குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

இது ஒரு ராகமாலிகை. M.S. சுப்புலக்ஷ்மி பாடிய பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்.

மும்பாய் சகோதரிகள் பாடியபாடல் இங்கே கேட்கலாம்


ராகம்: சிறீரஞ்சனி

தாளம்: ஆதி
இயற்றியவர்: ராஜாஜி
பாடியவர்: M.S. சுப்புலக்ஷ்மி

பல்லவி

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

குறையொன்றுமில்லை கண்ணா

குறையொன்றுமில்லை கோவிந்தா

அனுபல்லவி

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாலும் எனக்கு

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1

வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

ராகம் காபி

சரணம் 2

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா

உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும்

குறையொன்று;ம் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா என்றாலும்

குறையொன்றும் எனக்கிpல்லை மறைமூர்த்தி கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்றாய வரதா

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

ராகம்: சிந்துபைரவி

சரணம்4

கலிநாளுக் கிரங்கி கல்லிலே இரங்கி

நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம்5

யாரும் மறுக்காத மலையப்பா

உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா

ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா
7 Comments - Show Original Post Collapse comments

Blogger செல்லி said...

இப்பாடலை இயற்றியவர்: ராஜாஜி
பாடியவர்:M.S.சுப்புலக்ஷ்மி

12/28/06 4:03 AM
Delete
Blogger செல்லி said...

மன்னிக்கவும், சொடுக்கவும் என்ற சொல் சொடுக்கவ என்பதுடன் நின்றுவிட்டது.

12/28/06 4:06 AM
Delete
Blogger நான் said...

செல்லி,

எனக்கு மிகவும் பிடித்த பாடல். தினமும் ஒரு முறை கேட்கிறேன்.

அது என்னங்க செல்லி, பெயர்க்காரணம் என்ன?

12/30/06 1:10 AM
Delete
Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அந்தந்த பகுதிகளுக்கு அந்தந்த ராகங்களின் பெயரையும் போட்டு அருமையாக இட்டுள்ளீர்கள் செல்லி!
வாழ்த்துக்கள்!

நீங்கள் அடியேனை அனுமதித்தால்,
கலிணாலுக்கு = கலிநாளுக்கு
வேங்கடேசன் என்றிருக்க = வேங்கடேசம் நின்றிருக்க

12/30/06 9:26 PM
Delete
Blogger செல்லி said...

//கலிணாலுக்கு = கலிநாளுக்கு
வேங்கடேசன் என்றிருக்க = வேங்கடேசம் நின்றிருக்க//
இது சரியா? என்ற சந்தேகமிருந்தது ஆனா சரியான சொல் எது என்று தெரியாத்தால் அப்படியே விட்டுவிட்டேன். பிழைகள் திருத்தியமைக்கு மிக்க நன்றி.

12/30/06 11:17 PM
Delete
Blogger செல்லி said...

நான்
வருகைக்கு நன்றி.
ஏற்கனவே சொன்னமாதிரி "செல்லி"அம்மாவோட செல்லப் பேருங்க.

12/31/06 10:13 PM
Delete
Blogger Chandravathanaa said...

கேட்டதும் பிடித்து விட்ட பாடல்களில் ஒன்று.
நன்றி.

10/23/08 9:45 PM

No response to “குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா”