திரைப்படங்களும் நோய்களும்

திரைப் படங்கள் ஒவ்வொன்றும் அந்த்ந்தக் காலத்திற்கேற்ற மாதிரியான திரைக் கதைகளோடு அமைவது வழ்மை. ஆயினும் கால அடிப்படையின்றி, சில திரைப் படங்களில் நோயை அடிப்படியாகக் கொண்ட கதையில் படங்கள் அமைந்திருக்கின்றன. கீழே காட்டப்பட்டுள்ளவற்றை இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். இவை நான் பார்த்த படங்களிற் சில.
அன்னியன் (தமிழ்)
இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு Multiple personality disorder என்ற நோய்.வடக்கு நோக்கியாந்தரம்-Vaddakkunokkiyaantharam-(மலையாளம்)
இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு என்ன மன நோய் என்பது காட்டப்படவில்லை.படத்தின் முடிவில்கதாநாயகன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்படுவது ம்ட்டும் காட்டப்படுகிறது. நான் நினைகிறேன் இந்த் கதாநாயகனுக்கு பிடித்திருப்பது சிற்ஸ்பரேனியா -Schizophrenia- என்ற நோயாகத்தானிருக்கும். கதாநாயகனுக்கு திருமணம் நடக்கப் போகிறது வரப்போகும் மனைவி தன்னைவிட நிறமும் உயரமும் கூட இருக்கிறாள் என்பதால் அதே தாழ்வுமனப்பான்மை அவனை கவலையிலாழ்த்தி பல பல சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. இறுதியாக இதுவே நோயினை தோற்றுவிக்கிறது.


வடக்கும் நாதன்- Vadakkumnathan -(மலையாளம்).
இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு Bipolar என்ற நோய்.திறமையுள்ள சமஸ்கிருத பேராசிரியராக மோகன்லால் நடிக்கிறார், இந்தக் கதை A Beautiful Mind என்ற ஹொலிவூட் ஆங்கிலப் படத்தின் சாயலை ஒத்திருக்கிறது. ஆனால் மலையாள சூழலுக்கேற்ப எடுக்கப் பட்டிருக்கிறது.
சாகம் -Sargam-(மலையாளம்).

இதில்நடித்தவர்கள்:விநீத், மனோஜ். கே.ஜெயன், ரம்பா.இந்தப் படம் 1992ல் வெளிவந்த ஹரிஹரனின் படம். இந்தப் படத்தில் கதாநாயகனின் நண்பனுக்கு Seizure என்ற நோய் உள்ளது, ஆனால் அவனுடைய முரட்டுக் குணத்துக்கும் இந்த நோய்க்கும் என்ன தொடர்போ தெரியவில்ல?தன்மாந்தர -Thanmatra -(மலையாளம்). இதில் மோகன்லால், மீரா வாசுதேவன் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் கதாநாயகன் மோகன்லாலுக்கு Alzheimer என்ற நோய்.

ஒரு அழகான மனம்- A Beautiful Mind - (ஆங்கிலம்) இதில் நடித்தவர்:Russell crowe. இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு Schizophrenia என்ற நோய். ஜோன் போப்ஸ் நாஷ் -John Forbes Nash ஆக நடிப்பவர்-Russell crowe-ஒரு கணித மேதை.இவர் பல வருடங்களாக இந்த நோயோடு எப்படிப் போராடி வெல்லுகிறார் என்பதோடு மட்டுமல்லாது நோபல் பரிசையும் தட்டிக்கொள்கிறார் என்பதுதான் கதை.
___________________________________________________________________________________
இதே கதையம்சமுள்ள இன்னும் பல புதிய பழைய படங்கள் இருக்கலாம். இப்படியான படங்களைப் பார்த்தவர்கள் உங்கள் கருத்துகளையும் சொல்லுங்களேன்.
"திரைப்படங்களும் நோய்களும்"
7 Comments - Show Original Post Collapse comments

Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Dr.செல்லி, :-)
வித்தியாசமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்!

தமிழ் சினிமாவின் ஆஸ்தான் நோய் = கேன்சர் (பயணங்கள் முடிவதில்லை, வாழ்வே மாயம்....)
அதை விடுத்து அண்மைக் காலங்களில் புதிய அறிமுகங்கள் தரத் தொடங்கியுள்ளன.

கஜினி, பிதாமகன், இதயத்தைத் திருடாதே போன்ற படங்களும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

12/30/06 9:41 PM
Delete
Blogger செல்லி said...

ரவி
உங்க வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
ஆமாம் நீங்க குறிப்பிட்டதுபோல் இப்படி நிறையப் படங்கள் இருக்கின்றன.
உங்க ஒவ்வொரு பதிவுகளையும் தவறாமல் வாசிக்கிறேன்.ஆனா எல்லாவற்றுக்கும் பின்னூட்டம் எழுத நேரம்தான் கம்மி.
வரப்போகும் இனிய புத்தாண்டில் எழுத்தாளர் உலகில் மேலும் பிரகாசிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

12/30/06 11:09 PM
Delete
Blogger கானா பிரபா said...

வித்தியாசமான சிந்தனை, உச்சக்கட்டம் என்ற படம் மனநோயாளர் விடுதியில் சில காட்சிகள் எடுக்கப்பட்ட பரபரப்பான படம்.
தமிழ்ப்படங்களில் கதாநாயகனைச் சாகடிக்க ஒரே வழி இப்படியான புது வியாதிகள்.

வடக்கும் நாதன் பற்றி என் பதிவு இதோ, வாசித்திருக்கிறீர்களா?

http://kanapraba.blogspot.com/2006/10/blog-post_29.html

1/2/07 1:14 AM
Delete
Blogger செல்லி said...

பிபா
வடக்கும்நாதன் பற்றிய உங்கள் பதிவைப் பார்த்தேன்.நன்றாக இருக்கிறது.
வியாதிக் கதைகளை வைத்து படம் எடுப்பதால் திடீர் திருப்பங்கள் பார்ப்பவர்களை தொடர்ந்து பார்க்கதூன்டும் என்றுஎண்ணுகிறார்கள் போலும்.
தனக்கிருக்கும் நோயை கதாநாயகன் இன்ங்கண்டு அதிலிருந்து எப்படி தன்னை விடுவித்துக்கொள்கிறான் என்பதாக இருந்தால்த்தான் மக்களுக்கு பயன்படும். உதாரணத்துக்கு A Beautiful Mind.
நன்றி

1/2/07 2:34 PM
Delete
Blogger செல்லி said...

மன்னிக்கவும் பிரபாவில் ர எழுதப்படவில்லை.

1/2/07 2:36 PM
Delete
Blogger Bharateeyamodernprince said...

அருமையான பதிவு.
கேன்ஸரை விட்டுத்தள்ளுங்கள். மற்றபடி சட்டென்று எனது நியாபகத்திற்கு வரும் படங்கள் - 'கீழ் வானம் சிவக்கும்' சரிதாவிற்கு `லிம்போசோகோமா' என்ற வியாதி இருக்கும். 'அக்னி சாட்சி' படத்தில் வரும் சரிதாவிற்கு ஒருவித `மெண்டல்' பிரச்சினை உண்டு.

'வடக்கும் நாதன்' பற்றியகானா பிரபாவின் blogஐ வாசித்தேன். பிரபாவிற்கு நன்றி!

1/3/07 7:20 PM
Delete
Blogger செல்லி said...

வணக்கம் பாரதீயமொடேண்பிரின்ஸ்
உங்க வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. மீண்டும் வருக!

1/3/07 8:15 PM
Delete

No response to “திரைப்படங்களும் நோய்களும்”