நவராத்திரி

நவராத்திரி அனுபவம்

துர்க்கை, ல்க்ஷ்மி, சரஸ்வதி

எங்கள் ஊரில் நவராத்திரி என்றால் வீட்டில் கும்பம் வைத்து வழிபடுவோம். செம்பு ஒன்றில் நிறைய நீர் நிரப்பி ஐந்து அல்லது ஆறு மாவிலைகளைப் பரவலாக செம்பின் மேல் அடுக்கி, அதன்மேல் முடியுள்ள தேங்காயை வைப்பதுதான் கும்பம்.ஒரு வாழை இலையின்மேல் மண்ணைக் குழைத்து அதில் நவ தானியங்களைப் போட்டு, நடுவிலே அந்தக் கும்பத்தை வைப்போம். நவராத்திரி முதல் நாள் அன்று இதைத் தான் முதலில் செய்வோம். அன்று இரவு முதல் ஒன்பது இரவும் வித வித பிரசாதங்கள் செய்து படைப்போம். வீட்டில் உள்ளோர் கூடிப் பசனை செய்வது ஓரிரு வீடுகளில் இருந்தாலும் எங்கள் வீட்டில் அம்மாதான் இவற்றையெல்லாம் செய்வா. நவராத்திரி நாட்களில் தலையில் குளிக்க வேண்டும், அதாவது தோய வேண்டும்; பின் கும்பிட வேண்டும்; அதன்பின் தான் சாப்பிடலாம் அல்லது விரும்பினால் விரதம் பிடிக்கலாம். இவை அம்மாவின் கட்டாயத்திற்காகச் செய்யப்போய் இப்போ என்னை அறியாமலே நவராத்திரி என்றால் அவை பழக்கமாகிவிட்டது.

பள்ளிக்கூடத்தில், நவராத்திரி நாட்கள் கொண்டாட்டம் தான்.இந்த பசனைகளால் இரண்டு பாடங்களைக் கடத்திவிடலாம் என்பதும்தாமன். தவிர, முச் சக்திகளின் படங்களை மேசைகளில் வைத்து, அலங்கரிப்பது ஒரு கலைதான். வித வித பட்டுச் சேலைகள், பூக்கள், தோரணங்கள்,பாலைகள் என்று ஒரே சோடினைதான்! ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வகுப்பின் பூசையாகக் கொண்டாடி, பத்தாம்நாள் பெரிய அக்காமார் (பெண்கள் பாடசாலை என்பதான் அண்ணன்மார் அங்கு இல்லை) அதாவது 10,11,12ம் வகுப்பு மாணவிகள் ஒருசிலர் கூட்டாகச் சேர்ந்து, பிரசாதங்கள் அதுதான் எல்லாருக்குமே தெரிந்த, பிடித்தமான அவல், கடலை, சக்கரைப்புக்கை (புக்கை=பொங்கல்) செய்ய, மற்ற பிரிவினர் சேர்ந்து மண்டபத்தை அலங்கரிக்க, என்று ஒரே கொண்டாட்டந்தான்! இதைவிட, ஒன்பதாம் நாள் கலை நிகழ்ச்சிகளாக பாட்டு, நடனம், நாடகம், பேச்சு என நடைபெறும்.என்னதான் சில மாணவர்க்குத் திறமைகள் இருந்தாலும் சிலருக்குத்தான் அதில் வாய்ப்புகள் கிடைக்கும். இருந்தாலும் கலை நிகழ்ச்சிகளைப்பார்த்து கைதட்டுவதும் ஒருவித குதூகலந்தான்!.

வருடாவருடம் நவராத்திரியும் வரும். என் மனதில் இந்தப் பழம் நினைவுகளும் வந்து தலைகாட்டும். வருடாந்தம் இவற்றை அசைபோட்டதால்த் தானோ என்னவோ அவை அப்படியே அடிமனதில் ஆழப்பதிந்துவிட்டன. இப்படி ஒவ்வொருவருக்கும் வேரு வேறு வித அனுபவங்கள் நவராத்திரி காலங்களில் ஏற்பட்டிருக்கும். அவற்றை அறிவதும் சந்தோசமாத்தானிருக்கும்.

