சுப்ப மாக்கெற்றின் (supermarket) வியாபார தந்திரம்

ஷொப்பிங் (shopping)செய்பவர்கள் "எப்படிச் சிக்கனமாக ஷொப்பிங் செய்யிறது பற்றிக் கட்டாயம் தெரிஞ்சிருக்க வேணும்.

சுப்ப மாக்கற்றில் குறிப்பிட்ட ஒரு ஒழுங்கு முறையில் பொருட்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். முக்கியமாக, சுப்பர் மாக்கற்றில எந்தெந்த பொருட்களை எந்தெந்த இடத்தில வைக்கிறதெல்லாம் வியாபார தந்திரம் தான். இது தெரியாட்டி இரண்டு லீற்றர் பால் வாங்கப் போய் கடைசியில ற்டொலி நிறையா உடனே தேவைப்படாத எல்லாம் வாங்கிக் கொண்டு வாறதாகத் தான் முடியும். அப்படிப்பட்டவர்கள் கீழே குறிப்பிடப்ப்டுகிற வாடிக்கையாளராகத் தான் இருக்க முடியும்.


" என்ன, சுப்பெர் மாக்கெற்றுக்கை பால் வாங்க போனா, உடன போய் எடுத்து வாங்க முடியுதா?. அதென்ன ரண்டு லீற்றல் பால் வாங்கிறதென்றால்.முன்வாசலில இருந்து கடை.......................சித் தொங்கலுக்குப் போகவேண்டி இருக்கு..

அந்தத் தொங்கலுக்கு போறதில கண்ணில படுறதெல்லாம் வீட்டுக்குத் தேவைபோல தெரியும், பின்ன கை சும்மா கிடக்குமா? அத்தனையையும் தூக்கி ற்ரொலி (trolley)க்கை போட்டுவிடும்.

போதாததுக்கு, பாட்டு வேற சுப்ப மாக்கற்றில போட்டு விடுறாங்கள், அதுவும் மிகவும் பிடிச்ச பாட்டுப் போச்சுதென்றால், ம்...... பாலுக்கென்ன இப்ப அவசரம் என்றமாதிரி,பாட்டையும் "ஹம்மிங்" செய்து கொண்டு,போற வழி நெடுக மலிவான விலைபோட்ட பொருளை எல்லாம் பிறகு தேவைப்படும் தானே எண்டும்; 50% தள்ளுபடியிலயும் ஒண்டு வாங்கினா இன்னெண்டு இலவசத்துக்கு மயங்கியும் உடன தேவையோ எண்டு கூட யோசிக்காமல், அதுகளையும் ஒவ்வொன்றாக எடுத்தப் போட்டு ற்டொலியை நிறையச் சாமான்களோடு " கவுண்டருக்கு" வாறதே ஒரு ஷொப்பிங்(shopping) பழக்கமாப் போயிடுச்சு..

அதுமட்டுமா, கவுண்டருக்கு பக்கதில வைச்சிருக்கிற சொக்கிலட்டில ஒண்டிரண்டும், ஃபிலிம் ரோல்,சஞ்சிகை (magazine) ஒண்டும் எடுத்துபோட்டு விடுறதால் ற்ரொலி நிரம்பிவிடும்;எக்கச் சக்கமான காசும் செலாவாகி, நேரமும் தேவையில்லாம செலவழிச்சு, கடைசியில சுப்ப மாக்கற்றுக்கு வருமானம் அதாவது உழைப்புக் குடுத்ததாகத் தான் முடிகிறது.

இதைவிட 20 சதம் கூடினாலும் பக்கத்துச் சில்லறைக் கடையில (convenience store or Milk Bar) இரண்டு லீறறர் பால் வாங்கினா சுப்பர் மாக்கற்றுக்குப் போற பெற்றோல் காசும், தேவையில்லாச் சாமான்களை வாங்கிற காசும், எவ்வளவோப மிச்சமாகும்.

இத்தோட
* ஒண்டு வாங்கினா இன்னொன்ரு இலவசம்
* தேயிலையோட சேர்த்து "கப்" cup இலவசம்
*50% மலிவு விற்பனை
* கிறிஸ்மஸ் மலிவு விற்பனை
எண்டமாதிரியான மலிவு விற்பனைகளும் பம்மாத்துகளிலும் ப வாடிக்கையாளர் ஏமாந்து போகின்றனர்.
"பொருட்களை அவசியம் தேவை என்றால் மட்டுமே வாங்குவது நல்லது"

11 Responses to “சுப்ப மாக்கெற்றின் (supermarket) வியாபார தந்திரம்”

இதைத்தான் எங்களூரில் சுண்டைக்காய் கால் பணம் சுமக்கூலி முக்காப் பனம் என்பார்கள்
தேவையில்லாமல் எதையும் வாங்ககூடாது அதுதானே உங்க முடிவு என்னுடையதும் அதுதான்

//இதைத்தான் எங்களூரில் சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்காப் பனம் என்பார்கள்//
சிலவேளை, அந்தச் சுண்டங்காய் காப் பணத்தைவிட மலிவாப் போனாலும், கட்டாயம் அந்தக் காய் தேவை எண்டாத் தான் வாங்கவேணும். தேவையில்லாட்டி அது மலிஞ்சாத் தான் என்ன மலியாட்டித்தான் என்ன என்று விடவேண்டியதான். இது நம்மோட policy, சார்.

