கந்த சஷ்டி - யாழ் அனுபவம்

கந்த சஷ்டி விரதம் தமிழகத்தில் 30.10.08 முதல் 4.11.08 வரை அனுட்டிக்கப்படுகிறது. ஆனா இங்கு 29.10.08 ஆரம்பமாகிறது என்கிறார்கள்.
மூன்று சக்திகட்கு ஒரு நவராத்திரி போல,சிவனுக்கு ஒரு சிவராத்திரி போல, கந்தனுக்கு உகந்த விரதம் கந்த சஷ்டி. இது ஆறுநாட்கள் விரதம் இருப்பதாகும்.சகல பாவங்களையும் போக்கும் விரதம் எண்டு எங்களூரில் சொல்லுவினம்.ஐப்பசி மாதத்தில் தீபாவளி முடிந்து அமாவாசைக்கு அடுத்தநாள், பிரதமை திதி முதல் சஷ்டிதிதிவரை இந்த விரதம் இருப்பினம்.அநேகமாய் யாழ்ப்பாணத்தில் எல்லா முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

இது 2005 இல் கோயில் கோபுர அழகுடனான தோற்றம்.

சுழிபுரம் பறாளாய் முருகமூர்த்தி கோயிலில் இந்த ஆருநாளும் முருகனுக்கு விசேடபூசைகள் இடம்பெறும். ஆறாம் நாள் சூரன்போர் நடைபெறும்.ஆறு தினங்களும் இரவில் சிலர் மிளகும் தண்ணீரும் என உபவாசமிருப்பவர்கள், சிலர் பாலும் பழமும் மட்டுமே உட்கொண்டு விரதமிருப்பவர்கள். வயதானவர் பயறு அவித்துச் சாப்பிடுவர். அதற்கும் இயலாதவர் ஒரு வேளை சோறு உண்பர்.அப்போ அங்கு மழைக்காலம் என்பதால் தண்ணீரும் அருந்தாமல் விரதம் இருந்தா நா வறண்டு போகாது. காற்றிலும் ஈரப்பதன் இருக்கும்.ஆனா இங்கு பிறிஸ்பேனில் கடும் வெயில் தொடங்கிவிட்டது.நீரும் அருந்தாமல் விரதமிருப்பது உண்மையிலேயே ஒரு கடுந் தவம்தான்.


பறாளாய்க் கோயிலில் முருகனடியார்கள் சிலர் வீட்டில் மச்ச மாமிசம் உண்பரால் துப்பரவு இருக்காது எண்டு கந்தர்சஷ்டி கவசம் பாடியபடி கோயிலியே ஆறு நாளும் தங்கி இருந்து விரதம் பிடிப்பர்.

இருப்பினும், ஊர் ஞாபங்கள் வரும்போது கண்களும் குளமாகும்.1997 குண்டு, செல் அடிபாடுகளால் இப்படியாக இந்தக் கோயில் கோயில் தேர் இருந்தன.

தமிழருக்கு ஒரு விடிவு கிடைக்க தமிழ்க் கடவுள் முருகனை மண்டாடுவம். அதற்காக சஷ்டி கவசம் பாடி ஆறு நாளும் முருகனை வேண்டி வழிபடுவோம்.

No response to “கந்த சஷ்டி - யாழ் அனுபவம்”