குயின்ஸ்லாந்தில்(Queensland) பவன்(BOWEN) மாம்பழமும் புட்டும்

குயின்ஸ்லாந்தில்(Queensland) பவன்(BOWEN) மாம்பழமும் புட்டும்
புட்டோடு தின்ன கறுத்தக் கொழுந்து மாம்பழம் இல்லையே என் ஏங்கிய எமக்கு பவன் மாம்பழம் ஒரு வரப்பிரசாதம்.மார்கழி நடுப்பகுதியிலிருந்து மாசி முற்பகுதிவரை பவன் மாம்பழம் மிகவும் மலிவாக கிடைக்கும். இது இங்கு கோடை விடுமுறைக் காலம் என்பதால், எங்கள் வீட்டில் தினமும் காலையில் புட்டும் மாம்பழமும்தான் நித்திய மேளம். படத்தைப் பாருங்கள் உங்களுக்கும் ஆசை வரும்.ஐரோப்பிய குடியேற்ற ஆரம்ப காலங்களில் வடகுயின்ஸ்லாந்திற்கும் தென்கிழகாசியாவிற்கும் ைடையிலான வியாபார கப்பல்களூடா மாம்பழங்கள் அறிமுகப் படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.(1) அவுஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான மாம்பழம் கென்சிங்ரன்( Kensington Pride or Bowen Special, ) அல்லது பவன் எனப்படும் விசேடசமான மாம்பழந்தான்.இது கடும் மஞ்சள் நிறமுடைய அடிப்பாகத்தில் சிவப்பு நிறமுடைய பெரிய மாம்பழமாகும். இந்த மாம்பழம் தும்பற்ற, சதைப்பிடிப்புள்ள, வைற்றமின் "சீ" நிறைந்த மிக இனிப்பான மாம்பழம் ஆகும்.
படம்: நன்றி (4) .bowentourism.

வட குயின்ஸ்லாந்தில் பவன் (Bowen) எனும் இடத்தில் விளைவதால் இதற்க்கு இந்தச் சிறப்புப் பெயர். இந்த நகரத்திலிருந்து 4 மி.மீ தூரத்தில் (The BIG Mango) "ஒரு பெரிய மாம்பழம்" என்ற இடம் சுற்றுலாப் பிரயாணிகளைக் கவரும்வண்ணம் அமைந்திருக்கிறது. இந்த இனிய மாம்பழம் பவன் நகரத்தின் பெயருக்குப் புகழ் சேர்ப்பதால்அங்கு "ஒரு பெரிய மாம்பழம்" செயற்கையாகச் செய்யப்பட்டு இருக்கிறது. இதனைப் படத்தில் காணலாம்.

பவன் (BOWEN) மாம்பழம் என அழைக்கப்படும் கென்சிங்ரன் பிறைட்(Kensington Pride) இன மாம்பழந்தான் அவுஸ்திரேலியாவிலேயே மிகச் சிறந்த மாம்பழம் எனில் தவறாகாது. அண்மைக் காலதில் கிளென்,நாம் டொக் மாய், ஏளி பேட், புளோரிகன், ஆன், இர்வின், கென்ற் (Glenn, Nam Dok Mai, Early Gold, Florigan, Ann, Irwin,Kent)என்ற பல வகை மாம்பழங்கள் சந்தைக்கு வந்தபோதும், (3)அவற்றில் எந்த மாம்பழமும் பவன் மாம்பழத்தின் உருசிக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. அதனால் எப்பவுமே பவன் மாம்பழத்திற்கு படு கிராக்கி உண்டு.இப்பிடி எத்தனை மாம்பழங்கள் இருந்தாலும் எமக்குப் பிடித்ததும் (BOWEN)மாம்பழம்தான். சித்தினிப்பான சதைப் பிடிப்புள்ள மிகவும் பெரிய பழம். தின்ன தின்னத் தெவிட்டாதது.

இந்த பவன் மாமரம் நடுத்தரத்திலிருந்து பெரிய மரம் வரை காணப்படுகிறது.(3) இம் மரம் இந்தியாவில் தோன்றியதாக முதலில் கருதப்பட்டாலும், மிக நெடுங்காலமாக இம்மாம்பழ உற்பத்தி இடம்பெற்று வருவதால் உண்மையில் இது எங்கு தோன்றியது எனச் சொல்வது கடினமெனக் கருதப்படுகிறது.

திறமான மாம்பழக் கொட்டையிருந்து பவன் மாமரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தக் கொட்டை பல மாங்கன்றுகள் முளைக்கக் கூடிய தன்மையைக் கொண்டதாம். அண்மைக் காலத்தில் நியூசவுத் வேல்ஸ் போன்றஏனைய இடங்களில் "ஒட்டு இன பவன்" மாமரச் செய்கை இடம் பெற்றுவருகிறது(2) என
பசும்பொன் தோட்ட கருத்துக்கள் (GREENGOLD GARDEN CONCEPTS) தெரிவிக்கின்றன

படம்:நன்றி GREENGOLD GARDEN CONCEPTS
யாழ்ப்பாணத்தில் எந்தளவுக்கு கறுத்தக் கொழுந்து மாம்பழம் பிரசித்தி பெற்றதோ அந்தளவுக்கு அவுஸ்ரேலியாவில் பவன் மாம்பழ்ம் பிரபல்யமானது. வருடம் முழுவதும் வெப்பமுள்ள வட குயின்ஸ்லாந்து மாநிலத்தின் காலநிலையே இந்த மாம்பழச் செய்கைக்கு ஏற்றதாயினும்,நியூசவுத் வேல்ஸின் கடற்கரையோரப் பகுதிகளிலும் இச் செய்கை இடம் பெறுகிறது. என்றாலும் குயின்ஸ்லாந்து பவன் மாம்பழத்திற்குத்தான் சரியான கிராக்கி உண்டு.
உசாத்துணை வலைப் பக்கங்கள்:
1. http://www.freshforkids.com.au/mango.htm
2. http://www.ricecrc.org/reader/tropicalfrt/mango-growing-5004.pdf
3. http://www.greengold.com.au/greengold/CARENOTES/CARENOTES/mango.htm
4. http://www.bowentourism.com.au/things_do_see/the_big_mango.html

