கண்ணாமூச்சி ஏனடா என்ற படம் மீற் த பேரன்ஸை தழுவியதாக உள்ளது.
மீற் த பேரன்ஸை Jay Roach இயக்கத்தில் Robert De Niro,Ben Stiller , Teri Polo, Blythe Danner, Nicole Dehuff, Jon Abrahams ஆகியோர் நடித்த அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படம்தான் "மீற் த பேரன்ஸ்" ( Meet the Parents)
இது 15மார்கழி 2000 த்தில் வெளிவந்தது. இரு படத்திலும் மகளின் காதல் தகப்பனின் கண்டிப்புக்கும் தாயின் தாராள மனதிற்கும் இடயில் ஊசலாடுகிறது. மேலும், மகளின் காதலனை ஏற்காமல் புறக்கணிக்கும் கண்டிப்பான தந்தை தாராள குணமிக்க தாய் போன்ற கதா பாத்திரங்கள், பெரியோர் காதல் இளையவர் காதல் என்பன இரு படத்திலுமே இடம்பெறுகின்றன. இரண்டுமே நகைச்சுவையான திரைப் படம்.
மீற் த பேரன்ஸில் கண்ணாமூச்சி ஏனடாவில்
பென் ஸ்ரில்லர்(Ben Stiller) பிருத்வி
ரொபெட் டி நிரோ (Robert De Niro) சத்தியராஜ்
ரெறி போலோ (Teri Polo) சந்தியா
ப்ளித் டனர் (Blythe Danner) ராதிகா
இப் படத்தில் மகளின் காதலனை(கிறேக்- Greg,)ஏற்றுக்கொள்ளாத கண்டிப்பான தகப்பனாக ரொபெட் டி நிரோ (Robert De Niro) குத்தல், குதர்க்கப் பேச்சுடன் பென் ஸ்ரில்லர்(Ben Stiller) ஐ வெறுத்து ஒதுக்கும் விதம் சிரிப்பில் பார்ப்போரை வயிறு குலுங்கச் செய்யும். திரைவசனங்களுக்கு ஏற்ற நகைச்சுவை நடிப்பு , வித்தியாசமான நகைச்சுவை பாத்திரத்திரங்கள் இப்படத்தின் வெற்றிக்கு பின்னணியாக இருக்கின்றன என்றால் தவறாகாதயில் த்ங்காமல், தன் வித்தியாசமான நகைச்சுவை பாத்திரத்தை உருவாக்க தன் பலத்தை பயன்படுத்தியிருக்கிறாடர் என்பது வெளிப்படைபெற்றிருக்கு. மகளின் காதல் தகப்பனின் கண்டிப்புக்கும் தாயின் தாராள மனதிற்கும் இடயில் ஊசலாடுகிறது.அதை எப்படி பெற்றாரின் காதலை வைத்து தன் டகாதலைவெற்றியாக்கும் நாயகன்.
கண்ணாமூச்சி ஏனடா
கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக சத்யராஜ் தாராள குணமிக்க அன்பு மனைவி ராதிகா. இவர்களின் மகள் சந்தியா.மலேஷியாவில் படித்துக் கொண்டிருக்கும்போது சந்தியா பிருத்விராஜை சந்திக்க நேர்கிறது. பிருத்வி சந்தியாவைக் கண்டதும் ஆரம்பத்திலேயே தன் தகப்பனைப் பத்திச் சொல்லி பயமுறுத்துறார்."எங்க அப்பாகிட்டமட்டும் நீ மாட்டினே, தோலை உரிச்சிடுவாரு", "சென்னையில ஆறுமுகம்னு கேட்டுப்பாரு"மிக கண்டிப்பானவர் என்கிறதை தெரியப்படுத்தப்படுகிறது. யாரோ ஒருத்தனோட மகளின் காதலை வெறுக்கும் அப்பா அக்காதலை ஒதுக்கபிருத்விராஜை போலீஸ் கரவுப் புத்திடயோடு புறக்கணிக்கும் ஒவ்வொரு செயலும் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறது. ஆனால் இந்த முயற்சி அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்தவுடன் தோற்றுவிடுகிறது.ஆனால் பிருத்வி தன் காதல் தோற்றாலும் காதலியின் பெற்றோரை இணைத்து வைக்க முயன்று , மாமனார் மனதில் டபிள் ஓகே ஆகிவிட்டார்- இதுதான் கதைச் சுருக்கம்.சத்டியராஜின் நக்கல் நடிப்பும், வில்லன் தன்மையும் கண்டிப்பான சுபாவமுள்ள இந்தப் பாத்திரத்திற்கு பொருந்துகிறது.. பிருத்வி சத்யராஜின் தந்திரங்களுக்கு ஈடுகொடுத்தும், யதார்த்தமான சூழ்நிலைகளில் இயல்பாகவும் நடித்துச் சிறப்பிக்கிறார். இதில் அரிவாள் வெட்டு, இரத்த களரி, ஆபாசம் ஏதுமில்லாம இருப்பது மெச்சத்தக்கது. குடும்பத்தோட சேர்ந்து பாக்கக் கூடியதாக இருக்கிறது.
