ஹைக்கூ

நிறைந்த பானையில்
கூரையினூடாய் வந்த
கனத்த மழை.

கதைத்ததைக் கணப்பொழுதில்
திரிச்சுச்சொன்ன
தொலைபேசி.

சேவைப் போர்வையில்
கூட்டாய்க் கூத்தடிக்கும
குழுவரசியல்.
(அன்பான தமிழ்மண நண்பர்களே,இது இங்கு யாரையும் தாக்குவதாக எழுதப்படவில்லை என்பதை அன்போடும் தாழ்மையோடும் அறியத் தருகிறேன்.இது நான் தற்போது வாழும் சமூகத்திற் கண்ட அனுபவம்.)

பாமரன் பசியில்
வாக்குச் சுரண்டக் கூரிய
ஆயுதம் அரிசி.

இது ஒரு புது முயற்சி ஆகையால் பிழை இருப்பின் அன்புடன் அறியத் தாருங்கள்.

5 Responses to “ஹைக்கூ”

//நிறைந்த பானையில்
கூரையினூடாய் வந்த
கனத்த மழை.//

காலி பானை
கூரைவழி நிறைந்தது
மழை

//நான் கதைத்ததையே
கணப்பொழுதில் என் காதில்
திரிச்சுச்சொன்ன தொலபேசி.//

:( இன்னும் வார்த்தைகளை சுருக்கி, சொல்லி இருக்கலாம்.
//சேவையென்று முன்னின்று
கூசாமற் பல பொய்யுரைத்துக்
கூத்தடிக்கும் குழுவரசியல்.//

ம்ஹூம்.. :(

//பாமரன் பசியில்
வாக்குச் சுரண்டிட கூரி(டி)ய
ஆயுதம் அரிசி.//

நல்ல கவிதை. ஆனால் அடைப்புக்குறியை நீக்கி, இரண்டில் ஒன்றை மட்டும் எழுதி இருந்தாலும் பாடுபொருள் கெடாமல் அப்படியே வாசகனைப் போய் சேரும்.

தொடர்ந்து முயலுங்கள். வாழ்த்துக்கள்.

பாலபாரதியின் அறிவுரைக்கு மிக நன்றி.

துளசியின் வரவேற்பிற்கும் மிக நன்றி

பாமரன் பசியில்
வாக்குச் சுரண்டிட கூரிய
ஆயுதம் அரிசி

ஆமாம் பமரனுக்கு வாழும்போது கிடைக்காத அரிசி மரணத்துக்கு பின் வாய்க்கரிசியாக கிடைத்து என்ன பயன்

மறுபடியும் செல்லி. நல்லது

//ஆமாம் பமரனுக்கு வாழும்போது கிடைக்காத அரிசி மரணத்துக்கு பின் வாய்க்கரிசியாக கிடைத்து என்ன பயன்//
வளர்ந்துவரும் நாடுகளான இலங்கை, இந்தியாவில்த் தான் இவ்வாறு நடக்கிறது.

//மறுபடியும் செல்லி. நல்லது//
ஆமாம்.உங்க ஆதரவுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி, சார்.