந்தியா குயின்ஸ்லாந்தின் நிலக்கரி இறக்குமதியில் 2005ம் ஆண்டில் மூன்றாவது இடத்தில் இருந்தது.(6) மொத்த கனிப்பொருள் ஏற்றுமதியில் நிலக்கரி்(Coal) ஒரு தசாப்தத்திற்கு மேலாக 68.1 சதவீதத்திலிருந்து 65.1 சதவீத அளவுக்கு இருந்தது.(8)

மேலும்,நிலக்கரியில் மட்டும் தங்கியிராமல், 2005 இல் ரஷியா, சிங்கப்பூர் ஆகியநாடுகளுக்கு உணவுப் பொருட்கள், கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள்,யந்திரங்கள், போக்குவரத்து சாதனங்கள் என்பன ஏற்றுமதி செய்து செய்யப்பட்டன. மொத்த ஏற்றுமதியில் இது மூன்றில் இரண்டு மடங்காகும்.(6) குயின்ஸ்லாநதின் நிலக்கரி,உலோகத் தாதுகள்,இரும்பு அல்லாத உலோகங்கள், இறைச்சி, சீனி என்பற்றின் ஏற்றுமதி மொத்த வர்த்தக ஏற்றுமதி வருமானத்தில் 70 சவீதத்தை வழங்குகிறது.(6)

சுற்றுலாத் துறை

சுற்றுலாப் பிரயாணிகளைக் கவரும் இடங்களில் குயின்ஸலாந்தின் நாட்டுப்புறம் (Outback ) ஒன்று. அதாவது கிராமப் புறம். இது பல இயைற்கையான, பாரம்பரிய, கலாச்சார, பூர்வீகக் குடிகளைப் பற்றிய கவரக்கூடிய இடங்களைக் கொண்டதாகும். இது ஒரு விசாலமான பரந்த பிரதேசமாகும். மேற்கு குயின்ஸலாந்தில் 832,000 சதுர கி.மீ. ஐக் கொண்டதாகவும் நாட்டுப் புறம் இருக்கிறது.(10) இத்தகைய பழம்பெரும் நிலத்தொற்றத்தில் அவுஸ்திரேலிய பாரம்பரியங்களும், மரபுகளும்,புதைந்து கிடக்கும் புராதன காலத்து மிருகம் அல்லது தாவரங்களின் மிஞ்சிய பதிகளின் வரலாறுகளும், வண்ணவண்ண நிறமுடைய செடிகளைக் கொண்ண்ட புதர்களும்(Bush )அல்லது பற்றைகளும் காணமுடியும்.(10) அநேகமான எல்லா சுற்றுலா இடங்களையும் படத்தில் காணலாம். இவை ஒவொன்றையும் பற்றி அறிய (12) இங்கே சொடுக்கவும்.

உலகெங்கும் உள்ள மக்களை மட்டுமல்ல ஏனைய மாநிலத்தவரையும் கவரக்கூடிய களிப்பூட்டும் பூங்காக்கள் (Theme Parks) குயின்ஸ்லாந்தித்தான் உள்ளன. கோல்ட் கோஸ்ற் (Gold Coast) எனுமிடத்தில் அவை

கனவு உலகம் ட்றீம் வேல்ட் (Dream World)

பட உலகம் மூவி வேல்ட் (Movie World)

கடல் உலகம் சீ வேல்ட் (Sea World)

ஈரமும் இயற்கையும் = நீர்ப் பூங்கா வெற் அன்ட் வலிட் (Wet'n Wild)

வெண்தண்ணீர் உலகம் =இதுவும் ஒரு நீர்ப் பூங்கா வைர் நடெர் வேல்ட் (White Water World) என்பனவாகும்

இவை தவிர,

குரும்பின் வனவிலங்கு சரணாலயம் ( Currumbin Wildlife Sanctuary )

அவுஸ்ரேலியா மிருகக் காட்சிச் சாலை ( Australia Zoo ) என்பனவும் காணாலாம்

குயின்ஸ்லாந்தில் சுற்றுலா பயணிகளுக்கு பவித தங்குமிட வசதிகள் வேறுபட்ட கட்டணங்களில் பெறமுடியும்

கொட்டல்கள், லொட்ஜ், கரவன் பாக் இருப்பிடங்கள், வீடுகள், பண்ணை வீடுகள் என்பவற்றைக் குற்ப்பிடலாம்

அவுஸ்ரேலியாவின் பதினொரு உலக பாரம்பரிய சின்னங்கள் உள்ள தலங்களில் ஐந்து தலங்கள் இங்குதான் உள்ளன. ஆதுவும் அவற்றில் சில அருகருகேயும் உள்ளன. அடர்த்தியான மழைக்காடும்,(Rainforest) பெரிய பாறைத்தொடரையும்(Great Barrier Reef) உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இங்கு சராசரி வெப்பநிலை 25.2C(77.3F) க்கும் 15.7C(60.2F)க்குமிடையில்த்தான் இருக்கும். பனி பெய்வது எப்பவாவது அருமையாகத்தான் நிகழும். கடற்கரை ஓரங்களில் குளிர்த் தென்றலை அனுபவிக்கலாம்.