படங்கள் நன்றி:
கூகிள் இமேஜ்
cinesnacks
11 Responses to “கண்ணாமூச்சி ஏனடா & மீற் த பேரன்ஸ் (Meet the Parents ) ஒரு ஒப்பீடு்”
சுட்டபடம் சுடாத படம் விளக்கத்திற்கு நன்றி.இதுதான் "குளூபலைசேஷன்" என்பதோ.
இருந்தாலும் சத்யராஜ் ,பிருதிவி இருவரின் நடிப்பு மிகையில்லாமல் கதையோடு பொருந்தி வருகிறது. ஆமாம் ஏன் உங்களுக்கு மீட் எனபது மீற் என்று வருகிறது.
இந்த சுட்டுப் போடுற வேலையை பல நாட்டுப் படங்களிலும் கூடக் காணலாம்.உ+ம்: சீனப் படங்கள்
"குளோபலைசேஷன்" என்பதற்குள்ளும்
அடக்கலாம்.எல்லாம் IT தொழில்நுட்பத்தால் கொண்டுவரப்பட்ட சௌகரியம்.
// ஏன் உங்களுக்கு மீட் எனபது மீற் என்று வருகிறது.//
மீட் என்றால் meed
மீற் என்றால் meet அப்படித்தானே வரும்
செல்லி!
நம்ம இயக்குநர்களை அதிகம் வெளிநாட்டு திரைப்பட விழாக்களில்
காணலாமாம்...
பல பாலச்சந்தர் படங்கள் கூட அப்பட்டமான தழுவலாம் எனப் பல வருடங்களுக்கு முன் 'வீரகேசரியில்'
ஒருவர் ஆதாரத்துடன் எழுதினார்.
இன்றைய நவீன வீட்டுக்குள் உலகம்
வருவதால் இந்தத் திருட்டுக்கள்
தெரியவருகிறது.
அன்று சுப்பனுக்கும்,குப்பனுக்கும் இவர்கள் சுட்டுப் போட்டது தானே தெரியும்.
தி.ரா.ச அண்ணாவின் இந்திய மீட், உங்கள் ஈழ மீற்.....
இவை இந்தியா டுடே, இந்தியா ருடே போல்..
தீரப் போவதில்லை.
யோகன்
படங்கள் மட்டுமல்ல music உம்தான் சுட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நிறம் மாறாத பூக்கள் படத்தில் இளையராஜாவின் பாடல் ஒன்று ஆங்கில பாடலின் copy என்று இலங்கை வானொலியில் அசலும் நகலும் நிகழ்ச்சியில போட்டவை.
உலகம் சுருங்கிப் போச்சு இப்போ.அதனால சுடுவது உடனே தெரிய வருகிறது.
சகோதரி,
இந்த ஆங்கில படத்தைப் பல முறை பார்த்திருக்கிறேன். தமிழ்ப் பட விமர்சனத்துக்கு நன்றி: //பிருத்வி சத்யராஜின் தந்திரங்களுக்கு ஈடுகொடுத்தும்// இதுக்காகவே பார்க்கலாம் என்று இருக்கிறேன். நன்றி.
தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்: ஈழத்துச் சகோதரர்கள் தமிழ் மாதப் பெயர்களை ஆங்கில மாதங்களுக்கு பதிலாக எழுதுவது பற்றித் தெரியும். ஆனால், நீங்கள் அக்டோபர் 6, 2000இல் வெளியான ஆங்கிலப் படத்தை 15மார்கழி 2000 என்று சொல்கிறீர்கள்? என் புரிதலுக்காகக் கேட்கிறேன்... மீண்டும் நன்றி.
