வெள்ளைக் கத்தரிக்காய்

பிறிஸ்பேனில் இந்தக் கத்தரிக்காய் அருமையாகக் கிடைக்கிறது. இது காஸ்பர் (Casper)என்ற இனமாகும்.


இந்தப் பதிவை internet Explorer இல் பாருங்கள் . வீடியோவில் பார்க்கலாம்.
Fire fox இல் வீடியோ தெரியாது; பார்க்க முடியாது.

இந்தக் கத்தரிக்காயைப் பார்க்கும்போது எனக்கு மட்டுவில் வெள்ளைக் குண்டுக் கத்தரிக்காய்தான் நினைவுக்கு வருகிறது.இந்த இனத்தை கோஸ்ற்பஸ்ரர்(Ghostbuster) எனப்படுகிறது.இந்த மட்டுவில்க் கத்தரிக்காய் கறியை பூநகரி மொட்டைக் கறுப்பன் புழுங்கலரிசிச் சோற்றுடன் திண்டால் அப்பிடி ஒரு தனி ருசி!

அனுபவம்தான் வாழ்க்கை

அடி தந்த பக்குவம்


அடி ஒன்று முதலில் விழ
அலறித் துடித்தேன்
அடி இரண்டு அடுத்து விழ
ஐயோவென்றேன் நோவினால்
அடிக்குஅடி மேலும் விழ
அழுதழுது கதறினேன்
அடி அடுத்தடுத்து கூடி விழ
ஆருமே வரவில்லை
அடி பட்ட புண்நோவால் அழுது
ஆண்டவனையும் கூப்பிட்டேன்
அடி நோவால் அடியெடுக்க முடியாமல்
அனாதையாக் கிடந்தேன்
அடி என்னை அடிக்க அடிக்க
அடி தாங்கியாகிவிட்டேன்
அடி யிப்போ இடியாக விழுந்தாலும்
அச்சமின்றி இருக்கின்றேன்
அடி தந்த பக்குவத்தை நான்
ஆரிடம்போய்ச் சொல்லுவேன்?

எழுதியவர்: செல்லி

வாழ்க்கை ஒரு போராட்டம். கவலையில்லா மனிதனில்லை. துன்பமில்லாத வாழ்க்கையில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவொருவித துன்பம். சிலரது வாழ்வில் ஆரம்ப காலத்தில் துன்பம்; ஒரு சிலருக்கு பிற்காலத்தில் துன்பம்; இன்னும் சிலருக்கு வாழ்க்கை முழுவதுமே தொடர்ந்து துன்பம்தான். துன்பம் அனுபவிக்கும்போது அந்த அனுபவத்தில் மனித மனம் பக்குவமடைகிறது. அதைத்தான் இக் கவிதை காட்டுகிறது.
_____________________________________________________________________________
நீங்களும் இந்தக் கவிதையைப் படித்து உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்
"அனுபவம்தான் வாழ்க்கை"
13 Comments - Show Original Post Collapse comments

Blogger செல்லி said...

மன்னிக்கவும்,அனுபவம் என்பதற்குப் பதிலாக அநுபவம் என்று எழுதிவிட்டேன்.

12/28/06 3:45 AM
Delete
Blogger Soorya said...

அடி கவிதை நல்லாக வந்திருக்கிறது.
நிறையு வாசிப்பதன் மூலமும் எழுதுவதின் மூலமும் மேலும் உங்கள் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முடியும்.
வாழ்த்துகள்.

12/29/06 3:39 AM
Delete
Blogger பகீ said...

வாருங்கள் செல்லி. தமிழ் பதிவுலகிற்கு.

edit post இல் சென்று மாற்றி விடுங்களேன்.

ஊரோடி பகீ

12/29/06 8:38 AM
Delete
Blogger செல்லி said...

வணக்கம் சூரியா
இந்தக் கன்னிப் பதிவுக்கு முதலில் வந்த உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி. மீண்டும் வாருங்கள்.

12/29/06 1:55 PM
Delete
Blogger செல்லி said...

வணக்கம் பகீ
இந்தக் கன்னிப் பதிவை முதன்முதலில் வரவேற்று பின்னூட்டம் அளித்திருக்கீறீர்கள். நன்றி.
ஆமாம், edit post க்குப் போய் சில பிழைகள் திருத்தியிருக்கிறேன்.ஆலோசனைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள். ஆலோசனை தாருங்கள்.

12/29/06 2:04 PM
Delete
Blogger அரை பிளேடு said...

முதல்ல பதிவு எழுத வந்து இருக்கற உங்களை வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

கவிதை அருமை. வாழ்க்கையென்றால் அடிகள் கட்டாயம் இருக்கும். அதை எப்படி நாம எதிர் கொள்ளறோம் அப்படின்றதுதான் முக்கியம்.

வெறுமனே அடங்கி அடிதாங்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுதல் தவறு. அடிகளை வெல்லும் பக்குவமே தேவை.

நிறைய எழுதுங்கள். கவிதைகள் வலியை மட்டுமன்றி வழியையும் சொல்லட்டும்.

12/29/06 3:42 PM
Delete
Anonymous செல்லி said...

உங்க பேரைச் சொல்ல நாக்கில் வெட்டு விழுகிறது, அதனால் வபிந (வலைப் பதிவு நண்பரே)என்று கூப்பிடுகிறேன்.
வபிந
நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை.அதாவாது அடி விழுந்து - துன்பத்தால்- விழுந்தாலும் உடனே எழுந்து விட வேண்டும்.துவண்டுவிடக் கூடாது.பின் வாழ்க்கையே தோற்றுவிடும்; துன்பம் எமை வென்றுவிடும்.
ஒவ்வொரு தடவையும் நீ விழும்போதும், அத்தனை வீழ்ச்சியிலிருந்தும் எப்படி நீ எழும்புகிறாய் என்பதில்த்தான்
உண்மையான் வெற்றி அடைகிறாய் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லுகிறார்.
அப்படி எத்தனை தடவை வென்றுவிட்டேன். அதனால்த்தான் வாழ்வில் என்னக்குப் பக்குவம் வந்துவிட்டது உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. மீண்டும் வாங்க.

12/29/06 6:19 PM
Delete
Blogger நான் said...

வாருங்கள்,
பதிவுலகிற்கு வந்ததற்கு வாழ்த்துக்கள்,

நல்ல கவிதை, நிறைய எழுதுங்கள், பகிர்ந்து கொள்வோம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

12/30/06 1:05 AM
Delete
Blogger செல்லி said...

வாருங்க நான். வருகைக்கு நன்றி.உங்க இன்னொரு பின்னூட்ட்த்தையும் படித்து publish பண்னினேன் ஆனா அது இங்கு வரவில்லை. புது வீடில்லையா இன்னும் நிறைய பழக வேண்டியிருக்கு.
செல்லி எங்க அம்மாவோட செல்லப் பேருங்க.
உங்கள்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

12/30/06 4:10 AM
Delete
Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நல்ல கவிதை செல்லி!
நண்பர்கள் சொன்னது போல் பழகப் பழகப் பதிவுத் தமிழ் உங்க பக்கம் வந்து விடும்!

வாழ்த்துக்கள்!

12/30/06 9:30 PM
Delete
Blogger செல்லி said...

//நண்பர்கள் சொன்னது போல் பழகப் பழகப் பதிவுத் தமிழ் உங்க பக்கம் வந்து விடும்!//
ஆமாம் , நானும் அப்படித் தான் நினைக்கிறேன்.
உங்க கருத்துக்கு மிகவும் நன்றி.

12/30/06 11:13 PM
Delete
Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

அடிமேல் அடி விழுந்தாலும் அடிமேல் அடி வைத்து வழ்க்கையில் முன்னே அடி எடுத்து வைக்கவேண்டும்.
அருமையாண கவிதை. த்ங்களுக்கு கர்னாடக சங்கீதம் பிடித்தால் என் வலைப்பதிவுக்கு வாருங்கள்

12/31/06 11:34 AM
Delete
Blogger செல்லி said...

வணக்கம் தி.ரா.ச
கருத்துகளுக்கு மிக்க ந்ன்றி

//தங்களுக்கு கர்னாடக சங்கீதம் பிடித்தால் என் வலைப்பதிவுக்கு வாருங்கள்//
நிச்சயம் வருகிறேன்

12/31/06 10:17 PM
Delete

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஆர் ஆருக்கு எல்லாம் வாழ்த்துச் சொல்லவேணும் எண்டு யோசித்துப் பாத்திட்டு ஒரு பேர்ப் பட்டியல் போட்டிருக்ககேன்
முதலில் தமிழ்மண நிர்வாகிகட்கும்
செந்தழல்ரவி *(எதிராக) சிந்தாநதி
கானாபிரபா மலைநாடான் கொழுவி
சயந்தன், வசந்தன், சிநேகிதி
கீதா,வல்லிசிம்ஹன் துளசி
மாசிலா,குமரன் ,தி.ரா.சா
துர்க்கா, மழைஷ்ரேயா தூயா
நா.கண்ணன் கண்ணபிரான்
கோவிகண்ணன் இ. கொத்தனார்
யோசிப்பவர் யோகன் பாரிஸ்
சீனா ஜீவா காரூரன் சிறில் அலெக்ஸ்
வி.ஜே. சின்னக்குட்டிவெற்றி
எஸ்.வி.சுப்பையா ஞானவெட்டி
எல்லோருக்கும் நல் தீபாவளி வாழ்த்துக்கள்!
(செந்தழல்ரவி (எதிராக) சிந்தாநதி என்பதன் விளக்கம்: செந்தழல் என்றால் நெருப்பு அதற்கெதிராக சிந்தா நதி என்றால் தண்ணி . அதனால்த்தான் (எதிராக) என்று போட்டிருக்கிறேன். மற்றபடி தப்பாக ஏதும் நினைத்து விடாதீர்கள்.)14 Comments - Show Original Post Collapse comments

Blogger பாரதிய நவீன இளவரசன் said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

11/7/07 9:35 AM
Delete
Blogger செல்லி said...

பாரதிய நவீன இளவரசன்
உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக நன்றி

11/7/07 1:42 PM
Delete
Blogger கானா பிரபா said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

11/7/07 3:22 PM
Delete
Blogger செல்லி said...

உங்க வாழ்த்துகளைப் பாடித்ததும் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி பிரபா.

உங்க குடும்பத்தினருக்கும் என் இனிய நல் தீபாவளி வாழ்த்துகள்!

11/7/07 7:43 PM
Delete
Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

அன்புத்தங்கை செல்விக்கும் அவர்தம் குடும்பத்துக்கும்இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

11/8/07 1:10 AM
Delete
Blogger செல்லி said...

வணக்கம் தி.ரா.சா சார்

என்கே வந்து வாழ்த்தாம போயிடுவீங்களோன்னு நினைச்சேன்...........
வந்து வாழ்த்திட்டீங்க அது போதும்!, ரொம்ப நன்றி, சார்.
மீண்டும்
தங்கமணி அம்மாவுக்கும் உங்களுக்கும், உங்க குடும்பதவர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

11/8/07 2:33 AM
Delete
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!
தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

11/8/07 3:42 AM
Delete
Blogger குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி செல்லி. உங்களுக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்.

11/8/07 1:52 PM
Delete
Blogger செல்லி said...

யோகன், குமரன்
உங்க வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

11/8/07 9:33 PM
Delete
Blogger நானானி said...

செல்லி!
உங்கள் லிஸ்டில் நான் இல்லை. இருந்தும் என் பதிவிற்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பதாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

11/9/07 9:54 AM
Delete
Blogger செல்லி said...

வாங்க நளாயினி, நன்றி

லிஸ்ரில இருக்கிறவங்களில் 4 -5 பேரைத்தவிர மற்றவர்கள் எஅன் பதிவுகளுக்கு முன்பு பின்னூட்டமிட்டவர்கள்
இன்னும் சிலரின் பேரையும் போட மறந்துவிட்டேன்
லிஸ்ரில இல்லாட்டி என்ன வாழ்த்திவிட்டீங்க , அது போதுமில்லியா.:-)

11/9/07 3:49 PM
Delete
Blogger வி. ஜெ. சந்திரன் said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

11/9/07 3:54 PM
Delete
Blogger cheena (சீனா) said...

அட - லிஸ்ட்லே என் பேரும் இருக்கு
செல்லி, இனிய இதயங்கலந்த தீபத் திருநாள் நல் வாழ்த்துகள். ( லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சோலுவேன்)

11/9/07 5:12 PM
Delete
Blogger செல்லி said...

வாங்க வி.ஜே, சீனா
உங்களை நன்றி மறவாம வாழ்த்தியிருக்கிறன்.

நீங்களும் பதிலுக்கு வந்து வாழ்த்திமகிழ்வித்தமைக்கு நன்றி

11/9/07 5:41 PM
Delete

கண்ணாமூச்சி ஏனடா & மீற் த பேரன்ஸ் (Meet the Parents ) ஒரு ஒப்பீடு்கண்ணாமூச்சி ஏனடா என்ற படம் மீற் த பேரன்ஸை தழுவியதாக உள்ளது.
மீற் த பேரன்ஸை Jay Roach இயக்கத்தில் Robert De Niro,Ben Stiller , Teri Polo, Blythe Danner, Nicole Dehuff, Jon Abrahams ஆகியோர் நடித்த அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படம்தான் "மீற் த பேரன்ஸ்" ( Meet the Parents)

இது 15மார்கழி 2000 த்தில் வெளிவந்தது. இரு படத்திலும் மகளின் காதல் தகப்பனின் கண்டிப்புக்கும் தாயின் தாராள மனதிற்கும் இடயில் ஊசலாடுகிறது. மேலும், மகளின் காதலனை ஏற்காமல் புறக்கணிக்கும் கண்டிப்பான தந்தை தாராள குணமிக்க தாய் போன்ற கதா பாத்திரங்கள், பெரியோர் காதல் இளையவர் காதல் என்பன இரு படத்திலுமே இடம்பெறுகின்றன. இரண்டுமே நகைச்சுவையான திரைப் படம்.

மீற் த பேரன்ஸில் கண்ணாமூச்சி ஏனடாவில்

பென் ஸ்ரில்லர்(Ben Stiller) பிருத்வி
ரொபெட் டி நிரோ (Robert De Niro) சத்தியராஜ்
ரெறி போலோ (Teri Polo) சந்தியா
ப்ளித் டனர் (Blythe Danner) ராதிகா

இப் படத்தில் மகளின் காதலனை(கிறேக்- Greg,)ஏற்றுக்கொள்ளாத கண்டிப்பான தகப்பனாக ரொபெட் டி நிரோ (Robert De Niro) குத்தல், குதர்க்கப் பேச்சுடன் பென் ஸ்ரில்லர்(Ben Stiller) ஐ வெறுத்து ஒதுக்கும் விதம் சிரிப்பில் பார்ப்போரை வயிறு குலுங்கச் செய்யும். திரைவசனங்களுக்கு ஏற்ற நகைச்சுவை நடிப்பு , வித்தியாசமான நகைச்சுவை பாத்திரத்திரங்கள் இப்படத்தின் வெற்றிக்கு பின்னணியாக இருக்கின்றன என்றால் தவறாகாதயில் த்ங்காமல், தன் வித்தியாசமான நகைச்சுவை பாத்திரத்தை உருவாக்க தன் பலத்தை பயன்படுத்தியிருக்கிறாடர் என்பது வெளிப்படைபெற்றிருக்கு. மகளின் காதல் தகப்பனின் கண்டிப்புக்கும் தாயின் தாராள மனதிற்கும் இடயில் ஊசலாடுகிறது.அதை எப்படி பெற்றாரின் காதலை வைத்து தன் டகாதலைவெற்றியாக்கும் நாயகன்.

கண்ணாமூச்சி ஏனடா
கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக சத்யராஜ் தாராள குணமிக்க அன்பு மனைவி ராதிகா. இவர்களின் மகள் சந்தியா.மலேஷியாவில் படித்துக் கொண்டிருக்கும்போது சந்தியா பிருத்விராஜை சந்திக்க நேர்கிறது. பிருத்வி சந்தியாவைக் கண்டதும் ஆரம்பத்திலேயே தன் தகப்பனைப் பத்திச் சொல்லி பயமுறுத்துறார்."எங்க அப்பாகிட்டமட்டும் நீ மாட்டினே, தோலை உரிச்சிடுவாரு", "சென்னையில ஆறுமுகம்னு கேட்டுப்பாரு"மிக கண்டிப்பானவர் என்கிறதை தெரியப்படுத்தப்படுகிறது. யாரோ ஒருத்தனோட மகளின் காதலை வெறுக்கும் அப்பா அக்காதலை ஒதுக்கபிருத்விராஜை போலீஸ் கரவுப் புத்திடயோடு புறக்கணிக்கும் ஒவ்வொரு செயலும் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறது. ஆனால் இந்த முயற்சி அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்தவுடன் தோற்றுவிடுகிறது.ஆனால் பிருத்வி தன் காதல் தோற்றாலும் காதலியின் பெற்றோரை இணைத்து வைக்க முயன்று , மாமனார் மனதில் டபிள் ஓகே ஆகிவிட்டார்- இதுதான் கதைச் சுருக்கம்.சத்டியராஜின் நக்கல் நடிப்பும், வில்லன் தன்மையும் கண்டிப்பான சுபாவமுள்ள இந்தப் பாத்திரத்திற்கு பொருந்துகிறது.. பிருத்வி சத்யராஜின் தந்திரங்களுக்கு ஈடுகொடுத்தும், யதார்த்தமான சூழ்நிலைகளில் இயல்பாகவும் நடித்துச் சிறப்பிக்கிறார். இதில் அரிவாள் வெட்டு, இரத்த களரி, ஆபாசம் ஏதுமில்லாம இருப்பது மெச்சத்தக்கது. குடும்பத்தோட சேர்ந்து பாக்கக் கூடியதாக இருக்கிறது.
படங்கள் நன்றி:
கூகிள் இமேஜ்
cinesnacks

சுப்ப மாக்கெற்றின் (supermarket) வியாபார தந்திரம்

ஷொப்பிங் (shopping)செய்பவர்கள் "எப்படிச் சிக்கனமாக ஷொப்பிங் செய்யிறது பற்றிக் கட்டாயம் தெரிஞ்சிருக்க வேணும்.

சுப்ப மாக்கற்றில் குறிப்பிட்ட ஒரு ஒழுங்கு முறையில் பொருட்களை அடுக்கி வைத்திருக்கிறார்கள். முக்கியமாக, சுப்பர் மாக்கற்றில எந்தெந்த பொருட்களை எந்தெந்த இடத்தில வைக்கிறதெல்லாம் வியாபார தந்திரம் தான். இது தெரியாட்டி இரண்டு லீற்றர் பால் வாங்கப் போய் கடைசியில ற்டொலி நிறையா உடனே தேவைப்படாத எல்லாம் வாங்கிக் கொண்டு வாறதாகத் தான் முடியும். அப்படிப்பட்டவர்கள் கீழே குறிப்பிடப்ப்டுகிற வாடிக்கையாளராகத் தான் இருக்க முடியும்.


" என்ன, சுப்பெர் மாக்கெற்றுக்கை பால் வாங்க போனா, உடன போய் எடுத்து வாங்க முடியுதா?. அதென்ன ரண்டு லீற்றல் பால் வாங்கிறதென்றால்.முன்வாசலில இருந்து கடை.......................சித் தொங்கலுக்குப் போகவேண்டி இருக்கு..

அந்தத் தொங்கலுக்கு போறதில கண்ணில படுறதெல்லாம் வீட்டுக்குத் தேவைபோல தெரியும், பின்ன கை சும்மா கிடக்குமா? அத்தனையையும் தூக்கி ற்ரொலி (trolley)க்கை போட்டுவிடும்.

போதாததுக்கு, பாட்டு வேற சுப்ப மாக்கற்றில போட்டு விடுறாங்கள், அதுவும் மிகவும் பிடிச்ச பாட்டுப் போச்சுதென்றால், ம்...... பாலுக்கென்ன இப்ப அவசரம் என்றமாதிரி,பாட்டையும் "ஹம்மிங்" செய்து கொண்டு,போற வழி நெடுக மலிவான விலைபோட்ட பொருளை எல்லாம் பிறகு தேவைப்படும் தானே எண்டும்; 50% தள்ளுபடியிலயும் ஒண்டு வாங்கினா இன்னெண்டு இலவசத்துக்கு மயங்கியும் உடன தேவையோ எண்டு கூட யோசிக்காமல், அதுகளையும் ஒவ்வொன்றாக எடுத்தப் போட்டு ற்டொலியை நிறையச் சாமான்களோடு " கவுண்டருக்கு" வாறதே ஒரு ஷொப்பிங்(shopping) பழக்கமாப் போயிடுச்சு..

அதுமட்டுமா, கவுண்டருக்கு பக்கதில வைச்சிருக்கிற சொக்கிலட்டில ஒண்டிரண்டும், ஃபிலிம் ரோல்,சஞ்சிகை (magazine) ஒண்டும் எடுத்துபோட்டு விடுறதால் ற்ரொலி நிரம்பிவிடும்;எக்கச் சக்கமான காசும் செலாவாகி, நேரமும் தேவையில்லாம செலவழிச்சு, கடைசியில சுப்ப மாக்கற்றுக்கு வருமானம் அதாவது உழைப்புக் குடுத்ததாகத் தான் முடிகிறது.

இதைவிட 20 சதம் கூடினாலும் பக்கத்துச் சில்லறைக் கடையில (convenience store or Milk Bar) இரண்டு லீறறர் பால் வாங்கினா சுப்பர் மாக்கற்றுக்குப் போற பெற்றோல் காசும், தேவையில்லாச் சாமான்களை வாங்கிற காசும், எவ்வளவோப மிச்சமாகும்.

இத்தோட
* ஒண்டு வாங்கினா இன்னொன்ரு இலவசம்
* தேயிலையோட சேர்த்து "கப்" cup இலவசம்
*50% மலிவு விற்பனை
* கிறிஸ்மஸ் மலிவு விற்பனை
எண்டமாதிரியான மலிவு விற்பனைகளும் பம்மாத்துகளிலும் ப வாடிக்கையாளர் ஏமாந்து போகின்றனர்.
"பொருட்களை அவசியம் தேவை என்றால் மட்டுமே வாங்குவது நல்லது"

விளையாட்டு ரசிகர்களுக்காக ....உதைபந்தாட்டம் . பார்த்துச் சிரிங்க

அநேகமானவர்களுக்கு ஐரோப்பிய உதைபந்தாட்டம் பார்க்கப் பிடிக்கும். இந்த வீடியோவைப் பாருங்க சிரிக்காம இருக்கமுடியாது.(ballet) பலே நடனம், ஒப்ரா(opera) music இவற்றுடன் இன்னும் பல இருக்கு சிரிக்கநன்றி: phunk.dk

நவராத்திரி அனுபவம்

நவராத்திரி விழா
சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் முக்கியமானது. நவராத்திரி சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரியும் (நவம் என்பது ஒன்பது)இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த ஒன்பது நாளும் விரமிருந்து கொண்டாடுர். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது இந்த நவராத்திரி விழா.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.அதற்கடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. பத்தாம் நாளான விஐய தசமி அன்று புதிய வித்தைகள், கலை,கல்வி கற்பதைத் தொடங்குவார்கள்.

வீட்டில், பள்ளிக்கூடத்தில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரியைத் தவிர வேறு விரத விழாவும் இல்லை என்றே சொல்லலாம்.யாழ்ப்பாணத்தில் நாம் இதனைக் கொண்டாடும்போது தமிழ்நாட்டில் நடப்பது போன்று கொலு எதுவும் வைப்பதில்லை.முதல் நாளன்று தலை வாழை இலை ஒன்றின் மேல் மண்ணை ஈரமாக்கி நவதானியங்களைக் கலந்து, அந்த மண்ணின் மேல் கும்பத்தை வைத்துக் கொள்வோம்.அந்தக் கும்பத்திற்கு சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்வோம்.அந்த வாழை இலையில் வெற்றிலை பாக்கு வாழைப் பழம் பத்து நாளும் புதிதாக வைப்போம். ஒவ்வொரு நாள் இரவும் சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல்,அவல், சுண்டல், பழங்கள் இவற்றில் ஏதாவது பிரசாதமாக படைத்து, குடுபத்தவர் ஒன்றுகூடி, பசனைகள் பாடி சக்தியை வழிபடுவோம்.