துர்க்கையின் முதல் மூன்றுநாளுக்காக ஒரு பாடல் . கேட்டும்பாருங்கள்.

தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே

லக்ஷ்மி அம்மனுக்காக இந்தப்பாடல்

மஹாலக்ஷ்மியே

சரஸ்வதி தாய்க்காக இந்தப்பாடல் (தரவிறக்கி கேட்கவும்)

ஆறுஅறிவோடு பேருபதினாறும் அருளும் கலைமகளே
படம் நன்றி: கூகிள்
பாடல்கள் நன்றி: psusheela.org
raaga.com

டொக்டர் (doctors) களுக்கு ஆறு - குவளை கோப்பி( coffee)



டொக்டர்களின் (doctors) களைப்பைப் போக்க ஆறு குவளை காப்பி(coffee)

பொதுவாக, டொக்ரருக்கு படிக்கிறது என்பதுவே பகீரப் பிரயத்தனம்.பின் வேலைக்குப் போய்... அதிலும் இப்பிடியா...........?

இங்கே டொக்டருக்குப் படிக்கும் மாணவர்களே இப்பவே கோப்பி குடிச்சுப் பழகுங்கள்!

நோயாளிகள் சிலரின் மரணத்திற்கும், தவறான சிகிச்சையளிப்பிற்கும் இளம் டொக்ரர்களின் நீண்ட நேர வேலைப் பளுவும், அதனால் ஏற்படக்கூடிய களைப்பும், தூக்க கலக்கமும் காரணமாக அறியப் பட்டதிலிருந்து, அவுஸ்ரேலியாவில் குயின்ஸ்லாந்து சுகாதார அமைச்சு இதற்கு ஒரு மலிவானதும், இலகுவில் பெறக்கூடியதுமான ஒரு தீர்வை கண்டு பிடித்துள்ளது.
டொக்ரர்மார் கோப்பி அடிக்கடி குடித்தால்(ஆறு கப் வரை குடிக்கலாம்) விளிப்பாக, களைக்காமல் நீண்ட நேரம் வேலைசெய்ய முடியுமாம். கோப்பியிலுள்ள கஃபைன் (caffeine) எனப்படும் பொருள் இவ்வாறு செய்கிறதாகக் கூறப்படுகிறது. களைப்பு, தூக்கத்தை போக்கி உற்சாகத்தைத் தரக் கூடிய மாத்திரைகளைவிட இது மலிவானதாகச் சொல்லப்படுகிறது.இதற்கு பலரும் பலவித கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றனர்.
"சரி, ஏன் டொக்ரர்மார் கூட நேரம் வேலைசெய்ய வேண்டி இருக்கு?போதியளவு டொக்ரர்மார் இல்லாமைதான்!. அப்படியானால் ஏன் போதியளவு டொக்ரர்களை பெறமுடியவில்லை? போன்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன."

"முதலில் இந்த கொள்கையைக் கொண்டுவந்தவரை வேலைநீக்கம் செய்யவேண்டும்"
"இந்தக் கொள்கையின்படி பார்த்தா, கோப்பியைக் குடிச்சு, குடிச்சு போக்குவரத்துத் துறையினராற் கூட இந்தளவுக்கு கூடிய நேரம் வேலசெய்ய முடியாதப்பா"
" இதிலென்ன பெரிசா தவறு இருக்கு? டொக்ரர்மார் வயதுக்குவந்த பக்குவமுள்ளவர்கள்.அவர்கள் கோப்பியைக் குடிச்சு வேலை செய்யிறதில என்ன தவறு?
கோப்பி கனக்க குடிச்சா இரண்டாவது ரக நீரிழிவு நோய்கூட வராதாமே!"

