
பழைய ஞாபகங்கள் வரும்போது கவலையாயிருக்கிறது. முன்பு சன்னதி முருகனை தேரில் தந்த காட்சியைப் பாத்து கண்ணீர்மலக வழிபட்டேன். இன்று அங்கு போகவும் முடியாமல் படங்களைப் பாக்க கண்ணீர் வருகிறது.
நல்லூரில் தங்க வடிவில் வடிவேலன்


என்னைப் போல் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் உன் அடியவர்க்கும் எம் தாயகத்தவருக்கும் சன்னதி வேலவா நீதான் அருள் புரிய வேண்டும்!
"பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே"
"சன்னதி வேலனுக்கு அரோகரா" இன்னமும் காதில் கேட்கிறது.
எங்கள் தாயகத்தில் பழம்பெரும் கோயில்களில் ஒன்றான சன்னதி ஆலயத்தைப் பற்றி சகவிடயங்களயும் அறிய கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்
சன்னதி வேலன்
4 Responses to “இன்று சன்னதி முருகனுக்கு தேர்த் திருவிழா”
தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும். மறுபடியும் வெல்லும் என்ற மஹாகவியின் வார்த்தைகளை நினைவு கொள்ளுங்கள்
:)
எனக்கு செல்வசன்னிதிக்கு 21 வருடத்தின் பின் போய் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
http://www.flickr.com/photos/karuran/sets/72157607334157643/
படங்களுகு நன்றி காரூரன்
Post a Comment