படிக்கின்ற மாணவர்கள் கட்டாயமாக விரதமிருந்து நவராத்திரி வழிபாட்டைச் செய்வேண்டும் என்பது பரவலான எதிர்பார்ப்பாகும்.ஒன்பதாம் நாள் வீட்டுக்கு கடைசி நாள்.பள்ளிக்கூடத்தில் படிக்கிற புத்தகங்கள் எல்லாம் கும்பத்திற்கு முன்னாலே வைப்போம். அதனால் நிறையப் பிரசாதங்கள் செய்து படைப்போம். பின் அவற்றை அண்டை அயலவருக்கும் கொடுத்து உண்பதிலும் ஒரு தனி இன்பமே.இவற்றில் அவல்,சுண்டல்க்கடலை இவற்றுக்குத் தான் பலரும் ஆசைப்படுவர். ஏனென்றால் இவை இரண்டையும் யாழ்ப்பணத்தில் நவராத்திரி நாட்களித்தான் காணலம்.
பத்தாம் நாள் வீட்டில் வழிபட்டபின் அந்த நவதானிய முளைகளைப் பிடுங்கி புத்தகங்களில் வைப்போம். கல்வி நிறைய வருமாம் என்று ஒரு நம்பிக்கை. ஒவ்வொரு வருட நவராத்திரியும் எனக்கு அந்தக் காலத்தில் நாம் வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும் எப்படியெல்லாம் குதூகலமாக கொண்டாடினோம் என்பதை நினைவு படுத்தும்.அங்கு அப்போதெல்லாம் பலரிடம்ஆன்மீக அனுபவத்தைக் காட்டிலும் ஒரு வித கொண்டாட்டக் களிப்புத் தான் அதிகம் மேலோங்கி இருந்தது என்பது என் கருத்தாகும். இந்த அனுபவம் வீட்டுக்கு வீடு வேறுபடக் கூடும்.

பள்ளிக்கூடத்தில் ஒரு மண்டபத்தில் மேசை ஒன்றின் மேல் கும்பத்தை வைத்து,ஒன்பது நாளும் காலை எல்லா வகுப்பினரும் ஒன்றுகூடி பசனைகள் பாடித் துதிப்போம்.ஒன்பதாம் நாள் பசனைகள் முடிந்ததும் பாட்டு, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.கடைசி நாளான விசயதசமி அன்றுதான் பிரசாதங்கள் நிறையச் செய்து படைக்கப்படும்.பன்னிரண்டாம் வகுப்பு மணவர்கள்தான் இதற்கான ஒழுங்குகளை சில ஆசிரியர்களின் உதவியுடன் செய்வார்கள். இந்தப் பத்து நாளும் திரும்மத்திரும்ப சலகலாவல்லி மாலையைப் பாடிப்பாடி அது மனப்பாடமாகவெ வந்துவிடும்.

வீட்டில் இந்த விழா கொண்டாடப்படுமபோது வீடு கோயிலைப் போல களை கட்டிவிடும் என்று கூட சொல்லாம்.

அனோனிகளின் அநியாயம், ஆனால் எனக்கது உற்சாகம்

இன்று நான் இட்ட் பதிவுக்கு மோசமான அனானியின் பின்னூட்டங் காரணமாக அப் பதிவை delete செய்திருக்கிறேன் என்பதை அன்போடு அதற்க்குப் பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்
பெண் பதிவர்களை இவர்களுக்குப் பிடிக்காதோ?
இதற்காக பதிவே இனிப் போடமாட்டேன் என்று மட்டும் அனோனிகளே எண்ணவேண்டாம். உங்களின் கீழ்த்தரமான செயல் மேலும் மேலும் என்னை எழுதத் தூண்டுகிறது என்பதையும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒரு விதத்தில் பார்த்தால் என்னை உற்சாகப் படுத்திவிட்டீர்கள் என்றே சொல்வேன். அதற்கு மிக நன்றி

"என்னிரத்தம்" கவிதை

பாட்டனைப் பார்க்கவே
பேரனும் பிற
நாட்டிலிருந்தே வந்தான்.
பார்க்கப் பரவசந் தரும்
பிஞ்சு முகம்.
கேட்கப் புளகாங்கிதம்
மழலைத் தமிழ்.

வீட்டில் வேலைசெய்ய
வந்து நிற்பான்
தானும் கூடவே.
தன்பாடும் தானுமாய்
இருந்த எனக்கு
தெரியுமாம் என்றான்
எல்லாந் தனக்கு.

வெட்டவேதும் என்றுபோனா
கத்தி கவனம், தாத்தா!
குனிந்தேதும் எடுக்கப்போனா
நாரி கவனம், தாத்தா!
சாப்பிடவென்று கையைவச்சா
கொட்டிண்டும் கவனம்,தாத்தா!
கைகழுவும் போதுகூட
சட்டை கவனம், தாத்தா!

அப்பனுக்குப் பாடஞ்சொன்னான்
அந்தச் சுவாமியப்பன்
அப்பனின் அப்பனெனக்கே
பாடஞ்சொல்லுஞ் சுப்பனாரிவன்?
என்னிரத்தம் அவனப்பனில்,
அவனிரத்தம் சுட்டிப்பயலிலெனில்,
என்கிறுக்கு இவனுக்கெனில்,
என்னிரத்தந்தானே இவனும்!.

விவசாயி - கவிதை

துயரற்ற விவசாயி்
தோட்டத்தில்,வயலில்
தொழில்தான் மூச்சு.

வெயில் தின்றமுகமும்,
கையில் வறண்டதோலும்,
தோற்றம் கவர்வதில்லை,
நோக்கம் அதுவுமில்லை.
நோய்க்குப் பயமுமில்லை,
நோய்க்குப் பயமவனிடமோ?

சுறுசுறுப்பிற் சூறாவளி
தலையின்பார மூட்டையால்
நெருநெருக்கும் கழுத்துள்ளே
முதுகில் மூட்டைச்சுமையில்
அடிக்கடி இளைக்கும்மூச்சிலே.
சோர்வில்லாத முழுமூச்சோடு
செய்துமுடிப்பதே பழக்கம்.

எடைகூடல், இடுப்புவலி
எலும்புருக்கி, புற்றுநோய்
நாரிப்பிடிப்பு, தோள்வலி,
மூட்டுவலி, முதுகுவலி
முழங்கால் கணுக்கால்வலி
தலையிடி தடிமன்காய்ச்சலென்று
தரையிலுங் கிடந்ததில்லை;
இருதயமும் இரும்புபோல
இதிலென்ன இரத்தழுத்தம்.

விவரமான விவசாயி
வேதனைகள் அவனுக்கில்லை
செய்தொழிலே அவன்மூச்சு!

எழுதியவர்: செல்லி

ஹைக்கூ

நிறைந்த பானையில்
கூரையினூடாய் வந்த
கனத்த மழை.

கதைத்ததைக் கணப்பொழுதில்
திரிச்சுச்சொன்ன
தொலைபேசி.

சேவைப் போர்வையில்
கூட்டாய்க் கூத்தடிக்கும
குழுவரசியல்.
(அன்பான தமிழ்மண நண்பர்களே,இது இங்கு யாரையும் தாக்குவதாக எழுதப்படவில்லை என்பதை அன்போடும் தாழ்மையோடும் அறியத் தருகிறேன்.இது நான் தற்போது வாழும் சமூகத்திற் கண்ட அனுபவம்.)

பாமரன் பசியில்
வாக்குச் சுரண்டக் கூரிய
ஆயுதம் அரிசி.

இது ஒரு புது முயற்சி ஆகையால் பிழை இருப்பின் அன்புடன் அறியத் தாருங்கள்.

பழச் சாறு சிறுவரின் எடை அதிகரிப்பைக் கூட்டுகிறதா?

பழச் சாறுகள்(fruit juice).பழ ரசங்கள்(Cordial) இயற்கையானவை; வைற்றமின்கள் உள்ளவை; ஆரோக்கியமானவை என நம்ப வைப்பது மிகவும் இலகுவானது. ஆனால் அவற்றில் இருக்கும் உடற் கொழுப்பைக் கூட்டக் கூடிய அளவுக்கு அதிகமான சீனியை அதாவது இனிப்புத்தன்மையை யாரும் பெரிதுபடுத்துவதில்லை பழச்சாறு, இவற்றை அதிகளவு அருந்தும் பிள்ளைகளுக்கு பசி இன்மை, வயிற்றோட்டம், பற்சூத்தை, எடை அதிகரிப்பு, போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.(1)
விக்டொரியா மாநிலத்திலுள்ள் டேக்கின் பல்கலைக் கழக(Deakin University) ஆய்வு (2)ஒன்று் குறிப்பிடுவது யாதெனில், பழச் சாறு உடற் கொழுப்பினால் ஏற்படும் ஆபத்தை இரணடு மடங்கு ஆக்குகிறது;தினமும் பழச் சாறும், மென் பானங்களும் அருந்தும் ஆரம்பப் பாடசாலை சி்றுவர்கள் எடை அதிகரிப்பு ஏற்படும் நிலையில் இருக்கிறார்கள்; பிள்ளைகளின் உடற் கொழுப்பை அதிகரிப்பில் பழச் சாறும் ஏனைய பழ ரசங்கள் (கோடியல்) உட்பட பெருப் பிரச்சனைகளாக உள்ளன என்பதுவுமாகும்.(2)

இந்த ஆய்வுக்கு 2200 விக்ரோரிய சிறுவர்களைக் உட்படுத்தப்பட்டனர்.ஒருதடவைக் கணிப்பீட்டில் 75% மான சிறுவர் ஒரு கிளாஸ் பழச்சாறு அருந்துகிறார்கள்; 25% மானவர் 3 கிளாஸ் குடிக்கிறார்கள் எனவும், அதேவேளை16% மானவர்தான் மென் பாங்களை அருந்துவதாகவும் அறியப்பட்டுள்ளது. சிறுவரைப் (12 வயதிற்குட்பட்ட)பொறுத்தவரை பழச் சாறுகள் தான்பிரச்சனையேதவிர, மென்பானங்கள் உண்மையில் பிரச்சனையில்லை இந்த ஆய்வ எழுதிய அன்றீயா சனிகோஸ்கி சொல்லுகிறார் (2).

பழச் சாறு, பழ ரசங்கள் போன்றவற்றில் வைற்றமின்கள் இருப்பினும், அவற்றில் உள்ள அதிகளவு சீனி கொழுப்பாக மாறி சிறுவரின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கிறது என்பதுதான் அப்பட்டமான உண்மை.அதனால் இவற்றுக்குப் பதிலாக பழங்களையும் தண்ணீரைம் பயன்படுத்தமுடியும் என இந்த ஆய்வு பரிந்துரை செய்கிறது.
மேலும், இயற்கையானவையோ, செயற்கையானவையோ இந்த சீனித்தன்மையுள்ள பானங்கள் சிறுவரின் பற்களையும் பாதிப்பதுடன்,அவர்களின் எடை அதிகரிப்புக்கும் காரணமாவதால்,உண்மையில் பிள்ளைகட்கு பழரசம் அல்லது பழச் சாறு தேவைதானா என்று பெற்றார் யோசிக்க வேண்டுமாம்.
மறுபுறத்தில், அவுஸ்திரேலிய பழச் சாறு சங்கம் (Australian Fruit Juice Association)இதற்கு எதிரான தமக்குச் சாதகமான கருத்து மிகவும் சுவாரஸ்சியமானது.
அவுஸ்திரேலிய பழச் சாறு சங்கம் பல்லுக்கு ஆபத்து தரும் (பழச் சாறு தவிர்ந்த) காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:
அடிக்கடி நொறுக்குத்தீனி (snack)கொறிப்பதும்,
பாற்பொருள் உணவு(cheese,yoghurt) உண்ணாமையும்,
புளோரை பற்பசை பாவிக்காததும்,
பழச் சாற்றை குடிச்சு பிள்ளையள் நித்திரை கொள்வதும்
புளோரைட் தண்ணி இல்லாத சமூகத்தில் வாழுவதும் காரணமே தவிர என
அறிவிக்கிறது.
ஆகவே, பழச் சாறுதானே என்று எடுத்த எடுப்பிலேயே பிள்ளைக்கு நல்லது; எவ்வளவும் பிள்ளை அருந்தலாம் எனத் தப்பாக விளங்கிக் கொள்ளக் கூடாது.பதிலாக பிள்ளைகள் பழங்கள் சாப்பிட ஊக்குவிக்கலாம்.நீர் அருந்தும் பழக்கத்தையும் சிறுவயதிலிருந்தே பழக்குவதும் பிள்ளைகளின் நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல எதிர்கால ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகும்.
உசாத் துணை:
1.Water, milk, juice and soft drinks y Raising Children Network (Article)
2. The Age, Chantal Rumble (News paper)
__________________________________________________________________________________________-

கேட்டு மகிழ -12 காண ஆயிரம் கண் வேண்டும் -

சிட்னி முருகனுக்காக இந்தப் பாடற் பதிவு. பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் அழகான அலங்காரத்துடன் தேர்க்கோலம் பூண்ட சிட்னி முருகன் அழகைக் காண ஆயிரம் கண் வேண்டும்.

