வெள்ளைக் கத்தரிக்காய்

பிறிஸ்பேனில் இந்தக் கத்தரிக்காய் அருமையாகக் கிடைக்கிறது. இது காஸ்பர் (Casper)என்ற இனமாகும்.


இந்தப் பதிவை internet Explorer இல் பாருங்கள் . வீடியோவில் பார்க்கலாம்.
Fire fox இல் வீடியோ தெரியாது; பார்க்க முடியாது.

இந்தக் கத்தரிக்காயைப் பார்க்கும்போது எனக்கு மட்டுவில் வெள்ளைக் குண்டுக் கத்தரிக்காய்தான் நினைவுக்கு வருகிறது.இந்த இனத்தை கோஸ்ற்பஸ்ரர்(Ghostbuster) எனப்படுகிறது.இந்த மட்டுவில்க் கத்தரிக்காய் கறியை பூநகரி மொட்டைக் கறுப்பன் புழுங்கலரிசிச் சோற்றுடன் திண்டால் அப்பிடி ஒரு தனி ருசி!

2 Responses to “வெள்ளைக் கத்தரிக்காய்”

செல்லி!
இந்த உருவில் வெள்ளைக் கத்தரி இப்போதே பார்க்கிறேன். வெள்ளை உருண்டை வடிவம் இலங்கையில் அறிவு தெரிந்த
காலத்திலிருந்து தெரியும்.
ஊரில் கத்தரிக்காய் தனிச் சுவையே
இங்கு அதே சுவையில் இல்லை.செயற்கை உரத்தின் பின் இலங்கையிலும் பழைய சுவையில்லை.
தோட்டம் சம்பந்தமான நிகழ்சியில் கத்தரியில் 350 வகையுண்டானெனக் கூறக் கேட்டேன்.
படம் அழகானத் தான் இருக்கிறது.

யோகன்

//இந்த உருவில் வெள்ளைக் கத்தரி இப்போதே பார்க்கிறேன்.//
நானும் இங்குதான் முதல் முதலாகப் பாத்தேன். அதுவும் பிறிஸ்பேனில்.

//ஊரில் கத்தரிக்காய் தனிச் சுவையே//.ஓம் அது அப்போ! சுவைத்தவைக்குத்தான் அது தெரியும்.

//செயற்கை உரத்தின் பின் இலங்கையிலும் பழைய சுவையில்லை.//
பொதுவாக எல்லா மரக்கறிகளுக்கும் இதே கதிதான்.பாக்க வடிவா,இருக்கு ஆனா சுவைதான் இல்லை.
//தோட்டம் சம்பந்தமான நிகழ்சியில் கத்தரியில் 350 வகையுண்டானெனக் கூறக் கேட்டேன்.//
உண்மைதான். ஏகப்பட்ட இனமிருக்கு. சீனரின் கடைகளில் பலவகை இருப்பதைக் கண்டிருக்கிறேன்

பெரிய கறுத்த கத்தரிக்காய் இங்கு எப்பவும் கிடைக்கும். ஆனா அது ருசி இல்லை. இங்க கிறில்ல சுட்டு சாப்பிடுறவையள்