பிறந்தமூன்று வருடங்களுக்குள் ஒரு குழந்தையிடம் தென்படத் தொடங்கும் ஓற்ரிசம் என்ற இந்தக் குறைபாட்டிற்கு உடல்ரீதியான அறிகுறிகள்கிடையாது.ஓற்ரிசத்திற்குரிய மரபியல் காரணம் என Dr.Kanner குறிப்பிட்டுள்ளார்.ஆனால் காரணம் எதுவாயினும், பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு "ஓற்ரிஸ்ரிக்" என லேபிள்(lable) அதாவது வகைப்படுத்துவதை விரும்புவதில்லை என அம்புலேற்ரறி என்ற சஞ்சிகையில் வந்த ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட அநேகமான குழந்தைகளைப் பார்த்தால் அவர்கள்
நேருக்கு நேர் கண்வைத்து மற்றவர்களை அல்லது முன்னின்று பேசுபவர்களை பார்க்கமாட்டார்கள்,
ஏதாவது ஒரு சொல்லை அல்லது சொற்றொடரைத் சில சமயங்களில்
திரும்பத் திரும்பச் சொல்வர்,அல்லத ஏதாவது சத்தங்களையும் இப்படிச் செய்யலாம்,தலையை அல்லது கை,காலை ஆட்டி ஆட்டி வித்தியாசமான சத்தம் போடுவார்கள். சிலருக்கு ஏதாவது குறிப்பிட்ட பாடங்களில் அதீத திறமை இருக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க பலருக்கு இதன் குணாதிசயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. உதாரணமாக ஐசாக் நியூற்றன் ,சிலர் மனக் கணக்கு(கூட்டல்)நல்லாச் செய்வர். பேச்சுத்திறன் குறைவாகவோ அல்லது முழமையாக இழந்திருப்பர். சிலர் நீங்க சொன்னதை திருப்பிச் சொல்வர்,
சுற்றியிருக்கும் சடப்பொருட்களை ஆராய்வர், சில சமயங்களில் அவற்றின் அளவு, வடிவம், தன்மை பற்றி அறிவதில் ஆர்வமாயிருப்பர்.
இவர்களை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.தினமும் ஒரே மாதிரியான ஒழுங்கு முறைக்குப் பழக்கப்படுத்தினால், தமது அலுவல்களை அந்த ஒழுங்கில் செய்ய முனைவர். இதனால் ஆசிரியர் அந்த வேறுமாற்றத்தை அக் குழந்தைகளுக்கு முன்கூட்டியே திரும்பத் திரும்பச் சொல்லி அதற்குத் தயார்ப்படுத்துவர்.அந்த ஒழுங்கில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் அவர்களால் வேறுமற்றத்திற்கு ஒத்துப்போக முடிவதில்லை. உதாரணத்திற்கு,"கரன்,இண்டைக்கு உன்ர அம்மா 4 மணிக்குத்தான் வருவா. 3 மணிக்கு இண்டைக்கு வரமாட்டா" என திரும்பச் சொல்ல அக் குழந்தை அந்த மாற்றத்திற்கு தயாராகிவிடும்.
இல்லையேல்,மூர்க்கமாகிப் பக்கத்திலிருப்பவரைத் தாக்குவும் செய்வர்.சில குழந்தைகள் கையால் நிலத்தை விறாண்டுவர், சிலர் நெஞ்சில் அல்லது தலையில் ஓங்கி ஓங்கி அடிப்பர்.இக் குணமுள்ள பிள்ளைகளிடம் முற்பாதுகாப்பு (proactive) கற்பித்தல் முறகளைக் கடைப்பிடிப்பது நல்லது.
ஓற்ரிசத்தால் மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பேச்சு,அல்லது வேறு வகையில் சூழ இருப்பவரிடம் தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஓற்ரிசம் குறித்த விவரங்களைச் சிறு வயதிலேயே கண்டுபிடித்தால், அந்தக் குழந்தையின் வாழ்வில் நல்ல பயிற்சியின் மூலம் மேம்பாட்டினைஏற்படுத்தலாம்.படங்கள் மூலம் சொற்களைக் ற்பிக்கலாம்.(The pictures help develop word level vocabulary and early literacy skills. ) படங்களப் பயன்படுத்திக் கதைகள் சொல்லலாம்.சிறுவயதில் மொழி அறிவைப் புகட்ட இது உதவும் உதாரணத்துக்கு கீழுள்ள படங்களைப் பாருங்கள்.
அபிவிருத்தி அடைந்த நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவ்வாறு குறைபாடுள்ள பிள்ளைகளுக்கென "விசேட பள்ளிக்கூடங்கள்"(Special School") உண்டு். அங்கு விசேட பாடத்திட்டம் , கற்பித்தல் முறை பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களின் ஊனத்திற்கு ஏற்ப "தனிப்பட்ட கல்விதிட்டம்" (Indiviualized Education Plan -IEP) ) ஆசிரியர் எழுதிப் படிப்பிக்க வேண்டும்.
இனி, கீழுள்ள ஒலிவடிவத்தை (podcast) கேழுங்கோ.
அதில் சோமா முகபதியாய் தன் மகன் "ரிற்ரோ" வுக்கு "கெதியாச் சொல்லிக்கொடுக்கிற முறை"யைப் பற்றி ஆங்கிலத்தில் சொல்லுறா.இணைப்புக்கு
நன்றி: சிபி நியூஸ்
6 Responses to “ஓற்ரிசம் (Autism - (அல்லது ஆட்டிசம்) உள்ள பிள்ளைகளுக்கு எப்படி கற்பிப்பது?”
அருமையானத் தகவல்.
ஆட்டிசம் குறித்து மிக அருமையான தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி.
இக்குறையுள்ளோரைக் கண்டுள்ளேன். அவர்கள் பின் இவ்வளவு விபரம் இருப்பதை இப்போதே அறிந்தேன்.
தொகுப்புக்கு நன்றி
நல்லதொரு பகிர்தல். நன்றி.
புதுகைத் தென்றல், யோகன், டிஜெ
உங்க பாராட்டுக்கு நன்றி.
மற்றபதிவுகளைபடித்து மறந்துவிடலாம் ஆனால் இதை கவனப்ப்டுத்தி செயல் படுத்தும் நிலையில் ஆண்டவன் வைத்துள்ளான்
நன்றி
வணக்கம் தி.ரா.சா ஐயா
எங்கே இன்னும் காணேலையே என்று பாத்தேன்.//மற்றபதிவுகளைபடித்து மறந்துவிடலாம் ஆனால் இதை கவனப்ப்டுத்தி செயல் படுத்தும் நிலையில் ஆண்டவன் வைத்துள்ளான்// :-)))
நன்றி ஐயா.
இவைபற்றிய நிறைய என் தொழில் அனுபவங்களை எழுத ஆசை இத் துறையில் பலரும் பயனடைய பகிர்ந்து கொள்ள விருப்பம். ஆனால் நேரமின்மையாயிருக்கிறது.
Post a Comment