இப் பாடலின் சரணத்தில் முருகனின் நாமங்களை நித்யசிறீ பாடும் அழகே தனி!இந்தப் பாடல் நித்யசிறீயின் குரலிலே கேட்கக் கேட்க தெவிட்டாதது.நீங்களும் கேட்டுப்பாருங்கள்.
ராகம்: பீம்பிளாஸ்,
தாளம்: ஆதி,
பாடல்: அருளவன்

நித்யசிறீ பாடியதைக் கேட்க

வீடியோவில் பார்க்க இதோ..இதையும் கேளுங்க


சந்தணமும் ஜவ்வாதும் சேர்ந்து மணங்கமழ
பாலபிஷேகமுடன் வெற்றித் திருநீறணிந்து
தங்க ரதத் தேரினிலே பக்தர்படை சூழ்ந்துவர
வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் -முருகா..முருகா
வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் -உன்னழகை

காண ஆயிரம் கண் வேண்டும் உன்னைக்
காண ஆயிரம் கண் வேண்டும் முருகனைக்
காண ஆயிரம் கண் வேண்டும் முருகனைக்
காண கண் ஆயிரம் வேண்டும்

உலகளந்த வல்லவனை வண்ணமயில் வாகனனை
கணபதி சோதரனை தந்தை சுவாமி ஆனவனை (காண)

செங்கதிரும் முழுமதியும் சேர்ந்தணிந்த சுந்தரனை
விண்ணகமும் மண்ணகமும் காத்து நிற்கும் அருளகனை(காண)
முருகனைக் காண குமரனைக் காண
கந்தனைக் காண வேலனைக் காண
குகனைக் காண கடம்பனைக் காண
ஆறு முகனைக் காண சரவணனைக் காண
சிவகுமரனைக் காண கார்த்திகேயனக் காண
சண்முகனைக் காண அழகனைக் காண
பாலனைக் காண மயில்வாகனனைக் காண
அழகனைக் காண வேலனைக் காண
பழனி வேலனைக் காண முருகா..முருகா


கே.ஜே.யேசுதாஸ் பாடியதைக் கேட்க.


நன்றி,படம்:sydneymurugan.org.au
______________________________________________________________________________________

குயின்ஸ்லாந்தில் என்ன இருக்கு? 13.2.07

குயின்ஸ்லாந்தில் பார்க்க நிறையவே இருக்கு.

உலகிலேயே பெரிய இஞ்சித் தொழிற்சாலை, "ஒரு பெரிய அன்னாசிப்பழம்"(The Big Pineapple)என்ற அன்னாசிப் பெருந்தோட்டச் செய்கை,


கோல்ட் கோஸ்ற் என்ற கடற்கரையும். வேடிக்கைப் பூங்காக்கள், இன்னும் நிறைய இருக்கு.

பிறகு வந்து படங்களோட எழுதுகிறேன்.
இப்போதைக்கு இது என் அறிமுகம்.

செல்லி

குயின்ஸ்லாந்து மாநிலம் பகுதி 2 - 16.2.07

குயின்ஸ்லாந்தின் பொருளாதாரம்

.2005ம் ஆண்டு புட்டாதி முடிவில் மாநில பொருளாதார வளர்ச்சி வீதம் 4 சதவீதமாக இருந்தது. இது 2006/07 ம் நிதிஆண்டில் 4.25சதவீதமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.(5). .

குயின்ஸ்லாந்தின ஆரம்ப கைத்தொழிற் துறைக்குள் கரும்புச் செய்கை, சுரங்கத்தொழில்,மீன்பிடித் தொழில்,விவசயம்,காட்டுத் தொழில்,தண்ணீர் முகாமை, சுற்றுப்புற முகாமை என்பன அடங்குகின்றன.(9) அண்மைக் காலங்களில் குயின்ஸ்லாந்தின் சுற்றுலாத்துறையிலும், சுரங்கத் தொழிலிலும் அதிக முன்னேற்றத்தைக் அடைந்து வருகிறது. இதில் நிலக்கரி முக்கிய இடத்தைப் பெறுகிறது.. இங்குள்ள நிலக்கரிச் சுரங்கங்களை கீழுள்ள படத்தில் காணலாம்.

குயின்ஸ்லாந்தின் வர்த்தக ஏற்றுமதி வருமானங்களில் 35 சதவீதத்துக்கு மேலாக நிலக்கரி மூலம் கிடைக்கிறது.(6) ஜப்பான், தென் கொரியா, சீனா, இந்தியா, தைவான், நெதர்லாந்து போன்ற நடுகள் அதிக அளவில் குயின்ஸ்லாந்தின் நிலக்கரியை இறக்குமதி செய்யும் நாடுகளாகும்.(7) ஜப்பான், தென் கொரியாவைத் தொடர்ந்து இந்தியா குயின்ஸ்லாந்தின் நிலக்கரி இறக்குமதியில் 2005ம் ஆண்டில் மூன்றாவது இடத்தில் இருந்தது.(6) மொத்த கனிப்பொருள் ஏற்றுமதியில் நிலக்கரி்(Coal) ஒரு தசாப்தத்திற்கு மேலாக 68.1 சதவீதத்திலிருந்து 65.1 சதவீத அளவுக்கு இருந்தது.(8)

மேலும்,நிலக்கரியில் மட்டும் தங்கியிராமல், 2005 இல் ரஷியா, சிங்கப்பூர் ஆகியநாடுகளுக்கு உணவுப் பொருட்கள், கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள்,யந்திரங்கள், போக்குவரத்து சாதனங்கள் என்பன ஏற்றுமதி செய்து செய்யப்பட்டன. மொத்த ஏற்றுமதியில் இது மூன்றில் இரண்டு மடங்காகும்.(6) குயின்ஸ்லாநதின் நிலக்கரி,உலோகத் தாதுகள்,இரும்பு அல்லாத உலோகங்கள், இறைச்சி, சீனி என்பற்றின் ஏற்றுமதி மொத்த வர்த்தக ஏற்றுமதி வருமானத்தில் 70 சவீதத்தை வழங்குகிறது.(6)

சுற்றுலாத் துறை

சுற்றுலாப் பிரயாணிகளைக் கவரும் இடங்களில் குயின்ஸலாந்தின் நாட்டுப்புறம் (Outback ) ஒன்று. அதாவது கிராமப் புறம். இது பல இயைற்கையான, பாரம்பரிய, கலாச்சார, பூர்வீகக் குடிகளைப் பற்றிய கவரக்கூடிய இடங்களைக் கொண்டதாகும். இது ஒரு விசாலமான பரந்த பிரதேசமாகும். மேற்கு குயின்ஸலாந்தில் 832,000 சதுர கி.மீ. ஐக் கொண்டதாகவும் நாட்டுப் புறம் இருக்கிறது.(10) இத்தகைய பழம்பெரும் நிலத்தொற்றத்தில் அவுஸ்திரேலிய பாரம்பரியங்களும், மரபுகளும்,புதைந்து கிடக்கும் புராதன காலத்து மிருகம் அல்லது தாவரங்களின் மிஞ்சிய பதிகளின் வரலாறுகளும், வண்ணவண்ண நிறமுடைய செடிகளைக் கொண்ண்ட புதர்களும்(Bush )அல்லது பற்றைகளும் காணமுடியும்.(10) அநேகமான எல்லா சுற்றுலா இடங்களையும் படத்தில் காணலாம். இவை ஒவொன்றையும் பற்றி அறிய (12) இங்கே சொடுக்கவும்.

உலகெங்கும் உள்ள மக்களை மட்டுமல்ல ஏனைய மாநிலத்தவரையும் கவரக்கூடிய களிப்பூட்டும் பூங்காக்கள் (Theme Parks) குயின்ஸ்லாந்தித்தான் உள்ளன. கோல்ட் கோஸ்ற் (Gold Coast) எனுமிடத்தில் அவை

கனவு உலகம் ட்றீம் வேல்ட் (Dream World)

பட உலகம் மூவி வேல்ட் (Movie World)

கடல் உலகம் சீ வேல்ட் (Sea World)

ஈரமும் இயற்கையும் = நீர்ப் பூங்கா வெற் அன்ட் வலிட் (Wet'n Wild)

வெண்தண்ணீர் உலகம் =இதுவும் ஒரு நீர்ப் பூங்கா வைர் நடெர் வேல்ட் (White Water World) என்பனவாகும்

இவை தவிர,

குரும்பின் வனவிலங்கு சரணாலயம் ( Currumbin Wildlife Sanctuary )

அவுஸ்ரேலியா மிருகக் காட்சிச் சாலை ( Australia Zoo ) என்பனவும் காணாலாம்

குயின்ஸ்லாந்தில் சுற்றுலா பயணிகளுக்கு பவித தங்குமிட வசதிகள் வேறுபட்ட கட்டணங்களில் பெறமுடியும்

கொட்டல்கள், லொட்ஜ், கரவன் பாக் இருப்பிடங்கள், வீடுகள், பண்ணை வீடுகள் என்பவற்றைக் குற்ப்பிடலாம்

அவுஸ்ரேலியாவின் பதினொரு உலக பாரம்பரிய சின்னங்கள் உள்ள தலங்களில் ஐந்து தலங்கள் இங்குதான் உள்ளன. ஆதுவும் அவற்றில் சில அருகருகேயும் உள்ளன. அடர்த்தியான மழைக்காடும்,(Rainforest) பெரிய பாறைத்தொடரையும்(Great Barrier Reef) உதாரணமாகக் குறிப்பிடலாம்.

இங்கு ராசரி வெப்பநிலை 25.2C(77.3F) க்கும் 15.7C(60.2F)க்குமிடையில்த்தான் இருக்கும். னி பெய்வது எப்பவாவது அருமையாகத்தான் நிகழும். கடற்கரை ஓரங்களில் குளிர்த் தென்றலை அனுபவிக்கலாம்.

த்திய கோட்டுக்கு அண்மித்த இடங்களில் அதாவது கெயின்ஸ்சில்(Cains) சூடாந்து ஈரப்பதன் கூடியதுமான காலநிலை இருக்கும்

நாட்டுப்புறங்களில்(outback) அதாவது கரையிலிருந்து மிகவும் உள்ளே இருக்கிம் இடங்களில் கூடிய வெப்பமும் ஈரப்பதன் குறைந்தும் இருக்கும். லைப் பகுதிகள் கரைப் பகுதிகளைவிட குளிராக இருக்கும். உதாரணமாக மலைப் பகுதியில் உள்ள ரூவூம்பா -Toowoomba என்னும் இடத்தை ஈழத்தில் நுவரெலியாபோல எனவும், இந்தியாவில் கோடைகானல் போல எனவும் கருதுவர்.

அவுஸ்திரேலியா தென்துருவத்தில் இருப்பதால், இதன் பருவங்கள் வடதுருவ பருவகாலங்களைவிட வேறுபட்டிருக்கும். னவெ இங்கு வருவதற்கு மூட்டை முடிச்சுகளைக் கட்டு முன் குளிர் உடுப்புகள் வைக்கிறதா இல்லையா என்பதை இங்குள்ள கலநிலையை அறிந்து செயற்படுவது நன்மைபயக்கும்.
இனி இங்குள்ள
நான்கு பருவகாலங்களையும் நோக்கலாம்.

இலை துளிர் காலம்(Spring), புரட்டாதி-கார்த்திகை

பகலில் ஓரளவு வெப்பமும் சோரிய ஒளியும் கூடவே இருக்கும்.அத்துடன் மெல்லிய குளிர் காற்றும் இருக்கும். ஈரவும் மிக மெல்லிய குளிராக இருக்கும்.

கோடை காலம் (Summer)மார்கழி- மாசி

கோடையில் கரையோரப் பகுதிகளில் குளிர்த் தென்றலை அனுபவிக்கலாம்.

