நான் எழுதியவைகளில் எனக்குப் பிடித்தவை ---அரைபிளேடின் அழைப்பிற்கிணங்க

எனக்கு இப்படி எழுத ஒரு வாய்ப்பைத் தந்த அரைபிளேடு அவர்களுக்கு முதலில் ஒரு கோடி வணக்கங்கள்!

நன்றாக எழுதிக் கொண்டிருக்கும் ஏனைய நண்பர்களைப்போல நான் எதுவும் பெரிசா எழுதியிருக்கிறேனா என்றால் என்னைப் பொறுத்தவரை இல்லை என்றுதான் சொல்லுவேன்.
இருந்தாலும், நான் அதிக நேரமெடுத்து ஆராய்ந்து எழுதியது முருங்கை பற்றிய பதிவுதான்.

அடுத்ததாக, ஒருவனுக்கு மேலான பதவியோ அல்லது எல்லாரையும் விட மேலான அதிகாரமோ வந்து விடுகிறது என்று வத்துக் கொள்ளுங்கள். அவனைச் சுற்றிச் சிலர் ஈ போல மொய்த்துக் கொண்டு திரிவர்.திரிந்தாலும் பரவாயில்ல, பிறகு தனக்கு கீழுள்ளவனை அல்லது பிடிக்காதவனுக்கு தான் இன்னாருடை ஆள் தெரியுமா எண்டு காட்டுற திமிர் இருக்கே அப்பப்பா பொறுக்கவே முடியாது. அப்பெல்லாம் சிவன்ர கழுத்தில இருக்கிற பாம்பு கருடனைப் பாத்து நக்கலா "எப்பிடிச் சுகம்?" எண்டு கேக்கிறதான் ஞாபகத்துக்கு வரும்.அவங்க காட்டில மழைபெய்யுது, அந்த மழை நமக்கும் வராமலா போகப் போகுது எண்டிட்டு இருக்கவேண்டியதான். இங்கு நான் வாழும் சமூகத்தில் ஏற்பட்ட சொந்த அனுபவத்தில வந்ததுதான் இந்தப் பதிவுமேலும் எனக்குப் பிடித்த இலக்கிய பதிவுகள் எல்லாம் என் தாயின் நினைவாக எழுதப்பட்டவை.அத்தனை ஔவையின் பாடல்களும் சின்ன வயதில் அம்மாவிடம் கற்றுக் கொண்டதால் அவற்றை அனுபவித்து ரசித்து எழுதினேன். அதில் மிகவும் பிடித்தது இது!அவுஸ்திரேலியாவில் எனக்கு மிகவும் பிடித்தமான விலங்கு பற்றியும் ஒரு பதிவு .என் சின்னஞ்சிறு மாணவர்க்கும் இந்த விலங்கு நன்றாகப் பிடிக்கும் என்பதாலும், தமிழில் எழுதி பதிவாகப் போட்டால் எல்லாருக்கும் பிடிக்குமே என்ற எண்ணத்திலும் இதை எழுதினேன். பலருக்கு உண்மையில் இந்த விலங்கு பற்றிய தகவல்கள் புதிதாக இருந்ததால் அதை எழுதியதற்கு பாராட்டியிருந்தனர். அத்தனை பேருக்கும் நன்றி.


அரைபிளேடுக்கும் எனக்குஅழைப்பு விடுத்ததிற்கு நன்றி

9 Responses to “நான் எழுதியவைகளில் எனக்குப் பிடித்தவை ---அரைபிளேடின் அழைப்பிற்கிணங்க”

Anonymous said...

அக்கா

நானும் பிறிஸ்பேனில தான் இருந்தாலும் நீங்க ஒரு கரை இந்தக் கரை நான் அந்தக் கரை. சந்திக்கவே முடியலை; உங்க பதிவை பாக்கவும் முடியலை.
மன்னிச்சுக்கோங்க.
பிரியமுடன்
சறோ

லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போட்டிருக்கிறியள்

நன்றி.

:)

சுட்டிகளை படித்துக் கொண்டு இருக்கிறேன். :)

சறோ
மகளின் படிப்பில் கவனமா இருந்திருப்பியள். மருத்துவத் துறையில் படிக்க அனுமதி கிடைச்சிருக்கிறதாம். வாழ்த்துக்கள்!

பிரபா
நானிப்பெல்லாம் மிக லேட்டாத்தான் தமிழ்மணத்திற்கு வாறேன்.நேரமின்மைதான் காரணம்.:-(

அரைபிளேடு
வருகைக்கு நன்றி. இந்தப் பதிவுக்கு காரண கர்த்தா தாங்களேதன்:-)

சொந்த சோகக் கதையானாலும் அதை பேர் சொல்லும் கதையாக மாற்றியது உங்கள் கை வண்ணம்.

நீங்களும் என்னைப்போலவோ?
நான் தாயுடன் இருந்த நாட்களைவிட் அந்த நாட்களை எண்ணியே கழிந்த நாட்கள் அதிகம்.அந்தக் குறுகிய நாட்களில் ஒரு பலகலை கழகத்தில் படிக்க வேண்டியவற்றை கற்றுக் கொடுத்து விட்டாள்.
அழகாக வரிசை படுத்தி பிடித்ததை வெளியிட்டதற்கு நன்றி.

என் பின்னுட்டமும் நீங்கள் வரிசைப் படுத்திய பதிவுகளுக்குஉண்டு

வாங்க சார் வாங்க,

//சொந்த சோகக் கதையானாலும் அதை பேர் சொல்லும் கதையாக மாற்றியது உங்கள் கை வண்ணம்.//நன்றி ஐயா. ஒவ்வொருத்தருடைய வாழ்விலும் அவர்கள் எதிபாராத விரும்பாத கசப்பான அனுபவங்கள் தான் அவர்களின் வாழ்க்கையைப் பக்குவப்படுத்துகின்றன என்பது என் எண்ணம்.அந்தவகையில் நான் ஒரு சூடு கண்ட பூனை!-)))))இதையும் வைச்சு யாரும் எழுத்தில,ஒலிவடிவில,ஒளிவடிவில கதை புனையாம இருந்தா நல்லது! அப்படி நடந்தா தமிழ்மணத்துக்கு கொஞ்சநாள் லீவு போடலாம்.:-))

//நீங்களும் என்னைப்போலவோ?
நான் தாயுடன் இருந்த நாட்களைவிட் அந்த நாட்களை எண்ணியே கழிந்த நாட்கள் அதிகம்.அந்தக் குறுகிய நாட்களில் ஒரு பலகலை கழகத்தில் படிக்க வேண்டியவற்றை கற்றுக் கொடுத்து விட்டாள்.//அனுபவ கல்வியை முதலில் கற்றுத் தருபவள் தாய்தான். கருவிலிருக்கும்போதே அவளிடம் கற்றுக் கொள்கிறோம் தானே! அதனால் அவளை கடைசிவரை எந்த ஒரு பிள்ளையாலும் மறக்கமுடியாது, இல்லையா, சார்.

//என் பின்னுட்டமும் நீங்கள் வரிசைப் படுத்திய பதிவுகளுக்குஉண்டு// உங்க பின்னூட்டம் அனேகமா எல்லாப் பதிவிலுமே இருக்கே, சார்.:-))
உங்க ஆதரவுக்கு மிக்க நன்றி.
ஆடிட்டரில இருந்து அக்ரரா
மாறியுமிருக்கீங்க , எப்போ CD தரப்போறீங்க?