சரி நீங்க என்ன நினைக்கிறீங்கள்?
நன்றி: news.com

சனீஸ்வரன் வழிபாடு


சனீஸ்வரன் வழிபாடு
அட்டமத்தில் சனி இருப்பவர்களும் ஏழாண்டுச் சனி இருப்பவர்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளுவதால் தீமைகள் குறைந்து நன்மையுமுண்டாகும். சிவனை வணங்கி நவக்கிரக சந்நிதியிலே நவக்கிரகங்களை வலம்வந்து சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி,
முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலி னார்கள் மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ் சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே !
என்று மேலுள்ள பாடலைப் பாடி, வணங்குவதால் சகல துன்பங்களும் நீங்கப்பெற்று நீண்ட ஆயுள் கிட்டும். இந்த சனீஸ்வர விரதத்தை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் அனுட்டிக்க முடியாதவர்கள் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமாவது அனுட்டிக்க வேண்டும். வருகிற 19ம் திகதி முலாவது புரட்டாதிச் சனி ஆரம்பமாகிறது. அன்றிலிருந்து அடுத்து வருகிற 4 சனிக்கிழமைகள் புரட்டாதிச் சனியாக இருக்கும்.விரதமிருந்து , எள்ளெண்ணை விளக்கெரித்து, சனீஸ்வரனை வழிபடுங்கள்.

நவக் கிரக வழிபாடு

நாம் எப்போதும் நினைத்தது எல்லாம் நடைபெறவில்லையோ, கடுமையாக உழைத்த எல்லாத்துக்கும் எப்போதுமே நல்ல பலன் கிடைக்கவில்லையோ அங்கேதன் இறைவன் தான் ஒருவன் இருப்பதை நினைவுபடுத்துகிறான்.
ஒருவன் பிறந்த நேரத்தில் வானத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து எழுதப்படும் ஜாதகம்தான் அவனது விதி.அந்த ஒன்பது கிரகங்களும், பன்னிரு ராசிகளில் அவை நிற்கின்றபலமும், பார்வைகளும், கூட்டுச் சேர்க்கையும், திசா புத்திகளும் தான் அவன் பிறந்ததிலிருந்து ,வாழ்ந்து, பின் இறப்பதுவரை நடைபெறும் ஏற்ற இறக்கம், லாப நட்டம்,வெற்றி தொல்வி, நோய் ஆரோகியம் போன்ற எல்லாவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.இந்த கால இடைவெளியில் எல்லாருக்கும் வாழ்வில் ஏற்ற இறக்கம் வரத்தான் செய்யும்.இது பூர்வ கர்மத்தால் வருவது.அதனால்த் தானே இந்தப் பிறப்பும்!
ஆகவே, எவனுக்கும் வாழ்வில் ஆதோ ஒரு வடிவில் தாழ்வு ஏற்பட,துன்பம், கவலை இவை கூடவே வந்துவிடுகிறது. இறைவழிபாடு ஒன்று தான் இதற்கு மருந்து.
இதற்காகத்தான் பரிகாரங்கள், சாந்திகள் செய்யப் படுகின்றன. அப்படியானால் இவைகளைச் செய்தால் பாவங்கள் போய்விமா என்று நீங்கள் கேட்கலாம்.குறையலாமே தவிர முற்றாக நீங்காது. தவிர, பரிகாரங்கள் செய்யும்போது பூசைகள், தியானங்களால் மனம் அவற்றிலே ஒன்றிவிடும்போது உங்களின் துயரங்களை சற்று மறந்துவிவீர்கள். அதுமட்டுமல்லாமல் இனி இறைவன் நமை கைவிடமாட்டான் என்ற நம்பிக்கையும் கவலகளை மறக்கச் செய்துவிடும்.
அதனால் சோதிடத்திற்கும், (எந்தக் கடவுளானாலும் கிரகங்களானாலும் பரவாயில்லை) இறை(கிரக)வழிபாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது.
கிரகங்களை வழிபட அநேக ஸ்லோகங்கள், ஸ்தோத்திரங்கள் சமஸ்கிருத்தத்திலேயே உள்ளன.சம்ஸ்கிருத மொழி தெரியாதவர் அவற்றை தமிழில் எழுதி பாடும்போது அவற்றை சரியான உச்சரிப்புடன் பாடமுடியாதிருக்கும். எதற்கு இந்தக்கஷ்டம்? தமிழிலேயே கிரகங்கள் ஒவ்வொன்றுக்குமான பாடல்கள் உண்டு. இதோ..!
நவக் கிரகங்களை வலம் வந்து இப் பாடலைப் பாடி வழிபட்டுப் பலன்பெறுங்கள்!