மத்திய கோட்டுக்கு அண்மித்த இடங்களில் அதாவது கெயின்ஸ்சில்(Cains) சூடாந்து ஈரப்பதன் கூடியதுமான காலநிலை இருக்கும்

நாட்டுப்புறங்களில்(outback) அதாவது கரையிலிருந்து மிகவும் உள்ளே இருக்கிம் இடங்களில் கூடிய வெப்பமும் ஈரப்பதன் குறைந்தும் இருக்கும். மலைப் பகுதிகள் கரைப் பகுதிகளைவிட குளிராக இருக்கும். உதாரணமாக மலைப் பகுதியில் உள்ள ரூவூம்பா -Toowoomba என்னும் இடத்தை ஈழத்தில் நுவரெலியாபோல எனவும், இந்தியாவில் கோடைகானல் போல எனவும் கருதுவர்.

அவுஸ்திரேலியா தென்துருவத்தில் இருப்பதால், இதன் பருவங்கள் வடதுருவ பருவகாலங்களைவிட வேறுபட்டிருக்கும். எனவெ இங்கு வருவதற்கு மூட்டை முடிச்சுகளைக் கட்டு முன் குளிர் உடுப்புகள் வைக்கிறதா இல்லையா என்பதை இங்குள்ள கலநிலையை அறிந்து செயற்படுவது நன்மைபயக்கும்.
இனி இங்குள்ள
நான்கு பருவகாலங்களையும் நோக்கலாம்.

இலை துளிர் காலம்(Spring), புரட்டாதி-கார்த்திகை

பகலில் ஓரளவு வெப்பமும் சோரிய ஒளியும் கூடவே இருக்கும்.அத்துடன் மெல்லிய குளிர் காற்றும் இருக்கும். ஈரவும் மிக மெல்லிய குளிராக இருக்கும்.

கோடை காலம் (Summer)–மார்கழி- மாசி

கோடையில் கரையோரப் பகுதிகளில் குளிர்த் தென்றலை அனுபவிக்கலாம்.

உள்நோக்கிய இடங்களில் வெப்பம் கூடுதலாகவும் ஈரப் பதன் குறைவாகவும் இருக்கும்

இலையுதிர் காலம்(Autumn) –பங்குனி-வைகாசி

இக் காலத்தில் மெல்லிய குளிர் பகலும், இரவும் இருக்கும். இருப்பினும் கோடையின் சிறிதளவு வெப்பமும் அனுபவிக்கலாம்

பனிக் காலம்(Winter) ஆனி – ஆவணி

இக் காலதில் பகற்பொழுது சூரிய ஒளிடனான மெல்லிய சூடாகவும், இராப் பொழுது குளிராகவும் இருக்கும்

குயின்ஸ்லாந்து காலநிலை முன் அறிவிப்பைக்(11) காண இங்கே சொடுக்கவும்

குயின்ஸ்லாந்தின் அடையாளச் சின்னம் கியூ ஒன்று Q1 கட்டிடம்
உலகிலேயே மிக உயர்ந்த வதிவிட கட்டிடச் சிகரம்(Residential Building Tower) "கியூ ஒன்று" கோல்ட் கோஸ்ற் (Gold Cost)எனும் இடத்தில் இருக்கிறது. இதனை படத்தில் காணலாம். அவுஸ்ரேலிய கடற்கரையில் இந்த சிகரத்தில்மட்டுந்தான் அவதானிப்பு தளம் இருக்கிறது.

இப் புகைப் படம் மிகவும் அருமையான படமாகும்.அத்துடன் பலராலும் புகழப்பட்ட ஒன்றாகும்.மேலும் Q1 பற்றிய படங்களைக் காண இங்கே சொடுக்கவும.


உசாத்துணை வலைப் பக்கங்கள்:

5 http://www.budget.qld.gov.au/budget-papers/docs/highlights_15_2006-07.pdf

6 http://www.sd.qld.gov.au/dsdweb/v3/documents/objdirctrled/nonsecure/pdf/16870.pdf

7. http://www.gc3.cqu.edu.au/modern-world/index.php

8 http://www.sd.qld.gov.au/dsdweb/v3/guis/templates/content/gui_cue_cntnhtml.cfm?id=47711

9 http://www.qld.gov.au/business_and_industry/primary_industries/index.html

10 http://www.tq.com.au/destinations/outback/outback_home.cfm#

11 http://www.bom.gov.au/weather/qld/qld-forecast-map.shtml
12
http://www.tq.com.au/destinations/index.cfm