உள்நோக்கிய இடங்களில் வெப்பம் கூடுதலாகவும் ஈரப் பதன் குறைவாகவும் இருக்கும்

இலையுதிர் காலம்(Autumn) பங்குனி-வைகாசி

இக் காலத்தில் மெல்லிய குளிர் பகலும், இரவும் இருக்கும். இருப்பினும் கோடையின் சிறிதளவு வெப்பமும் அனுபவிக்கலாம்

பனிக் காலம்(Winter) ஆனி ஆவணி

இக் காலதில் பகற்பொழுது சூரிய ஒளிடனான மெல்லிய சூடாகவும், இராப் பொழுது குளிராகவும் இருக்கும்

குயின்ஸ்லாந்து காலநிலை முன் அறிவிப்பைக்(11) காண இங்கே சொடுக்கவும்

குயின்ஸ்லாந்தின் அடையாளச் சின்னம் கியூ ஒன்று Q1 கட்டிடம்
உலகிலேயே மிக உயர்ந்த வதிவிட கட்டிடச் சிகரம்(Residential Building Tower) "கியூ ஒன்று" கோல்ட் கோஸ்ற் (Gold Cost)எனும் இடத்தில் இருக்கிறது. இதனை படத்தில் காணலாம். அவுஸ்ரேலிய கடற்கரையில் இந்த சிகரத்தில்மட்டுந்தான் அவதானிப்பு தளம் இருக்கிறது.

இப் புகைப் படம் மிகவும் அருமையான படமாகும்.அத்துடன் பலராலும் புகழப்பட்ட ஒன்றாகும்.மேலும் Q1 பற்றிய படங்களைக் காண இங்கே சொடுக்கவும.


உசாத்துணை வலைப் பக்கங்கள்:

5 http://www.budget.qld.gov.au/budget-papers/docs/highlights_15_2006-07.pdf

6 http://www.sd.qld.gov.au/dsdweb/v3/documents/objdirctrled/nonsecure/pdf/16870.pdf

7. http://www.gc3.cqu.edu.au/modern-world/index.php

8 http://www.sd.qld.gov.au/dsdweb/v3/guis/templates/content/gui_cue_cntnhtml.cfm?id=47711

9 http://www.qld.gov.au/business_and_industry/primary_industries/index.html

10 http://www.tq.com.au/destinations/outback/outback_home.cfm#

11 http://www.bom.gov.au/weather/qld/qld-forecast-map.shtml
12
http://www.tq.com.au/destinations/index.cfm


குயின்ஸ்லாந்து மாநிலம் 14.2.07

குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியாவின் வடகிழக்கு மூலயில் இருக்கிறது. இது மேற்கே நோதேண் ரெறிற்ரறியையும் (Northern Territory), தென்மேற்கே தென்அவுஸ்திரேலியாவையும், தெற்கே நியூசவுத் வேலையும், கிழக்கே பசுபிக் சமுத்திரத்தையும், கோறல் கடலையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.(2) இதன் கடற்கரையின் பெரும்பகுதி "பெரிய தடுப்பு பாறைத்தொடரை" (Great Barrier Reef. ) கொண்டிடுக்கிறது.உலக பாரம்பரிய தலங்களில் இதுவும் ஒன்றாகும். சுற்றிலாப் பிரயாணிகளைக் கவரும் முக்கிய இடங்களில் இது பிரதான இடத்தைப் பெறுகிறது.
குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியாவில் எங்கே இருக்கிறது என்பதை தெளிவாக படத்தில்(3) காணலாம். இது அவுஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாநிலமாகும்.இதன் நிலப்பரப்பு 1,852,642 சதுர கி.மீ(கிட்டத்தட்ட1.8மில்லியன் சதுர கி.மீ)ஆகும்.குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியாவின் மொத்த நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 1/3 பங்கை உள்ளடக்குகிறது எனலாம். இந்த நிலப்பரப்பு அளவு அமெரிக்க ரெக்ஸாஸ் மாநிலத்தின் இரண்டரை மடங்கு அளவைக் கொண்டதாகும்.இம் மாநிலப் பெரும்பகுதி பூமியின் மத்தியகோட்டுப் பகுதியைச் சார்ந்ததாக உள்ளது.
வரலாறு
ஐரோப்பியர் வருகைக்கு முன்னர் பூர்வீகக்குடி மக்கள் ( Indigenous Australians ) கிட்டத்தட்ட நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்திருக்கிறார்கள் எனப்படுகிறது.(2)
கப்ரன் ஜேம்ஸ் குக்(
Captain James Cook)1770 இல் குயின்ஸ்லாந்தைக் கண்டுபிடித்தார் . இதற்கு முன்பு டச்சு, போர்த்துகேயர, பிரான்ஸ் கப்பலோட்டிகளும் வந்து ஆராய்ந்து போயிருக்கிறார்கள். ஆரம்பத்தில் இது நியூசவுத் வேல்ஸ்சின் அதிகாரத்தின்கீழ்த்தான் இருந்தது. 1824 தொடக்கம் 1843 வரை குயின்ஸ்லாந்து தங்கச் சுரங்கங்களில் வேலை செய்யும் கைதிகள் காலனி (Colony) யாகவே இருந்தது. பின்பு 1859 இல் நியூசவுத் வேல்ஸ்சிலிருந்து பிரிந்து, பிரிட்டிஷ் காலனி என மாறியது. இந்த மாநிலத்தை இவ்வாறு தனி மாநிலமாக ஆக்க விக்ரோறியா மகாராணியார் கையெழுத்திட்டு பிரகடனப்படுத்தியதனால் "குயின்ஸ்லாந்து" எனப் பெயர் பெற்றது. (1) பின்னர் 1901 ம் ஆண்டில்த்தான் அவுஸ்திரேலியாவின் பொதுநல அமைப்பின்கீழ் சட்டரீதியான மாநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
சனத்தொகை
2006 இல் குயின்ஸ்லாந்தின் சனத்தொகை 4,053,444 அதாவது கிட்டத்தட்ட 4 மில்லியன்களாகும்.இதில் 0.3% இந்துக்கள் 70.9% கிறிஸ்தவர்கள்,0.4% இஸ்லாம் மதத்தவரும் இங்கு வாழ்வதாக புள்ளிவிபரங்கள்காட்டுகின்றன.(1) அவுஸ்ரேலியாவின் ஏனைய மாநில தலைநகரங்களிலும்பார்க்க மிகக் கூடிய சனத்தொகை வளர்ச்சி வீதத்தை கடந்த ஐந்து வருடங்களாக பிறிஸ்பேன் பதிவு செய்திருக்கிறது. 2000ம் ஆண்டிலிருந்து 2005 வரை பிறிஸ்பேனின் சராசரி சனத்தொகை வளர்ச்சி வீதம் வருடமொன்றுக்கு 2.0 சதவீதமாக இருந்தது.(4)
பிறிஸ்பேன் நகரம்(Brisbane) குயின்ஸ்லாந்தின் தலைநகரமாகும்.இது இந்த மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்திருக்கிறது. இதை மேலுள்ள படத்தில் காணலாம். சனத்தொகை (898500)அடிப்படையில் பிறிஸ்பேன் மாநகரசபை அவுஸ்திரேலியாவின் முதலாவது மிகப்பெரிய மாநகரசபை எனப்படுகிறது.

இன்னும் வரும்.............

1. http://en.wikipedia.org/wiki/Queensland

2. http://www.factmonster.com/ce6/world/A0840767.html
3. http://www.queensland-australia.com/100103.php
4. http://www.sd.qld.gov.au/dsdweb/v3/documents/objdirctrled/nonsecure/pdf/16870.pdf

பிறிஸ்பேனில் உள்ள கோவாலா (koala) சரணாலயம்

19.2.07

கோவாலா என்ற மிருகம் அவுஸ்திரேலியாவில் மட்டுமே காணக் கூடிய ஒன்றாகும்.இது ஒரு பாலூட்டி மிருகமாகும். இது இந்த நாட்டின் ஒரு பிரபல்யமான அடையாளச் சின்னமாகும்.

கோவாலா என்பது பூர்வீகக் குடியினருடைய ஒருசொல் ஆகும். இதன் அர்த்தம் என்னவென்றால் "தண்ணீர் (தேவை) இல்லை" என்பதாகும். ஏனெனில், கோவாலாக்கள் தண்ணீ குடிப்பதில்லையாம்.இவற்றுக்குத் தேவையான நீரை யூக்கலிப்ரஸ் இலைகளிலிருந்தே பெறுகின்றனவாம். இவை அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையோரங்களில் மட்டுமே வசிக்கின்றன.

இதன் முரடான பாதங்களும் கால்களில் உள்ள கூரிய நகங்களும் மரங்களைப் பிடித்து ஏறுவதற்கு உதவுகின்றன. கோவாலா உடம்பில் சாம்பல் நிற வழுவழுப் பான உரோமங்களையும், அகன்ற காதுகளையும், பெரிய மூக்கையும் கொண்டிருக்கிறது.கோவாலாவைப் பற்றிய முழு விபரமும் அறிய இந்த வலைப் பக்கத்திற்குச் செல்லவும்.

உலகில் அழிந்துவரும் இனங்களில் இதுவும் என்றாகும். குடியிருப்புகளுக்காகவும், பயிர்ச்செய்கை,பண்ணைத்தொழில் போன்றவற்றுக்காகவும் கோஆலாவின் வசிக்கும் நிலங்கள் அழிக்கப் படுவதால் கோஆலாவின் தொகை குறைந்து வருகிறது.

கோவாலாவின் பிரதான உணவு யூக்கலிப்ரஸ்(eucalyptus) இலைகளாகும். இவை " கம் இலைகள்"(gum leaves) அழைக்கப்படுகிறது. இந்த மரங்களிலேயே அவை வசிக்கின்றன,மரத்தைவிட்டு இறங்கி நிலத்திற்கு வருவது எப்பவாவது அருமையாக தான் இருக்கும். கோஆலா இந்த இலைகளைத் தெரிவு செய்து தான் சாப்பிடுகிறது, எல்லா இலைகளையும் சாப்பிடுவதில்லை. அவுஸ்ரேலியாவிலுள்ள 600 வகையான யூக்கலிப்ரஸ் மரங்களில் 50 வகையான மரங்களின் இலைகளைத் தான் கோஆலாக்கள் சாப்பிடுகின்றன. இந்த இலைகளில் 50 சதவீதம் நீரும், 5 சதவீத மாச்சத்தும், சீனியும் உண்டாம். இந்த இலைகளால் கிடைக்கும் குறைந்த சக்தியை 19 மணித்தியாலம் நித்திரை கொள்வதன்மூலம் பயன்படுத்துகின்றன.இதனால் கோவாலாக்கள் போதையில் இருப்பவைபோலத் தோன்றும்.

உலகிலேயே முதலாவதும், பெரியதுமான கோஆலா சரணாலயம் பிறிஸ்பேனில் உள்ள "லோன் பைன் கோஆலா சரணாலயம்"(Lone Pine Koala Sanctuary ) ஆகும். இங்கு 130 வளர்ந்த கோவாலாக்களும், வருடாவருடம் வரும் குட்டிக் (joeys )கோஆலாக்களும் இருப்பதைக் காணலாம்.
தவிர, கோவாலாவைத் தூக்கி அணைக்கலாம், இலையை ஊட்டிவிடலாம். உலகெங்கும் இருந்துவரும் பெரும் புகழ்மிக்க மனிதர்கள் அவுஸ்திரேலியா வரும்போது இந்த சரணாலயத்திற்கு கிட்டத்தட்ட 75 வருடங்களாக வந்து சென்றிருக்கிறார்கள்.கடந்த வருடம் கடந்தகால ரஷ்ய பிரதம மந்திரி இந்தச் சரணாலயத்திற்கு வந்து சென்றார்.

அமெரிக்காவின் பி்ரபல பாடகி ஜனற் ஜக்சனும், காலஞ் சென்ற போப்பாண்டவரும் கோவாலாவைக் கட்டி அணைத்து வைத்திருப்பதை மேலுள்ள படங்களில் காணலாம்.

இந்தச் சரணாலயத்தில் ஓஸி(Aussie)யின் ஏனைய வனவிலங்குகளான கங்கரு,(kangkaroo) ஈமியூ,(Emu) (தீக் கோழி மாதிரி ஒரு பெரிய பறவை, எக்கின்னா(Echidna) (ஒரு வகை முள்ளுப் பன்றி), வொம்பற்(Wombat), பலவிதமான அவுஸ்ரேலியப் பறவைகள், பறக்கும் நரி,(Flying Fox) டிங்கோ(Dingo) எனும் காட்டு நாய் என்பவற்றுடன் மேலும் பல பிராணிகளைக் காணலாம்.
இந்தச் சரணாலயம் பிறிஸ்பேனின் சுற்றிலாப் பிரயாணிகளைக் கவரும் பிரதான இடமாகும். பிறிஸ்பேன் நகரத்திலிருந்து இவ்விடத்தை வந்து சேர 20 நிமிடம் எடுக்கும். கோல்ட் கோஸ்ற்( Gold Coast) ரிலிருந்து வர 50 நிமிடமாகும்.
நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் கோவாலாவைக் அணைத்துத் தூக்குவது 1997 லிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது குயின்ஸ்லாந்து மாநிலத்தில், அதுவும் விசேடமாக இந்த "லோன் பைன் கோஆலா சரணாலயத்தில்" அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோவாலாவைப் பார்க்க ஆசையாக இருக்கா? இன்னுமென்ன யோசிக்கிறீர்கள்.கிளம்பி வாருங்கள் பிறிஸ்பேனுக்கு.