கெ.பி.
வாங்க கெ.பி
//தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்: ஈழத்துச் சகோதரர்கள் தமிழ் மாதப் பெயர்களை ஆங்கில மாதங்களுக்கு பதிலாக எழுதுவது பற்றித் தெரியும்.//
ஈழத்துச் சகோதரர்கள் தமிழில் அதிக ஆர்வமிக்கவர்கள். அதனால் அப்படித் தமிழில் தமிழ் மாதப் பெயர்களை எழுதுவது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதானே!
// ஆனால், நீங்கள் அக்டோபர் 6, 2000இல் வெளியான ஆங்கிலப் படத்தை 15மார்கழி 2000 என்று சொல்கிறீர்கள்? என் புரிதலுக்காகக் கேட்கிறேன்//
விக்கிப்பீடியா காட்டுவது
6/10/2000
ஆனா நான் படித்த விமர்சனத்தில்
Genre: Comedy, Comedy
Length: 108 minutes
Cinema: 15 December 2000
Country: USA என்றிருந்தது.அதனால் அப்படிப் போட்டுவிட்டேன்.
மீட் என்றால் meed
மீற் என்றால் meet அப்படித்தானே வரும்
உங்கள் பகுதியில் வழங்கும் சொற்க் கையாடல் தெரியாதலால்கேட்டுவிட்டேன் மன்னிக்கவும். நிங்களும்,யோகன் ஐயாவும் சொன்னால் மிகச் சரியாக இருக்கும்.
இதைத்தான் என்னாஇப் போன்றவர்களுக்காக மஹான் தியகரஜர் சொன்னார்"சுத்தலு பெத்தலு சரிக புத்திராது" என்றார். படித்தவனாகவும்,வயதில் பெரியனாகவும் இருந்தாலும் சரியாக புத்தி வராது ராமா உன் அருள் இல்லாவிட்டால்.
செல்லி பயம் வேண்டாம் நின் தமிழுடன் விளையாடவே நாம்வந்தோம்.(திருவிளையாடல்)
உங்க self esteem ஐ ஏன் நீங்க குறைக்கணும்.:-)
self esteeமா அப்படி ஒன்னும் நம்ம
கிட்டேகிடையாதே. இருந்த மாருதி esteemயயையூம் இப்பத்தான்வித்து Santrovaமாத்தியாச்சு.
இது நல்லாருக்கே! திருவிளையாடல் வசனம்"பயம் வேண்டாம் நின் தமிழுடன் விளையாடவே நாம்வந்தோம்."
எப்பிடியோ Maruthi Esteem ஐ விட
Santro car better தானே!:-).அத்தோட அது வெளிநாட்டு - தென்கொரியா car அல்லவா, பெருமையாத்தான் இருக்குமில்லியா!
நன்றி ஐயா.
செல்லி, விளக்கத்துக்கு நன்றி.
அப்பிடியே போற போக்குல நல்லா இடிச்சுட்டே போறீங்க:-) //ஈழத்துச் சகோதரர்கள் தமிழில் அதிக ஆர்வமிக்கவர்கள்// சரி, சொல்வதும் சரிதான். தமிழ்மாதப் பெயர்கள் சரியாக எத்தனை தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தெரியும்?
//அப்பிடியே போற போக்குல நல்லா இடிச்சுட்டே போறீங்க:-)//
தமிழ் பேசுபவர்கள் என்று பாத்தா நாங்களெலாம் சகோதரங்களல்லே!
அப்பேன் நான் இடிக்கவேணும், கெ.பி.க்கு பகிடி கூடிப்போச்சு:-)
//ஈழத்துச் சகோதரர்கள் தமிழில் அதிக ஆர்வமிக்கவர்கள்//
இப்போ ஒரு உதாரணத்துக்கு சொல்லுறன் " பபாளிப் பழம் நல்ல ருசியாக்கிடக்கு" என்றால் மற்றப் பழங்களெல்லாம் ருசில்லை என்று அர்த்தமாகிவிடுமா,என்ன?
இதன் அர்த்தம் தமிழகத் தமிழ்ச் சகோதரரின் தமிழ்ப் பற்றைக் குறைப்படுத்துவதல்ல, கெ.பி:-)
Post a Comment