அழகியின் ஆக்கத்தோடு அடியேன் ஆக்கமும் சேர்த்து ஆனது இக் கட்டுரை.
______________________________________________________________________________________________________
ஓரிரு சொற்களிலாவது உங்கள் கருத்தைச் சொன்னால்.....மிக நன்றி


14 Responses to “குயின்ஸ்லாந்தில்(Queensland) பவன்(BOWEN) மாம்பழமும் புட்டும்”

ஆகா!!! Queensland ல் மாம்பழம், முருங்கை எல்லாம் விளைகிறதா? உங்க பதிவை இப்பதான் பார்த்தேன். இவையெல்லாம் Fiji தீவிலிருந்து வருகிறது என்று நினைத்திருந்தேன். நன்றி :)

இந்தப் பதிவை முன்னொருக்கால் வாசித்திருக்கின்றேன், நல்ல பதிவு, கொடுத்துவைத்த இடத்தில் இருக்கிறீர்கள்

வணக்கம் பிரபா
//இந்தப் பதிவை முன்னொருக்கால் வாசித்திருக்கின்றேன்,//
அழகியின் பதிவில் இருந்தது.அழகியின் விருப்பத்திற்கிணங்க மேலும் சில தகவல்களுடன் இந்தப் பதிவு போட்டிருக்கிறேன்.

மாம்பழம்//கொடுத்துவைத்த இடத்தில் இருக்கிறீர்கள்//

உண்மையில் நாம் அதிஷ்டசாலிகள்தான்.
நன்றி

வணக்கம் கோபாலன்

//Fiji தீவிலிருந்து வருகிறது //
ஆமாம் அங்கிருந்தும் முருங்கைக் காய்,மாம்பழம் சிட்னி,மெல்போனுக்குத்தான் வருகின்றன.அவையில் எந்த உருசியும் எங்கள் முருங்கைக் காய், பவன் மாம்பழத்திற்கு ஈடாக வராது.அப்பிடி ஒரு சுவை.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி,கோபாலன்.

நீங்கள் மெல்பேணில இல்லையெண்டதை அறிஞ்சு பேச்சந்தோசம்.

அருமையான விவரங்கள்.
எங்கியோ படிச்ச ஞாபகம்வேற.
அப்புறம் பின்னூட்டத்துலே விவரம்
பிடிபட்டது. அப்படியே போயிட்டா எப்படி? இங்கே நம்ம
ஞானப்பழம்
பாருங்க.

வசந்தன் வாங்க..வாங்கையா

//நீங்கள் மெல்பேணில இல்லையெண்டதை அறிஞ்சு பேச்சந்தோசம். //

ஓகோ உதுக்கே மேனை எப்ப பாத்தாலும் எனக்கு நானா க்கன்ன கானா ல்லன்னா விட்டு,........
மேனை உதுக்கேண்டாலும் நான் மெல்போனுக்கு உடன திரும்பி கண்டீரோ!
ச்ச. எக்சாமுக்குப் படிக்கிற பிள்ளையைக் குழப்புவானேன் எண்டிட்டிருக்கிறன்.
வருகைக்கு நன்றி, வசந்தன்

மாம்பழத்தையும் புட்டையும் பாக்க வாய் ஊறுது. :(
நல்ல தகவல்களையும் தந்துள்ளீர்கள்

jeevagv said...

ஆஹா, அருமை.
இங்கே அமெரிக்காவில் கிடைப்பதெல்லாம் அதிகமாக மெக்ஸிகோ மாம்பழங்கள்தான். நார்கள் நிறைந்திருந்த்து சுவையைத் தடுக்கும்.

வி. ஜெ. சந்திரன்
//நல்ல தகவல்களையும் தந்துள்ளீர்கள்//

ரொம்ப நன்றி.

ஜீவா (Jeeva Venkataraman)

//ஆஹா, அருமை.//
மிகவும் நன்றி
// இங்கே அமெரிக்காவில் கிடைப்பதெல்லாம் அதிகமாக மெக்ஸிகோ மாம்பழங்கள்தான். நார்கள் நிறைந்திருந்த்து சுவையைத் தடுக்கும். //
புளோரிடாவில் நல்ல மாம்பழங்கள் கிடைக்காதா?
வருகைக்கு நன்றி

Anonymous said...

எங்க வீட்டில் மாமரமே இருக்கு ... உங்க வீட்டில் இல்லையா?

இப்படி படத்தை போட்டு பலரின் சாபத்தை வாங்குகிறீர்களே...ஹி ஹி ஹி

enjoy!

வணக்கம் தூயா
//எங்க வீட்டில் மாமரமே இருக்கு ... உங்க வீட்டில் இல்லையா?//
வீட்டில மாமரம் வைக்க விருப்பம் ஆனா பொசம் வந்து பிச்சனை தருமாம் எண்டினம் அதால விட்டிடன்.
//இப்படி படத்தை போட்டு பலரின் சாபத்தை வாங்குகிறீர்களே..//விலாசத்தை தந்தா அனுப்பிவிடுறனே!
வருகைக்கு நன்றி.

Anonymous said...

Thanks for writing this.