வலைப் பக்க உதவி:

http://www.koala.net

http://www.koala.net/lonepine/koalahug.htm

http://www.koala.net/download/lonewal1.jpg -wallpapaer

ஹாபர் பாலம் ஏறுதல் (Climbing Harbour Bridge)

19.3.07
கடந்த ஞாயிற்றுக் கிழமை 18.3.2007 அன்று சிட்னி ஹாபர் பாலத்தின் 75 வது ஆண்டு நினைவு தினக் கொண்டாட்டம் கோலகலமாக இடம்பெற்றது.கிட்டத்தட்ட 200 000 மக்கள் பங்குபற்றினர். 52 000 தொன் எடையுள்ள இரும்பினால்க் கட்டப்பட்ட இந்தப் பாலத்தில் எட்டு வாகனச் சாலைகளில்தினசரி 200 000 கார்(car) கள் செல்கின்றனவாம். (1)இந்தக் கொண்டாடத்திற்காக 15 மணித்தியாலம் போக்குவரத்து யாவும் தற்கலிகமாக நிறுத்தப்பட்டது.

காலை 9.20 க்கு அந்த மாநில ஆளுனரான மேன்மைதங்கிய பேராசிரியர் மேரி பஷிர் (Professor Marie Bashir) றிபனை (ribbon)வெட்டிக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

அதன் பின் பெருந்திரளான மக்களின் ஊர்வலம் தொடங்கியாதாகக் கூறப்படுகிறது.

பாலம் ஏறுதல்(BridgeClimb )

சிட்னி வருவோர் ஒவ்வொருவரும் "கட்டாயமாக செய்யவேண்டியது"களில் ஹாபர் பாலம் ஏறுவது ஒன்று எனப் பலரும் சொல்கிறார்கள்.இந்தப் பாலம் ஏறுதல் 1998 லிருந்து இடப் பெற்று வருகிறது.(3)கிட்டத்தட்ட 1.8 மில்லியன் மக்கள் ஏறி இருக்கிறார்கள் (இவர்களில் கானா பிரபாவும் ஒருத்தர்) இவர்களில் 25 சதவீதமானோன் உள்நாட்டவராவர். பாலம் ஏறுதலில் பிவருவனவற்றை விசேடமாகக் குறிப்பிடலாம்:
பிறிஜ் கிளைம்ப் (Bridgeclimb))பாலத்தின் மேலே ஏறுதல்
பாலத்தின் கோபுரங்களில் (Pylon) ஏறுதல்
கண்டு பிடிப்புக்கு (Discovery Climb) ஏறுதல்


பாலத்தின் மேலே ஏறுவது, பகல், அதிகாலை(3am)/மாலை,இரவு போன்ற பொழுதுகளில், 12 பேர் கொண்ட குழுவாக ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் ஒருமுறை இடம்பெறுகிறது.பாலத்தின் மேல் ஏறுவோர் முக்கியமாகச் செய்யப்பட வேண்டியவை:
* ப்றெதலைசர் (breathalyser) ரெஸ்ற் (test) செய்ய வேண்டும்,
* அங்கு கொடுக்கப்படும் விசேட அங்கி(suit)யும்,அரைநாடாவும் (Belt) அணிய வேண்டும்,
* புகைப்படக் கருவிகள், மணிக்கூடு, ஆடுகிற தூக்கண தோடுகள்/காதணிகள் ஏறுதற்கு முன் கீழே விட்டுச் செல்லவேண்டும்.


பாலத்தின் உச்சியை அடைந்ததும் வானத்தைத் தொடுவது போன்ற ஒரு உல்லாச உணர்வு ஏற்படுமாம்; அதுவும் அதிகாலை மூன்றரை மணிக்கு ஏறி பாலத்தின் உச்சியிலிருந்து சூரியன் உதிக்கும் காட்சி கொள்ளை அழகாயிருக்குமாம்; என பார்த்தவர்கள் சொல்லுகிறார்கள்.(2)இருப்பினும் மிகவும் செலவு அதிகம்தானாம்.அதாவது ஒரு பெரியவருக்கு $165 டொலர், அதுவும் சனி, ஞாயிறு, வேறு விசேட தினங்களில் இக் கட்டணம் இன்னும் அதிகமாம் எனவும் சொல்லப்படுகிறது.

கோபுரத்தில் ஏறுதல் (Pylon lookout)
பாலத்தின் இருபுறம்முள்ள கோபுரத்தில் நின்று சிட்னி நகரத்தை சுற்றிலும் பார்க்க மிகவும் அழகாக இருக்குமாம், அந்தக் கோபுரங்களின் உள்ளே பொருட்காட்சியும் காணலாமாம் என்று போனவர்கள் சொல்கிறார்கள். (3)

கண்டுபிடிப்புக்கு ஏறுதல்(Discoveryclimb)

இது ஹாபர் பாலத்தில் உள்ள வாகனச் சாலைக்கு கீழே உள்ள இரும்பு வலைக்குள் படிகளாலும், கான்ற்றீஸ்(gantries) ஊடாகவும் புகுந்து, நீலவானந் தெரியும் வரை நடந்து செல்வதைக் குறிக்கும்.(2)
ஹாபர் பிற்ஜ்சின் படங்களைக் காண
உசாத்துணை
1. ourbridge.com
2. The Weekend Australian - News aper
3. cultureandrecreation.gov.au/articles/harbourbridge/

ஹைக்கூ கவிதைகள்

நிறைந்த பானையில்
கூரையூடாக
கனத்த மழை.

நான் கதைத்ததையே
அடுத்தநொடியில்
திரிச்சுவிட்ட செல்பேசி.

சேவையென்று பலப்பல
பொய்யுரைத்துக்
கூத்தடிக்கும் குழுவரசியல்.

பாமரன் பசியில்
வாக்குவேட்டுக்கு
ஆயுதம் அரிசி.

"அரிசி."..சீரியல் .. 1 {.cereal அல்லது serial...}..

உணவு இல்லாமல் உயிர்கள் இல்லை. உடுதுணி, உணவு, இருப்பிடம்(வீடு)என்னும் மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முக்கியம் பெறுவது உணவு. தமிழர் உணவிலே முதன்மை வகிப்பது சோறு.நெல்லை அரிசியாக்கி அரிசியை சமைப்பதால் சோறு வருகிறது.

இந்த அரிசி உணவில் மட்டுமன்றி,கலாச்சாரம்,வர்த்தகம், அரசியல்,அத்துடன் நம் அங்கத்திலும் அங்கம் வகிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

யாழ்ப்பாணாத்தில் பல வகை அரிசி உண்டு.நெல்வயல்களில் பள்ளக் காணிகளில் விளையும் மொட்டைக் கறுப்பன் நெல்லில் இருந்து நல்ல சிவப்பான அரிசி கிடைகிறது. மேட்டுக்காணிகளில் விளையும் சிவப்பு, வெள்ளை அரிசிகளும் உண்டு.ஈழத்தின் மற்றப் பாகங்களில் சம்பா அரிசியும் கிடைக்கிறது.

தமிழகத்தில் உள்ள நன்செய்தானியங்களைப் பார்ப்போம். சீரகச் சம்பா, சின்னச் சம்பா,சிறுமணிச் சம்பா,பெரிய சம்பா, சன்னச் சம்பா,ஊசிச் சம்பா, இலுப்பைச் சம்பா,மல்லிகைச் சம்பா, கம்பன் சம்பா,கைவளச் சம்பா, குங்குமச் சம்பா, குண்டைச் சம்பா,கோடைச் சம்பா, ஈர்க்குச் சம்பாபுனுகுச் சம்பா, முத்துச் சம்பா, துய்ய மல்லிகைச் சம்பா,மோரன் சம்பா,மாலன் சம்பா, சீரன் சம்பா, செம்பிலிப் பிரியன், வெண்ணெல், செந்நெல் போன்றன உள்ளடங்குகின்றன என விநோதர மஞ்சரி குறிப்பிடுகிறது.இந்த அரிசி வகைதான் எத்தனை!

அரிசியினால் இட்டலி, தோசை, புட்டு, இடியப்பம், அப்பம் போன்ற பிரதான உணவுகளும், மற்றும் பலவித சிற்றுண்டிகளும் செய்யப்படுகின்றன.

இட்டலி அனைவர்க்கும் சிறந்த உணவு,எளிதில் சமிபாடு அடையக் கூடிய உணவாக
இருப்பினும் இதை யாழ்ப்பாணாத்தில் காலை உணவாக வீடுகளில் பெரும்பாலானோர் பொதுவாக சமைப்பது குறைவு என்றே சொல்லலாம். சைவச் சாப்பாட்டுக் கடைகளில் பொதுவாக இட்டலி விற்பதுண்டு. சைவங்கடை முதலாளி முதல் நாள் மிஞ்சுகிற சோற்றை ஊறவிட்ட உழுந்துடன் அரைத்துப் புளிக்கவைத்து, அடுத்த நாள் இட்டலியாக விற்பார் என நகைச்சுவையாகப் பேசப்படுவதுண்டு.இது உண்மையாகக் கூட இருக்கலாம்.தோசை யாழ்ப்பாணத்தில் செந்நெல்லைக் குற்றி அரிசியைத் தீட்டி நீரில் ஊறவைத்து,அங்கு கறுத்தத் தோலுடனான உழுத்தம் பருப்புத்தான் கிடைக்கும். அந்த உழுத்தம் பருப்பை ஊறவிட்டு, பின் தோலை நீக்கி அரிசியையும் சேர்த்து அரைத்த மாவிலிருந்து தோசையை இரும்புக்கல்லில் சுடுவது இலகுவான சமையல் முறை. பின்னர் ஆங்கிலேயரின் வருகையைத் தொடர்ந்து கோதுமை மாவும் அறிமுகமாகிப் பின்னர் பங்கீட்டு அட்டைக்கு (கூப்பன்) பலருக்கும் கிடைக்கக் கூடியதாக வந்ததும் யாழ்ப்பாணத்தில் கோதுமை மாத் தோசை(கூப்பன் மாத் தோசை)யும் ஒரு காலை உணவாக முக்கிய இடம் பிடித்துக் கொண்டது. வடமராட்சியில் இந்தத் தோசை மிகவும் பிரபல்யம்.முன்பெல்லாம் வல்லிபுரக் கோவில் தேர்த்திருவிழாக் காலங்களில் சுடச் சுட வாங்கிச் சாப்பிடமுடிந்தது. நெல் வயல் வைத்திருப்போர் அரிசிமாத் தோசையையே சமைப்பர்.தோசை எப்படிச் செய்வது நாகமாணிக்கம்.கணேசன் என்பரின் கட்டுரையிலிருந்த கீழ்வரும் இரு பாடல்கள் மிகவும் இரசிக்கும்படியாக உள்ளன.
.
"சுலுடன் தலைசாய் செந்நெல் அரிசியும்
மாலின் வண்ணமாம் மையார் உழுந்தும்
பாலின் நிறம்போல் படிய அரைத்து
ஓர்நாள் நன்கு புளித்து
வார்க்கத் தோசை வனப்பொடும் வருமே"


இதன் கருத்து என்னவெனில்,செந்நெல்லிலிருந்து(சூலு ) தீட்டிய அரிசியையும், கரிய உறையை(திருமாலின் நிறமான = மாலின் வண்ணமாம்) நீக்கி உழுந்தையும் சேர்த்து அரைத்து, ஒரு நாள் முழுதும் புள்க்கவைத்துவிட்டு,தோசையை இரும்புக்கல்லில் சுட்டால் அது ஒட்டாமல் அழகாக வரும் என்பதாகும்.

"சூலின் நிரையினால் சுடர்முடி பணிந்து
மேலின் நிலையவர் வாழ்நெறி விளக்கும்
சாலிப் பயிர்க்கதிர் சார்ந்தவெண் அரிசியை
மாலின் வண்ணமாம் மையார் உழுந்துடன்
பாலின் நிறம்போல் படிய அரைத்து
ஓர்நாள் நன்கு புளித்து
வார்க்கத் தோசை வட்ட நிலாவே."