சூரியன், சோமன், செவ்வாய், சொற்புதன், வியாழன், வெள்ளி
காரியும் இராகு, கேது கடவுளர் ஒன்பதாமத்
தாரியில் சக்கரத்தைத் தரித்திரர் பூசித்தாலும்
பாரினில் புத்திரருண்டாம் பாக்கியம் நல்கும் தானே !



இனி, தனித்தனியே கிரக வழிபாட்டுக்கான பாடல்கள் அடுத்த பதிவில் வரும் ..........

உங்கள் அன்பான பின்னூட்டங்களை காண ஆவலுடன்..............

செல்லி
படம் நன்றி: கூகிள்

ஒட்டக இனப் படுகொலை, செய்யிறது..யார்?




CNBC அமெரிக்கத் தொலைக் காட்சியில் செய்தி வாசிப்பவர் (Miss Burnett) செல்வி பேணெற் "ஒஸ்ரேலியாவில்,தொடர் கொலைகாரர் ஒருத்தர் இருக்கிறார் அவரின் படத்தை பாருங்கள்" என்று கூறிய பின்னர், (Kevin Rudd) கெவின் றட் ஒஸ்ரேலிய பிறைமினிஸ்ரரின் படத்தை போட்டுக் காட்டினார்.
இப்படி ஒரு பட்டப் பெயர் ஏன் ?
காரணம் " ஒட்டக இனத்தைஅழிக்க தொடங்கியிருக்கிறார் " என்பது தானாம். (Mr Rudd) றட் அவர்கள் ஒட்டக இனஅழிவையிட்டு ("camelcide")கவலப்படுறார் எண்டு Jim Cramer, CNBC's colourful financial guruவும் சமாதானம் சொல்லுறார்.

உண்மையில் இந்த ஒட்டகங்களால் எத்தனையோ மில்லியன் டொலர்கள் நட்டமாகிக் கொண்டிருப்பதால்த் தான் இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டதுக்கு காரணமே!. அரசியலில் உள்நாட்டில ஆயிரம் பட்டப்பேர் வாறது சகஜமப்பா!, ஆனா இது அதுவும் அமெரிக்காவில கெவின் றட் க்குச் சூட்டப்பட்டதால கொஞ்சம் ஹாஸ்யமாத்தனிருக்கு,

நன்றி:http://www.telegraph.co.uk
For Video

கந்த சஷ்டி - யாழ் அனுபவம்

கந்த சஷ்டி விரதம் தமிழகத்தில் 30.10.08 முதல் 4.11.08 வரை அனுட்டிக்கப்படுகிறது. ஆனா இங்கு 29.10.08 ஆரம்பமாகிறது என்கிறார்கள்.
மூன்று சக்திகட்கு ஒரு நவராத்திரி போல,சிவனுக்கு ஒரு சிவராத்திரி போல, கந்தனுக்கு உகந்த விரதம் கந்த சஷ்டி. இது ஆறுநாட்கள் விரதம் இருப்பதாகும்.சகல பாவங்களையும் போக்கும் விரதம் எண்டு எங்களூரில் சொல்லுவினம்.ஐப்பசி மாதத்தில் தீபாவளி முடிந்து அமாவாசைக்கு அடுத்தநாள், பிரதமை திதி முதல் சஷ்டிதிதிவரை இந்த விரதம் இருப்பினம்.அநேகமாய் யாழ்ப்பாணத்தில் எல்லா முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

இது 2005 இல் கோயில் கோபுர அழகுடனான தோற்றம்.

