கந்த சஷ்டி - யாழ் அனுபவம்

கந்த சஷ்டி விரதம் தமிழகத்தில் 30.10.08 முதல் 4.11.08 வரை அனுட்டிக்கப்படுகிறது. ஆனா இங்கு 29.10.08 ஆரம்பமாகிறது என்கிறார்கள்.
மூன்று சக்திகட்கு ஒரு நவராத்திரி போல,சிவனுக்கு ஒரு சிவராத்திரி போல, கந்தனுக்கு உகந்த விரதம் கந்த சஷ்டி. இது ஆறுநாட்கள் விரதம் இருப்பதாகும்.சகல பாவங்களையும் போக்கும் விரதம் எண்டு எங்களூரில் சொல்லுவினம்.ஐப்பசி மாதத்தில் தீபாவளி முடிந்து அமாவாசைக்கு அடுத்தநாள், பிரதமை திதி முதல் சஷ்டிதிதிவரை இந்த விரதம் இருப்பினம்.அநேகமாய் யாழ்ப்பாணத்தில் எல்லா முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

இது 2005 இல் கோயில் கோபுர அழகுடனான தோற்றம்.

சுழிபுரம் பறாளாய் முருகமூர்த்தி கோயிலில் இந்த ஆருநாளும் முருகனுக்கு விசேடபூசைகள் இடம்பெறும். ஆறாம் நாள் சூரன்போர் நடைபெறும்.ஆறு தினங்களும் இரவில் சிலர் மிளகும் தண்ணீரும் என உபவாசமிருப்பவர்கள், சிலர் பாலும் பழமும் மட்டுமே உட்கொண்டு விரதமிருப்பவர்கள். வயதானவர் பயறு அவித்துச் சாப்பிடுவர். அதற்கும் இயலாதவர் ஒரு வேளை சோறு உண்பர்.அப்போ அங்கு மழைக்காலம் என்பதால் தண்ணீரும் அருந்தாமல் விரதம் இருந்தா நா வறண்டு போகாது. காற்றிலும் ஈரப்பதன் இருக்கும்.ஆனா இங்கு பிறிஸ்பேனில் கடும் வெயில் தொடங்கிவிட்டது.நீரும் அருந்தாமல் விரதமிருப்பது உண்மையிலேயே ஒரு கடுந் தவம்தான்.


பறாளாய்க் கோயிலில் முருகனடியார்கள் சிலர் வீட்டில் மச்ச மாமிசம் உண்பரால் துப்பரவு இருக்காது எண்டு கந்தர்சஷ்டி கவசம் பாடியபடி கோயிலியே ஆறு நாளும் தங்கி இருந்து விரதம் பிடிப்பர்.

இருப்பினும், ஊர் ஞாபங்கள் வரும்போது கண்களும் குளமாகும்.1997 குண்டு, செல் அடிபாடுகளால் இப்படியாக இந்தக் கோயில் கோயில் தேர் இருந்தன.

தமிழருக்கு ஒரு விடிவு கிடைக்க தமிழ்க் கடவுள் முருகனை மண்டாடுவம். அதற்காக சஷ்டி கவசம் பாடி ஆறு நாளும் முருகனை வேண்டி வழிபடுவோம்.

இன்று சன்னதி முருகனுக்கு தேர்த் திருவிழா
பழைய ஞாபகங்கள் வரும்போது கவலையாயிருக்கிறது. முன்பு சன்னதி முருகனை தேரில் தந்த காட்சியைப் பாத்து கண்ணீர்மலக வழிபட்டேன். இன்று அங்கு போகவும் முடியாமல் படங்களைப் பாக்க கண்ணீர் வருகிறது.
நல்லூரில் தங்க வடிவில் வடிவேலன் சன்னதியில் வெள்ளி வடிவேலன்.படம் நன்றி: நல்லூர்க்கந்தன்

என்னைப் போல் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் உன் அடியவர்க்கும் எம் தாயகத்தவருக்கும் சன்னதி வேலவா நீதான் அருள் புரிய வேண்டும்!

"பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே"
"சன்னதி வேலனுக்கு அரோகரா" இன்னமும் காதில் கேட்கிறது.
எங்கள் தாயகத்தில் பழம்பெரும் கோயில்களில் ஒன்றான சன்னதி ஆலயத்தைப் பற்றி சகவிடயங்களயும் அறிய கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்
சன்னதி வேலன்

நான் எழுதியவைகளில் எனக்குப் பிடித்தவை ---அரைபிளேடின் அழைப்பிற்கிணங்க

எனக்கு இப்படி எழுத ஒரு வாய்ப்பைத் தந்த அரைபிளேடு அவர்களுக்கு முதலில் ஒரு கோடி வணக்கங்கள்!