இனி இந்தப் பாட்டின் பொருளைப் பார்ப்போம். நன்கு கற்றவர் தலைக்கனமின்றி பணிவுடனிருப்பதைப் போல பணிவோடு மண்ணை நோக்கும் விதை(சூல்) நெற்களைக் கொண்ட நெற்(சாலி)கதிரிலிருந்து எடுத்த வெள்ளை அரிசியையும்,{முதற்பாட்டில் உள்ள நடு மூன்று பாடல் வரிகளும் இங்கே அதே கருத்துடன் வருகின்றன.அதாவது,} கரிய உறையை(திருமாலின் நிறமான = மாலின் வண்ணமாம்) நீக்கி உழுந்தையும் சேர்த்து அரைத்து, ஒரு நாள் முழுதும் புளி்க்கவைத்துவிட்டு,தோசையை இரும்புக்கல்லில் சுட்டால் பௌர்ணமி நிலவு போல வட்டமாக, அத்துடன் வெள்ளையாக (வெண் அரிசி காரணமாக)வரும் எனப்படுகிறது.
இன்னும் வரும்...........

எடை அதிகரிப்பை கண்டு பிடிப்பது எப்படி?

அண்மைக் காலமாக மக்களிடையே எடை அதிகரிப்பு (over weight) உலகளாவியரீதியில் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த எடை அதிகரிப்பு பல நோய்களுக்கு இடமளிக்கிறது.இருதய சம்பந்தமான நோய்கள், கொலஸ்திரோல் பிரச்சனை, நீரிழிவு, புற்றுநோய், இரத்த அழுத்தம்,பக்கவாதம், எலும்புமூட்டுவலி, இருதய நோய்கள் என்பவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அவுஸ்திரேலியாவில் 25 வயதிற்கு மேற்பட்டோர் பெண்கள் 27% மும், ஆண்கள் 47% ஆக 1980 களில் எடை கூடியவர்களாக இருந்தனர் எனவும், இந்த சதவீதம் 2000 ம் ஆண்டளவில் முறையே பெண்கள்47%மும், ஆண்கள் 60% மும் எடை கூடியவர தொகை கூடியுள்ளதாகப் எனப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.இதிலிருந்து தெரிவது என்னவென்றால்,பெண்களிலும் பார்க்க ஆண்களே எடை அதிகரிப்பில் இருக்கிறார்கள் என்பதாகும். "உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகு" என்பதை பெண்கள் கடைப் பிடிக்கிறார்கள் போலும்.
அடிப்படையில் மனித உழைப்பு என்பது உணவுக்காகத்தான் என்பதில் ஐயமில்லை.அந்த உணவை உடலின் தொழிற் பாட்டிற்கேற்ப உண்டால் எடை அதிகரிப்புப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்காது. உடல் செய்கின்ற தொழிலுக்கு அதிகமாகச் சாப்பிடும்போது தான் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது.
"Single diet is best;for many dishes bring many diseases" என்கிறார் பிங்கி(Pinky).
எடை அதிகரிப்பை எப்படி அளப்பது?
உடற் திணிவு சுட்டெண் (Body Mass Index -BMI)எடை அதிகரிப்பைக் கண்டு கொள்ள உதவுகிறது.இது எவ்வாறு கணிப்பிடப்படுகிறது என்பதைப் பாப்போம்.

உடலின் நிறை கிலோ.கிராம்
------------------------------------- = உ.தி.சு.எ (BMI)
உடலின் உயரம் மீற்றர்(வர்க்கம்)அதாவது உங்கள் உடல் நிறையை உங்கள் உயரத்தால் பிரிக்க(வகுக்க) வருவதாகும்.உங்களுக்கு எடை அதிகரிப்பு இருக்கா என்று அறிய இங்கே சென்று பார்க்கவும்.

உ.தி.சு.எ.விவரிக்கும் விளைவுகளக் கீழே காணலாம்.

19 க்குக் குறைவாயின் - எடைக் குறைவு உள்ளது. ஆதாவது ஆரோக்கியத்திற்குத்
தேவையான எடையின் அளவை விடக் குறைய உள்ளது
என்பதாகும்.

20 – 25 - இது ஆரோக்கியமான எடையின் அளவு.

26 - 30 - இது எடை அதிகரிப்பு உள்ள நிலை ஆகும். நோய்கள் எதுவும்
தோன்றக் கூடிய
நிலை ஆகும். உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி கட்டாயம்
செய்ய வேண்டும்.
30 க்கு மேல் - இது உடலில் கொழுப்பின் அளவு கூடியுள்ள நிலையைக்
குறிக்கிறது. பல நோய்களின் ஆபத்தான நிலையுமாகும்.

எடையைக் குறைக்க என்ன வழி?
உண்வுக் கட்டுப்பாட்டினாலும்,தினசரி உடற்பயிற்சி செய்வதாலும் உடலில் அள்வுக்கு அதிகமாக இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம்.
உணவுக் கட்டுப்பாடு
சிலர் உண்ணுகிற அளவைக் குறைத்தால் சரி என நினைத்து விரதம் இருக்கிறார்கள்.
பின்னர் விரதமிருந்த பட்டினிக்கும் சேர்த்து கூடுதலாக சாப்பிடுகின்றனர்.ஆகவே, விரதம் இதற்கு சரியான அணுகுமுறை அல்ல.

சத்துள்ள உணவுகளை உண்பது அவசியம். சத்துள்ள உணவுகள் எனும்போதுமாச்சத்துக் குறைந்த உணவுகள்
கொழுப்புக்(எண்ணெய்) குறைந்த உணவுகள்
அதிகளவு மரக்கறி(காய்கறி)கள், பழங்கள் போன்றவற்றை அன்றாட உணவிற் சேர்த்துக் கொள்வதோடு, தினமும் 8 லீற்றார் நீர் அருந்துதல் நல்லது.
உடற் பயிற்சி எனும்போது, ஜிம்முக்கு போவது நல்ல தீர்வாக சிலர் நினைக்கிறார்கள். இவர்கள் அங்கு போவதை விடுமுறைக்காகவோ அல்லது நோய் அல்லது வேறு காரணங்களுக்காக நிறுத்தியவுடன் இழந்த கொழுப்பை திரும்பவும் அடையக் கூடிய நிலை ஏற்படுகிறது.உண்மையில் எந்தவித ஜிம்முக்கான செலவுமில்லாமல் அன்றாடம் 30 - 40 நிமிடம் நடைப் பயிற்சி செய்வதே போதுமானது. இதை கட்டாயமாக்கிக் கொள்ளவது அவசியம்.
சத்துள்ள உணவை உண்பதும், உடற்பயிற்சி செய்வதுமான ஆரோகியப் பழக்கத்தை கடைப் பிடித்தால் எடல் அதிகரிப்பினால் ஏற்படக் கூடிய நோய்களிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம்.

"விவரமான விவசாயி"

துயரற்ற விவசாயிநான்
தோட்டத்திலும், வயலிலும்
தொழில்தான் என்மூச்சு.

வெயில் தின்றமுகமும்,
கையில் வறண்டதோலும்,
தோற்றம் கவர்வதில்லை,
நோக்கம் அதுவுமில்லை.
நோய்க்குப் பயமுமில்லை,
நோய்க்குப் பயமென்னிடமோ?

சுறுசுறுப்பில் நாஞ்சூறாவளி
தலையின்பார மூட்டையால்
நெருநெருக்கும் கழுத்துள்ளே
முதுகில் மூட்டைச்சுமையில்
அடிக்கடி இளைக்கும்மூச்சிலே.
சோர்வில்லாத முழுமூச்சோடு
செய்துமுடிப்பேன் செயல்பாத்து.

எடைகூடல், இடுப்புவலி
எலும்புருக்கி, புற்றுநோய்
நாரிப்பிடிப்பு, தோள்வலி,
மூட்டுவலி, முதுகுவலி
முழங்கால் கணுக்கால்வலி
தலையிடி தடிமன்காய்ச்சலென்று
தரையிலுங் கிடந்ததில்லை;
இருதயமும் இரும்புபோல
இதிலென்ன இரத்தழுத்தம்.

விவரமான விவசாயிநான்
வேதனைகள் எனக்கில்லை
செய்தொழிலே என்மூச்சு!

எழுதியவர்: செல்லி

"என்னிரத்தம்" கவிதை

பாட்டனைப் பார்க்கவே
பேரனும் பிற
நாட்டிலிருந்தே வந்தான்.
பார்க்கப் பரவசந் தரும்
பிஞ்சு முகம்.
கேட்கப் புளகாங்கிதம்
மழலைத் தமிழ்.

வீட்டில் வேலைசெய்ய
வந்து நிற்பான்
தானும் கூடவே.
தன்பாடும் தானுமாய்
இருந்த எனக்கு
தெரியுமாம் என்றான்
எல்லாந் தனக்கு.

வெட்டவேதும் என்றுபோனா
கத்தி கவனம், தாத்தா!
குனிந்தேதும் எடுக்கப்போனா
நாரி கவனம், தாத்தா!
சாப்பிடவென்று கையைவச்சா
கொட்டிண்டும் கவனம்,தாத்தா!
கைகழுவும் போதுகூட
சட்டை கவனம், தாத்தா!

அப்பனுக்குப் பாடஞ்சொன்னான்
அந்தச் சுவாமியப்பன்
அப்பனின் அப்பனெனக்கே
பாடஞ்சொல்லுஞ் சுப்பனாரிவன்?
என்னிரத்தம் அவனப்பனில்,
அவனிரத்தம் சுட்டிப்பயலிலெனில்,
என்கிறுக்கு இவனுக்கெனில்,
என்னிரத்தந்தானே இவனும்!.

வித்தியாசமான விலங்கு......

"கங்காரு, கொவாலாவும் காஞ்ச புல்லும்" என்ற பதிவுக்கு இந்தக் கட்டுரையை 3.4.2007 இல் எழுதி இருக்கிறேன்
அவுஸ்திரேலிய விலங்குகளில் பிளற்றிப்புஸ் (Platypus)ஒரு வித்தியாசமான விலங்கு ஆகும்.அவுஸ்ரேலியாவில் தஸ்மேனியா(Tasmania),விக்ரோறியா(Victoria),நியூ சவுத் வேல்ஸ்( New South Wales), குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில் பிளற்றிப்புஸ் காணப்படுகிறது. பிளற்றிப்புஸ் அவுஸ்திரேலியாவின் அடையாளச் சின்னமாகவும் விளங்குகிறது.இங்கே இருபது சதத்தில் இது இருப்பதை பாருங்கள்.
பிளற்றிப்புஸ் முட்டையும் இடும்:குட்டிகளுக்கு பாலும் ஊட்டுகிறது. இதனுடைய இன்னொரு வித்தியாசமான நடத்தை என்னவென்றால் இது நீரோடை, அல்லது சிற்றாறுகளில் நீந்தி இரை தேடும்போது கண்ணை மூடிக் கொள்ளுமாம்.

இதனுடய அலகு(சொண்டு-bill) வாத்தினுடைய அலகு போன்றது;ஆனால் பெரியது.இதனால் இது வாத்து-அலகு(duck-billed) பிளற்றிப்புஸ் என அழைக்கப்படுகிறது.
இது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியது.ஆயினும் நீருக்குள் இரை தேடி நிலததுக்கடியில் ஒரு வளை(hole) தோண்டி அந்த வளைக்குள் வாழ்கிறது.இது மிக நீண்ட கிட்டத்தட்ட 50 அடி நீலமான வளையை நிலத்திற்கு அடியில் தோண்டக்கூடியதாம். இவ்வாறு பிளற்றிப்புஸ் கிண்டுவதற்கு நதிக் கரைகளில் உள்ள ஈரமண் இலகுவாக இருக்கிறது.

வீடியோவில் பார்க்க இங்கு சொடுக்கவும்.ஆகவே, இதன் தொழில் நீந்துதல், சாப்பிடுதல், வளை கிண்டுதல் என்பனவாம்.இந்த விலங்கு நீரில் கீழ் உலாவக் கூடிய உடலமைப்பைக் கொண்டது. இலகுவில் உலர்ந்துவிடக் கூடியதுமான தோல். உரோமங்களைக் கொண்ட, இதனுடைய நீண்ட வாலில் தேக்கி வக்கப்பட்டிருக்கும் கொழுப்பு குளிர் காலங்களில் பனிக் குளிர் நீரில் இது உறைந்துவிடாதபடி பாதுகாக்கிறது. இதனுடைய அலகு(bill) பறவைகளினது அலகு போல் அல்ல. இது மிருதுவான அதேநேரம்,அங்கிங்கு அசையக் கூடிய நெகிழ்வ்வுத் தன்மையுடயதாகும். இந்த அலகின் உட்புறத்தில் அதாவது கொடுப்புக்குள் பை (pouch) போல இருக்கின்றன.