சுழிபுரம் பறாளாய் முருகமூர்த்தி கோயிலில் இந்த ஆருநாளும் முருகனுக்கு விசேடபூசைகள் இடம்பெறும். ஆறாம் நாள் சூரன்போர் நடைபெறும்.ஆறு தினங்களும் இரவில் சிலர் மிளகும் தண்ணீரும் என உபவாசமிருப்பவர்கள், சிலர் பாலும் பழமும் மட்டுமே உட்கொண்டு விரதமிருப்பவர்கள். வயதானவர் பயறு அவித்துச் சாப்பிடுவர். அதற்கும் இயலாதவர் ஒரு வேளை சோறு உண்பர்.அப்போ அங்கு மழைக்காலம் என்பதால் தண்ணீரும் அருந்தாமல் விரதம் இருந்தா நா வறண்டு போகாது. காற்றிலும் ஈரப்பதன் இருக்கும்.ஆனா இங்கு பிறிஸ்பேனில் கடும் வெயில் தொடங்கிவிட்டது.நீரும் அருந்தாமல் விரதமிருப்பது உண்மையிலேயே ஒரு கடுந் தவம்தான்.


பறாளாய்க் கோயிலில் முருகனடியார்கள் சிலர் வீட்டில் மச்ச மாமிசம் உண்பரால் துப்பரவு இருக்காது எண்டு கந்தர்சஷ்டி கவசம் பாடியபடி கோயிலியே ஆறு நாளும் தங்கி இருந்து விரதம் பிடிப்பர்.

இருப்பினும், ஊர் ஞாபங்கள் வரும்போது கண்களும் குளமாகும்.1997 குண்டு, செல் அடிபாடுகளால் இப்படியாக இந்தக் கோயில் கோயில் தேர் இருந்தன.

தமிழருக்கு ஒரு விடிவு கிடைக்க தமிழ்க் கடவுள் முருகனை மண்டாடுவம். அதற்காக சஷ்டி கவசம் பாடி ஆறு நாளும் முருகனை வேண்டி வழிபடுவோம்.

இன்று சன்னதி முருகனுக்கு தேர்த் திருவிழா




பழைய ஞாபகங்கள் வரும்போது கவலையாயிருக்கிறது. முன்பு சன்னதி முருகனை தேரில் தந்த காட்சியைப் பாத்து கண்ணீர்மலக வழிபட்டேன். இன்று அங்கு போகவும் முடியாமல் படங்களைப் பாக்க கண்ணீர் வருகிறது.
நல்லூரில் தங்க வடிவில் வடிவேலன் சன்னதியில் வெள்ளி வடிவேலன்.படம் நன்றி: நல்லூர்க்கந்தன்

என்னைப் போல் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் உன் அடியவர்க்கும் எம் தாயகத்தவருக்கும் சன்னதி வேலவா நீதான் அருள் புரிய வேண்டும்!

"பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே"
"சன்னதி வேலனுக்கு அரோகரா" இன்னமும் காதில் கேட்கிறது.
எங்கள் தாயகத்தில் பழம்பெரும் கோயில்களில் ஒன்றான சன்னதி ஆலயத்தைப் பற்றி சகவிடயங்களயும் அறிய கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்
சன்னதி வேலன்

நல்லூர் கந்தசுவாமி கோயிற் திருவிழா படங்கள் 3

காவடிக் கந்தனுக்குத்தான் எத்தனை காவடிகள்!







தீர்த்தத் திருவிழா


பார்க்கும் உங்களுக்கும் நல்லூர்க் கந்தன் அருள்பாலிக்கட்டும்!