நன்றாக எழுதிக் கொண்டிருக்கும் ஏனைய நண்பர்களைப்போல நான் எதுவும் பெரிசா எழுதியிருக்கிறேனா என்றால் என்னைப் பொறுத்தவரை இல்லை என்றுதான் சொல்லுவேன்.
இருந்தாலும், நான் அதிக நேரமெடுத்து ஆராய்ந்து எழுதியது முருங்கை பற்றிய பதிவுதான்.

அடுத்ததாக, ஒருவனுக்கு மேலான பதவியோ அல்லது எல்லாரையும் விட மேலான அதிகாரமோ வந்து விடுகிறது என்று வத்துக் கொள்ளுங்கள். அவனைச் சுற்றிச் சிலர் ஈ போல மொய்த்துக் கொண்டு திரிவர்.திரிந்தாலும் பரவாயில்ல, பிறகு தனக்கு கீழுள்ளவனை அல்லது பிடிக்காதவனுக்கு தான் இன்னாருடை ஆள் தெரியுமா எண்டு காட்டுற திமிர் இருக்கே அப்பப்பா பொறுக்கவே முடியாது. அப்பெல்லாம் சிவன்ர கழுத்தில இருக்கிற பாம்பு கருடனைப் பாத்து நக்கலா "எப்பிடிச் சுகம்?" எண்டு கேக்கிறதான் ஞாபகத்துக்கு வரும்.அவங்க காட்டில மழைபெய்யுது, அந்த மழை நமக்கும் வராமலா போகப் போகுது எண்டிட்டு இருக்கவேண்டியதான். இங்கு நான் வாழும் சமூகத்தில் ஏற்பட்ட சொந்த அனுபவத்தில வந்ததுதான் இந்தப் பதிவுமேலும் எனக்குப் பிடித்த இலக்கிய பதிவுகள் எல்லாம் என் தாயின் நினைவாக எழுதப்பட்டவை.அத்தனை ஔவையின் பாடல்களும் சின்ன வயதில் அம்மாவிடம் கற்றுக் கொண்டதால் அவற்றை அனுபவித்து ரசித்து எழுதினேன். அதில் மிகவும் பிடித்தது இது!அவுஸ்திரேலியாவில் எனக்கு மிகவும் பிடித்தமான விலங்கு பற்றியும் ஒரு பதிவு .என் சின்னஞ்சிறு மாணவர்க்கும் இந்த விலங்கு நன்றாகப் பிடிக்கும் என்பதாலும், தமிழில் எழுதி பதிவாகப் போட்டால் எல்லாருக்கும் பிடிக்குமே என்ற எண்ணத்திலும் இதை எழுதினேன். பலருக்கு உண்மையில் இந்த விலங்கு பற்றிய தகவல்கள் புதிதாக இருந்ததால் அதை எழுதியதற்கு பாராட்டியிருந்தனர். அத்தனை பேருக்கும் நன்றி.


அரைபிளேடுக்கும் எனக்குஅழைப்பு விடுத்ததிற்கு நன்றி

ஓற்ரிசம் (Autism - (அல்லது ஆட்டிசம்) உள்ள பிள்ளைகளுக்கு எப்படி கற்பிப்பது?