எப்பிடி சார் சௌக்கியமா இருக்கீங்களா?

நன்றி, சார்.

eye level buy level

இது தெரிஞ்சுக்கிட்டாத் தப்பிச்சுரலாம்:-)

உண்மை பலர் சிக்கிவிடுகிறார்கள் தான்,
அடியேன் விழிப்பாக உள்ளேன்.
தேவையில்லாவிடில் வாங்குவதில்லை. அதைச் சும்மா தந்தாலும்...

முற்றிலும் உணமை. சூப்பர் மார்க்கெட் சென்றால் கண்ணை மூடிக்கொண்டு தேவையனவற்றை எடுத்துக் கொண்டு ஓடி வந்து விட வேண்டும். கடன் அட்டை தானே - பணமா கொடுக்கப் போகிறோம் என்றால் தண்டம் அழத்தான் வேண்டும். அழுகிறோம். என்ன செய்வது

துளசி

//eye level buy level.
இது தெரிஞ்சுக்கிட்டாத் தப்பிச்சுரலாம்.//
eye level ல்ல அடிக்கடி குறைச்ச விலை சுட்டியைத் தொங்க விடுவாங்க. அதுதாங்க வாடிக்கையாளரை வாங்கு.. வாங்கு எண்று சுண்டி இழுக்கும்.
அதுக்கு மயங்காம போனமா தேவையாந சாமானை வாங்கினமா வீட்டுக்கு வந்தமா என்றிருக்கணும்.

//அடியேன் விழிப்பாக உள்ளேன்.//
இப்பிடி எல்லாரும் விழிப்பா இருக்க வேணும்.ஆனா பெரும்பான்மையினர் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றாகிவிடுகிறார்களே!

நன்றி, யோகன்:-)

//கடன் அட்டை தானே - பணமா கொடுக்கப் போகிறோம் என்றால் தண்டம் அழத்தான் வேண்டும்.//

இந்த credit card இருக்கிறதும் கையில காசிருக்க தேவையில்லைங்கிறதும் மனம் போன போக்கில பொருட்களை வாங்கச் செய்யும். எதற்கும் முன் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதல்லவா!
நன்றி, சீனா :-)

நன்றாக சொல்லியுள்ளீர்கள் செல்லி. வட அமெரிக்க சந்தைப்படுத்தலின் பின்னணி இது தான். தெரிந்தோ தெரியாமலோ உலகத்தில் உட்கொள்ளப்படும் உணவு கலோரிகளில் மூன்றில் ஒரு பங்கை அமெரிக்கர்கள் உட்கொள்கிறார்களாம். இந்த சந்தைப் படுத்தலில் இன்னுமொரு முறை அங்கத்தவர்களாகி,மொத்த வியாபாரிகள் மாதிரி சாதாரண நுகர்வோர் மொத்தமாக வங்குவது. இதனால் தேவைக்கு அதிகமாகவே எல்லோரும் வாங்குகிறார்கள். இந்த பாதிக்கப்பட்ட கொள்வனவாளர்களில் நானும் ஒருவன்.

வணக்கம் காரூரன்
//இந்த பாதிக்கப்பட்ட கொள்வனவாளர்களில் நானும் ஒருவன்.//
பொதுவாக பல பேர் ஆரம்ப காலங்களில் பாதிக்கப்பட்டு பின் உண்மைநிலையை உணர்ந்தவர்கள்தான்.

காரணம் நம் நாட்டுச் சில்லறைக் கடையில வாங்கிற முறைக்கு(100g பருப்பு, 200g சர்க்கரை எண்ட மாதிரி) பழக்கப்பட்டுப் போன எங்களுக்கு இங்கை வந்ததும் சுப்ப மாக்கெற்றில எல்லாம் கண்டது ஏதோ take it for granted எண்டமாதிரி நினைப்பில கடன் அட்டையையும் குடுத்து கண்டதையும் வாங்கி அவங்களுக்கு உழைப்புக் குடுத்ததான் மிச்சம்.
திருந்தீட்டோம்ல, தப்பிச்சோம்ன்னு இருப்போம்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, காரூரன் :-)

Anonymous said...

itit