குயின்ஸ்லாந்து மாநிலம் 14.2.07

குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மூலயில் இருக்கிறது. இது மேற்கே நோதேண் ரெறிற்ரறியையும் (Northern Territory), தென்மேற்கே தென்அவுஸ்திரேலியாவையும், தெற்கே நியூசவுத் வேலையும், கிழக்கே பசுபிக் சமுத்திரத்தையும், கோறல் கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.(2) இதன் கடற்கரையின் பெரும்பகுதி "பெரிய தடுப்பு பாறைத்தொடரை" (Great Barrier Reef. ) கொண்டிடுக்கிறது.உலக பாரம்பரிய தலங்களில் இதுவும் ஒன்றாகும். சுற்றிலாப் பிரயாணிகளைக் கவரும் முக்கிய இடங்களில் இது பிரதான இடத்தைப் பெறுகிறது.
குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியாவில் எங்கே இருக்கிறது என்பதை தெளிவாக படத்தில்(3) காணலாம். இது அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாகும்.இதன் நிலப்பரப்பு 1,852,642 சதுர கி.மீ(கிட்டத்தட்ட1.8மில்லியன் சதுர கி.மீ)ஆகும்.குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியாவின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 1/3 பங்கை உள்ளடக்குகிறது எனலாம். இந்த நிலப்பரப்பு அளவு அமெரிக்க ரெக்ஸாஸ் மாநிலத்தின் இரண்டரை மடங்கு அளவைக் கொண்டதாகும்.இம் மாநிலப் பெரும்பகுதி பூமியின் மத்தியகோட்டுப் பகுதியைச் சார்ந்ததாக உள்ளது.
வரலாறு
ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் பூர்வீகக்குடி மக்கள் ( Indigenous Australians ) கிட்டத்தட்ட நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கிறார்கள் எனப்படுகிறது.(2)
கப்ரன் ஜேம்ஸ் குக்(
Captain James Cook)1770 இல் குயின்ஸ்லாந்தைக் கண்டுபிடித்தார் . இதற்கு முன்பு டச்சு, போர்த்துகேயர, பிரான்ஸ் கப்பலோட்டிகளும் வந்து ஆராய்ந்து போயிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இது நியூசவுத் வேல்ஸ்சின் அதிகாரத்தின்கீழ்த்தான் இருந்தது. 1824 தொடக்கம் 1843 வரை குயின்ஸ்லாந்து தங்கச் சுரங்கங்களில் வேலை செய்யும் கைதிகள் காலனி (Colony) யாகவே இருந்தது. பின்பு 1859 இல் நியூசவுத் வேல்ஸ்சிலிருந்து பிரிந்து, பிரிட்டிஷ் காலனி என மாறியது. இந்த மாநிலத்தை இவ்வாறு தனி மாநிலமாக ஆக்க விக்ரோறியா மகாராணியார் கையெழுத்திட்டு பிரகடனப்படுத்தியதனால் "குயின்ஸ்லாந்து" எனப் பெயர் பெற்றது. (1) பின்னர் 1901 ம் ஆண்டில்த்தான் அவுஸ்திரேலியாவின் பொதுநல அமைப்பின்கீழ் சட்டரீதியான மாநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
சனத்தொகை
2006 இல் குயின்ஸ்லாந்தின் சனத்தொகை 4,053,444 அதாவது கிட்டத்தட்ட 4 மில்லியன்களாகும்.இதில் 0.3% இந்துக்கள் 70.9% கிறிஸ்தவர்கள்,0.4% இஸ்லாம் மதத்தவரும் இங்கு வாழ்வதாக புள்ளிவிபரங்கள்காட்டுகின்றன.(1) அவுஸ்ரேலியாவின் ஏனைய மாநில தலைநகரங்களிலும்பார்க்க மிகக் கூடிய சனத்தொகை வளர்ச்சி வீதத்தை கடந்த ஐந்து வருடங்களாக பிறிஸ்பேன் பதிவு செய்திருக்கிறது. 2000ம் ஆண்டிலிருந்து 2005 வரை பிறிஸ்பேனின் சராசரி சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடமொன்றுக்கு 2.0 சதவீதமாக இருந்தது.(4)




பிறிஸ்பேன் நகரம்(Brisbane) குயின்ஸ்லாந்தின் தலைநகரமாகும்.இது இந்த மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்திருக்கிறது. இதை மேலுள்ள படத்தில் காணலாம். சனத்தொகை (898500)அடிப்படையில் பிறிஸ்பேன் மாநகரசபை அவுஸ்திரேலியாவின் முதலாவது மிகப்பெரிய மாநகரசபை எனப்படுகிறது.

இன்னும் வரும்.............

1. http://en.wikipedia.org/wiki/Queensland

2. http://www.factmonster.com/ce6/world/A0840767.html
3. http://www.queensland-australia.com/100103.php
4. http://www.sd.qld.gov.au/dsdweb/v3/documents/objdirctrled/nonsecure/pdf/16870.pdf