விவசாயி - கவிதை

துயரற்ற விவசாயி்
தோட்டத்தில்,வயலில்
தொழில்தான் மூச்சு.

வெயில் தின்றமுகமும்,
கையில் வறண்டதோலும்,
தோற்றம் கவர்வதில்லை,
நோக்கம் அதுவுமில்லை.
நோய்க்குப் பயமுமில்லை,
நோய்க்குப் பயமவனிடமோ?

சுறுசுறுப்பிற் சூறாவளி
தலையின்பார மூட்டையால்
நெருநெருக்கும் கழுத்துள்ளே
முதுகில் மூட்டைச்சுமையில்
அடிக்கடி இளைக்கும்மூச்சிலே.
சோர்வில்லாத முழுமூச்சோடு
செய்துமுடிப்பதே பழக்கம்.

எடைகூடல், இடுப்புவலி
எலும்புருக்கி, புற்றுநோய்
நாரிப்பிடிப்பு, தோள்வலி,
மூட்டுவலி, முதுகுவலி
முழங்கால் கணுக்கால்வலி
தலையிடி தடிமன்காய்ச்சலென்று
தரையிலுங் கிடந்ததில்லை;
இருதயமும் இரும்புபோல
இதிலென்ன இரத்தழுத்தம்.

விவரமான விவசாயி
வேதனைகள் அவனுக்கில்லை
செய்தொழிலே அவன்மூச்சு!

எழுதியவர்: செல்லி

2 Responses to “விவசாயி - கவிதை”

நோய்க்குப் பயமுமில்லை,
நோய்க்குப் பயமவனிடமோ

நோயிக்கு கிராமத்து ஆட்களிடம் வருவதே இல்லயே பயம்தான் காரணமோ

//நோயிக்கு கிராமத்து ஆட்களிடம் வருவதே இல்லயே பயம்தான் காரணமோ//
உடல் உழைப்போடு அவன் உள்ளமும் அத் தொழிலில் ஒன்றிவிடுவதுதான் காரணம்.அதனால் உடல் அல்லது உள நோயோ அங்கு தலைகாட்டுவதில்லை.