இது ஒரு மூளைவளர்ச்சிக்குறைபாடு ஆகும்.அதாவது மூளை நன்கு தொழிற்படாத தன்மை (Dysfunctional brain )இதை நல்ல தமிழில் "தற்புனைவு ஆழ்வு" என்கிறார்கள். சிலர் இதை நோய் அல்ல என்கிறார்கள். 1943 ல் Dr.Kanner என்பவர் முதன்முதலாக இது பற்றிய தன் ஆய்வை வெளியிட்டார். உலகில் பல குழந்தைகள் ஓற்ரிசத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.எனினும், ஆண் குழந்தைகளையே அதிகமாகப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. இது உடலியக்க செயல்பாட்டில் ஏற்படும் கோளாறு. இதனால் குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் ஆற்றல் இல்லாமல் போகிறது.
பிறந்தமூன்று வருடங்களுக்குள் ஒரு குழந்தையிடம் தென்படத் தொடங்கும் ஓற்ரிசம் என்ற இந்தக் குறைபாட்டிற்கு உடல்ரீதியான அறிகுறிகள்கிடையாது.ஓற்ரிசத்திற்குரிய மரபியல் காரணம் என Dr.Kanner குறிப்பிட்டுள்ளார்.ஆனால் காரணம் எதுவாயினும், பல பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு "ஓற்ரிஸ்ரிக்" என லேபிள்(lable) அதாவது வகைப்படுத்துவதை விரும்புவதில்லை என அம்புலேற்ரறி என்ற சஞ்சிகையில் வந்த ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட அநேகமான குழந்தைகளைப் பார்த்தால் அவர்கள்
நேருக்கு நேர் கண்வைத்து மற்றவர்களை அல்லது முன்னின்று பேசுபவர்களை பார்க்கமாட்டார்கள்,
ஏதாவது ஒரு சொல்லை அல்லது சொற்றொடரைத் சில சமயங்களில்
திரும்பத் திரும்பச் சொல்வர்,அல்லத ஏதாவது சத்தங்களையும் இப்படிச் செய்யலாம்,தலையை அல்லது கை,காலை ஆட்டி ஆட்டி வித்தியாசமான சத்தம் போடுவார்கள். சிலருக்கு ஏதாவது குறிப்பிட்ட பாடங்களில் அதீத திறமை இருக்கும், வரலாற்றுச் சிறப்புமிக்க பலருக்கு இதன் குணாதிசயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. உதாரணமாக ஐசாக் நியூற்றன் ,சிலர் மனக் கணக்கு(கூட்டல்)நல்லாச் செய்வர். பேச்சுத்திறன் குறைவாகவோ அல்லது முழமையாக இழந்திருப்பர். சிலர் நீங்க சொன்னதை திருப்பிச் சொல்வர்,
சுற்றியிருக்கும் சடப்பொருட்களை ஆராய்வர், சில சமயங்களில் அவற்றின் அளவு, வடிவம், தன்மை பற்றி அறிவதில் ஆர்வமாயிருப்பர்.
இவர்களை தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும்.தினமும் ஒரே மாதிரியான ஒழுங்கு முறைக்குப் பழக்கப்படுத்தினால், தமது அலுவல்களை அந்த ஒழுங்கில் செய்ய முனைவர். இதனால் ஆசிரியர் அந்த வேறுமாற்றத்தை அக் குழந்தைகளுக்கு முன்கூட்டியே திரும்பத் திரும்பச் சொல்லி அதற்குத் தயார்ப்படுத்துவர்.அந்த ஒழுங்கில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால் அவர்களால் வேறுமற்றத்திற்கு ஒத்துப்போக முடிவதில்லை. உதாரணத்திற்கு,"கரன்,இண்டைக்கு உன்ர அம்மா 4 மணிக்குத்தான் வருவா. 3 மணிக்கு இண்டைக்கு வரமாட்டா" என திரும்பச் சொல்ல அக் குழந்தை அந்த மாற்றத்திற்கு தயாராகிவிடும்.
இல்லையேல்,மூர்க்கமாகிப் பக்கத்திலிருப்பவரைத் தாக்குவும் செய்வர்.சில குழந்தைகள் கையால் நிலத்தை விறாண்டுவர், சிலர் நெஞ்சில் அல்லது தலையில் ஓங்கி ஓங்கி அடிப்பர்.இக் குணமுள்ள பிள்ளைகளிடம் முற்பாதுகாப்பு (proactive) கற்பித்தல் முறகளைக் கடைப்பிடிப்பது நல்லது.

ஓற்ரிசத்தால் மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு, பேச்சு,அல்லது வேறு வகையில் சூழ இருப்பவரிடம் தொடர்பு கொள்ள இயலாத நிலை ஏற்படுகிறது. இதனால் ஓற்ரிசம் குறித்த விவரங்களைச் சிறு வயதிலேயே கண்டுபிடித்தால், அந்தக் குழந்தையின் வாழ்வில் நல்ல பயிற்சியின் மூலம் மேம்பாட்டினைஏற்படுத்தலாம்.படங்கள் மூலம் சொற்களைக் ற்பிக்கலாம்.(The pictures help develop word level vocabulary and early literacy skills. ) படங்களப் பயன்படுத்திக் கதைகள் சொல்லலாம்.சிறுவயதில் மொழி அறிவைப் புகட்ட இது உதவும் உதாரணத்துக்கு கீழுள்ள படங்களைப் பாருங்கள்.

அபிவிருத்தி அடைந்த நாடுகளான அமெரிக்கா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவ்வாறு குறைபாடுள்ள பிள்ளைகளுக்கென "விசேட பள்ளிக்கூடங்கள்"(Special School") உண்டு். அங்கு விசேட பாடத்திட்டம் , கற்பித்தல் முறை பின்பற்றப்படுகின்றன. ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களின் ஊனத்திற்கு ஏற்ப "தனிப்பட்ட கல்விதிட்டம்" (Indiviualized Education Plan -IEP) ) ஆசிரியர் எழுதிப் படிப்பிக்க வேண்டும்.

இனி, கீழுள்ள ஒலிவடிவத்தை (podcast) கேழுங்கோ.

அதில் சோமா முகபதியாய் தன் மகன் "ரிற்ரோ" வுக்கு "கெதியாச் சொல்லிக்கொடுக்கிற முறை"யைப் பற்றி ஆங்கிலத்தில் சொல்லுறா.இணைப்புக்கு
நன்றி: சிபி நியூஸ்