நீருக்குள் கண்ணை மூடிக் கொண்டு இதனால் எப்படி உணவைத் தேடமுடிகிறது?
பிளற்றிப்புஸ்சின் அலகிலுள்ள மின்சார உந்து சக்தி இதற்கு உதவுகிறது. அதாவது,பிளற்றிபுஸ்சின் அருகில் இரை வரும்போது அலகின் ஒருவித மின்சார உந்துசக்தி அந்த இரையைப் பிடிக்கத் தூண்டுகிறது. யபி(yabby)
ஸ்றிம்ஸ்(shrimp), மற்றும் நீரில் வாழுகிற சிறு பிராணிகளையும் இது பிடித்துத் தின்னும்.இவற்றை நீருக்கு அடியியில் நீந்திப் பிடித்தவுடன் இது தின்பதில்லை. உடனே பிளற்றிபுஸ் வாயால் கவ்வி அதன் குடுப்புக்குள் உள்ள பை(pouch) க்குள் அடைந்து வைத்துக் கொண்டு தண்ணீருக்கு வெளியே வந்ததும் கொண்டுவந்த இரைகளை பைக்குள்ளிருந்து எடுத்து உண்கிறது.இதனால் இது ஒரு வித்தியாசமான விலங்கா உள்ளது.


ஆண் பிளற்றிப்புஸ்சின் பின் கால்களில் ஒரு மிகச் சிறிய விசமுள்ள கொம்புவடில் ஒரு நகம் இருக்கிறது.எதிரிகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள இந்த விச நகத்தால் குத்துகிறது.
இந்த விசம் ஒரு நாயைக் கொல்லக் கூடியளவு கடிமையானதாம். ஆனால் மனிதரை கொல்லாதே தவிர நோய்க்கு அவர்களை ஆளாக்கிவிடுமாம்.


பெண் பிளற்றிப்புஸ் இரண்டு வருடத்தின் பின் வழக்கமாக 2க்கு குறைந்த முட்டை இடுகிறது. அவை ஒரு அங்குலத்திலும் சற்றுக் குறைவான நீளமுடையவை. இதன் குட்டிகளுக்குப் பாலூட்ட முலைக் காம்புகட்கு பதிலாக இரு பைகள் (pouch) இருக்கின்றன. குட்டிக அவற்றுள் அலகை வைத்து பாலை உறிஞ்சிக் குடிக்கின்றன.ஏனைய விலங்குகளோடு ஒப்பிடும்போது இதுவும் வித்தியாசமாகத் தான் இருக்கிறதல்லவா!

மேலும் தகவல்களுக்கு விக்கிப் பீடியாவைப்நன்றி,படங்கள்: இமேஜ் கூகிள்

இலக்கியத்தில் வரும் உணவுகள்.

தமிழிலுள்ள ஞான நூல்களில் தலையாயது "சிவஞானபோதம்" என்ற நூல் ஆகும் சிவஞானபோதத்தை இயற்றியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருள்மிகு மெய்கண்ட தேவநாயனார் ஆவார். அந்த சிவஞானபோதத்திற்கு பேருரை விரித்தவர் திருவாவடுதுறை அதீனத்தைச் சார்ந்த மாதவச் சிவஞான யோகிகள். இவர் ஒருமுறை விருந்தினர் வந்தபோது அவர்களுக்கு உணவு கொடுக்க சமையலாளிடம் என்னென்ன எப்படிச் செய்ய வேண்டும் என கட்டளை இடுவதை கீழ்வரும் பாடலில் காணலாம்.

சற்றே துவையல்அரை தம்பிஒரு பச்சடிவை
வற்றல் ஏதேனும் வறுத்துவை - குற்றம்இலை
காயம்இட்டுக் கீரைகடை கம்மெனவே மிளகுக்
காய்அரைத்து வைப்பாய் கறி


ஒரு துவையல், அரையல்-பச்சடி(யாழ்ப்பாணத்தில் சம்பலைப் பச்சடி என்போம்),வறுவல்- வற்றல் குழம்பு என நினக்கிறேன்,கடையல்-கீரை (யாழ்ப்பாணத்திலும் முளைக்கீரையை அவித்துக் கடைவோம்), அரையல்-கம்மென்று மணம் வீசும் மிளகை அரைத்துவைக்கும் ரசம். இந்த அரையல் பொடியாக ( மாவாக )அரைப்பதை குறிக்கிறதாக் இருக்கலாம்.

இது தவிர, இன்னொரு வேளையில், சிவஞான முனிவர் வந்த விருந்தினரை வரவேற்று என்ன உணவளிக்கிறார் என்பதை நோக்குவோம்.

அரன்சிரம் காணாப்புள்ளும்
அத்துடன் இறக்கும்பூமி
வரன்முறை யாகவந்த
வடசொலில் சுவையாம்ஒன்றும்
கரம்தனில் அள்ளிஉண்ணக்
களிதரு பாயாடொடு
உரமலர் மந்தன்கூட்டும்
உண்ண வருகுவீரே


அரன் சிரம் காணாப் புள் என்பது அன்னப் பறவை. அன்னம் சோற்றைக் குறிக்கிறாது; , சாம்+ பார் சாகும் என்றால் இறக்கும், பார் என்றால் பூமி என்பதாக இறக்கும் பூமி என்பது சாம்பார் எனக் கருத்தாகிறாது. தமிழகத்தில் சாம்பார் பிரதான கறிகளில் ஒன்று. ஆனால் யாழ்ப்பாணத்தில் சாம்பார் என்ற சமையல் இருக்கவில்லை.வடமொழியில்(சொல்) சுவை எனறால் ரசம் என்று பொருள்.பாய்+அடு + ஒடு = பாயாடொடு. இதில் பாய் என்பது பாய்கின்ற, அடு என்பது அசம் (வடமொழியில்), என பாயாடு பாயாசம் என்றாகி வருகிறது. சனீஸ்வரனுக்கு இன்னொரு பெயர் மந்தன் என்பதாகும் மலர் என்பது "பூ" வைக் குறிக்கும்.எனவே "மலர்மந்தன்" என்பது "பூசனி" யைக் குறித்து நிற்கிறது.
அன்னம், சாம்பார், இரசம், பூசனிக் கூட்டு, பாயசம் போன்ற எல்லாமுடன் விருந்து கொடுக்கிறார் பாருங்கள்!

Weird-வியேட்.?....ம்ம்..சரி . ஏதாவது எழுதுகிறேனே

வியேட் ஆக எதையென்றாலும் எழுத துளசியின் அழைப்பு வந்ததும்,மறுக்க முடியுமா?. ஆனா weird ஆக எதை எழுதுவது என்பதே வியேடாகத் தான் இருந்தது. உஷா அவங்களும் மனச்சாட்சியை எழுதச் சொல்லி அழைப்பு விடுத்தார்.உஷா, இது தானுங்க என் மனச் சாட்சி!, வியேடா இருக்குது, பார்த்தீங்களா!.
என்னைப் பற்றி என்ன வியேட் ஆக இருக்கு என்று யோசிச்சு பார்த்தேன். என்னோட குட்டிக்குட்டி மறதிகளைப் பற்றி எழுதப் போகிறேன்.வீட்டைப் பூட்டிட்டு போய், இரண்டு மூண்டு கீ.மீ போயிட்டுத் திரும்பி வந்து கதவை ஆட்டிப் பார்ப்பேன்; அடுப்பை நிப்பாட்டி விட்டுப் போய் (நிப்பாட்டின்னான் என்பது சரியாக நினைவிருந்தாலும்) பயங்கரக் கற்பனை எல்லாம் மூளைகுள்ள ஓடும், உடன திரும்பி வந்து அடுப்பைப் பாப்பேன்.அது ஏற்கனவே நிப்பாட்டுப்பட்டுத் தான் இருக்கும்.

பையன்களை 4 pm மணிக்கு ஏத்திக் கொண்டுவர ரயில்வே ஸ்ரேசனுக்கு போறதுக்கு முதல் மூண்டரை மணிக்கு ஒரு குட்டித் தூக்கம் போட்டு, ஃப்போன் அடிக்க எழும்பி நேரத்தைப் பார்த்தா நாலரை மணியாயிருந்தது. ஸ்ரேசனில பையன்கள் அழுதபடி இருந்தாங்கள்.அதற்குப் பின் பகல்த் தூக்கமே வர்றதில்லை.இது நடந்து 3 வருஷத்துக்கு மேலாகிறது.

ஒரு முறை காரை பாக் பண்ணிட்டு திரும்ப வந்து காருக்கு சற்றுக் கிட்டவாக நின்று கொண்டே காரை எங்கை பாக் பண்ணினேன் என்று தேடி இருக்கிறன்.சின்ன வயசில பள்ளிக்கூடத்தில லஞ் box, புத்தகங்களை மறந்து விட்டிட்டு வந்த கதையிலிருந்து இன்னும் தொடர்கிறது.இருந்தாலும் இவற்றை நினைத்துப் பார்த்தா வியேடாத் தான் இருக்கு.


சாத்திரம்(சோதிடம்) கொஞ்சம் பார்க்க தெரியும் என்றதால ஒரு தடவை ஒருத்தர் தனக்கு அதிஷ்ட லாபச் சீட்டில காசு வருமோ என்று பார்த்துச் சொல்லச் சொன்னார்.நானும் சும்மா ஹொபியாக அந்தக் குறிப்பைப் பார்த்து விட்டு குறிப்பிட்ட காலத்தின் பின் அப்படி நடக்கலாம் என்று சொல்லி,காலத்தையும எழுதிக் குடுத்தேன்.என்ன எழுதிக் கொடுத்தேன் என்றே ஞாபகமில்லை.ஐந்து வருடங்கழித்து அந்த நபருக்கு எத்தனையோ மில்லியன் கிடைத்ததாம் எனக் கேள்விப்பட்டேன். நான் சொன்னது பலித்து விட்டது என நினைக்கும்போது வியேடாகத் தான் இருந்தது.
அதன் பின் ஒரு அம்மா எனக்கு அம்மன் வாலாயம் இருக்கிறதோ? எனக் கேட்டார்.ஏனென்றால் நான் சொல்வது பலிக்கிறதாம். அதற்குப் பிறகு சாத்திரம் யாருக்கும் சொல்வதில்லை.ஏனென்றால் என்னை அம்மனாக்கி அபிஷேகம் செய்துவிடுவார்களோ என்ற பயந்தான்.இவற்றை நினைக்கும்போது வியேடா இருக்குதுங்கோ!


எதிகாலத்திற்கு திட்டம் போடுறது, ஓய்வு காலத்திற்கு சேமிக்கிறது அதுக்காக இன்வெஸ்மன்ற்க்கு வீடு வாங்கிறதெல்லாம் செய்யிறதில்லையுங்கோ.ஏனென்றால் சிறுவயசிலிருந்தே போர்க் காலச் சிக்கலில தப்பிப் பிழைத்ததால் மரணம் என்பது தூசாகிவிட்டது. எப்பவுமே அதற்குத் தயார். ஆனா அப்பிடியானவங்களுக்கு மரணம் கெதியா வராதாமே! என்று எங்க அம்மா சொல்லுவா.இது உங்களுக்கு வியேடாத் தெரியலையா?

இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன். இனி அடுத்து வியேடா யாரு வரப் போறாங்க பார்ப்போமே!
இந்த விளையாட்டுக்கு நான் அழைக்கிறேன்

யோகன் - அவனுக்கு வியரடி!!( Weird )
வெற்றி
சந்திரவதனா - WEIRD - 14வது மாடிக்கு நடந்தே போகிறேன்
சின்னக்குட்டி -...விசித்திரமாண குணாம்சமா. உளபிறள்வா.
வசந்தன்

"வியேட்" பற்றி எழுத என்னை அழைத்தவர்களின் அனுபவப் பதிவுகள்:
கிறுக்ஸ் & கிறுக்ஸ்(weird)
'வியர்ட்' மனதின் இரட்டைநிலை...
நான் ரிஸ்க் எடுப்பேன் !
நானொரு 'வியர்டூ'ங்க
"நான் ஒரு வியர்டு தானே! தெரியாது?"
"தொட்டிற் பழக்கம் - ஒரு weird பதிவு"