கருத்தினில் அன்பாய்,
பொருந்தியே நின்றாய்.
இருமனம் பொருந்தச்
சம்மதம் கேட்டேன்.
நாளை வருகிறேனேன்றாய்
நாளையை நிலமெங்கும்
நாளை நாளையென
நாளைவரை கிறுக்கினேன்
நிலமெல்லாம் கேட்டது
நிலம் நிறைந்தநாளை
புலர்ந்து வெகுநேரமாயும்
தலமிங்கு வரவில்லையேன்?
நெருக்கமாய்க் கோடியிலே
இருக்கிறாய் எனவறிந்தேன்.
இருக்கிறாயோவென இனிமேலுனை
ஒருக்காலும் நினையேன்.
எழுதியவர்: கணேசன்
7 Responses to “"நாளை நினையேன்" - கவிதை”
Acca
mikavum nanri.ennudaiya kavithaiyai pooddathatku. paarkka sawthoosamaay irukku.
wanri
enrum anpudan
ganeshan
கணேசன்
நீங்க பாமினி ஃபொன்ற்ரில் அனுப்பியதை சுரதா.கொம். இல் யுனிகோட்டுக்கு மாற்றிப் போட்டிருக்கிறேன்.
சுரதா.கொம்.மிற்கும் நன்றி சொல்லுங்க.
கவிதை கணேசன் மேலும் வளர வாழ்த்துக்கள். செல்லி சத்தமில்லாமல் புது எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்
அன்புள்ள பிரபா அவர்கட்கு
//கவிதை கணேசன் மேலும் வளர வாழ்த்துக்கள்.//
இன்னும் எழுத வேண்டும்போல இருக்கு.
உங்க பாராட்டுக்கு மிகவும் நன்றி.
அன்புடன்
கணேசன்
செல்லி சத்தமில்லாமல் புது எழுத்தாளர்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். வாழ்த்துக்கள்
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி, சேதுக்கரசி.
உங்களை இணைத்திருக்கிறேன் பார்க்கவும்
http://nunippul.blogspot.com/2007/03/weird.html
உசா
உங்க பதிவைப் பார்த்து பின்னூட்டமிட்டிருக்கிறேன். உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் என்றும் நன்றி.
Post a Comment