இலக்கிய இன்பம்-1 சிலேடைக் கவிதை

சிலேடைக் கவிதை என்றால் சொல் அமைப்பில் ஒரு சொல்லாக வந்தாலும் இரண்டு அல்லது மூன்று அர்த்தத்தைக் கொண்டிருக்கும் பாடல் ஆகும்.
சிலேடைக் கவிபாட காளமேகப் புலவருக்கு நிகராக யாருமில்லை என்றே சொல்லலாம். இதோ தேங்காய்க்கும் நாய்க்கும் இரு பொருள்பட பாடப்பட்ட பாடல் !


“ஓடும் இருக்குமத னுள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது –சேடியே
தீங்காய தில்லாத் திருமலைரா யன் வரையில்
தேங்காயு நாயுந் தெரி”

முதல் இரு அடிகளையும் நோக்கினால் தேங்காய்க்கும் நாய்க்கும் பொருள்படப் பாடியிருப்பதைக் காணலாம்.

தேங்காய் :
இதற்கு ஓடு இருக்கிறது, உடைத்துப் பார்த்தால் உட்பக்கம் வெளுத்திருக்கும். குலையாகக் காய்க்கும்.அக் குலை நிறைய காய்களைக் கொண்டிருப்பதால் தாங்குமோ தாங்காதோவென்று பயப்படாது (நாணாது) .

நாய்
நாய் ஓடும்.
அதாவது நாய் ஓடும், இருக்கும் ஒரு இடத்தில் நில்லாது. அதன் உள்வாயும் வெளுத்திருக்கும்.

யாரும் அந்நியரைக் கண்டால் குலைக்கும்.
அப்படி குலைப்பதற்கு வெட்கப்படாது(நாணாது).
இப்பாடலில் கவிஞரின் கவித்திறனை வியக்காமல் இருக்க முடியாது.படிக்கப் படிக்கத் தெவிட்டாத கவிதை.


எழுதிவர்: செல்லி

அடுத்த பதிவில் மூன்று பொருள்படப் பாடப்பட்ட கவிதையைக் நோக்கலாம்.
___________________________________________________________________

வந்ததுதான் வந்தீர்கள், உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்.

16 Responses to “இலக்கிய இன்பம்-1 சிலேடைக் கவிதை”

Anonymous said...

இன்று இப்புலமை எவரிடமும் இல்லாமல் போனது இழப்பே!
இதைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக நன்றி!
இப்படியானவற்றைத் தேடுகிறேன். அடிக்கடி தரவும். இடும் போது என் மின்னஞ்சலுக்கு அறிவிக்கவும்.
johan54@free.fr
யோகன் பாரிஸ்

வணக்கம யோன்

//இன்று இப்புலமை எவரிடமும் இல்லாமல் போனது இழப்பே!//
காளமேகத்தால் மட்டுந்தான் இயலும்.
தற்போது புதுக் கவிதை பிரபல்யமான ஒன்றாகிவிட்டதால் இப் புலமையை பெற முயற்சிப்பதில்லை.
பாகம் 2 போடும்போது அறிவிக்கிறேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Unknown said...

உங்களைப் போலவே நானும் காளமேகப்புலவருக்கு விசிறிங்க. பள்ளிக்கூடம் படிக்கும் காலத்திலிருந்தே.

//நாய் ஓடும். அதாவது நாய் ஓடுமிருக்கும்//
இதிலே 'ஓடுமிருக்கும்' என்பதற்கு பதிலாக 'ஓடும். இருக்கவும் செய்யும்' என பிரித்தெழுதினால் சிறப்பாய் புரியமென நினைக்கிறேன்.

உங்களின் அடுத்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

நல்ல வரவேற்பிருந்தால், நானும் காளமேகத்தில் எனக்குப் பிடித்த சிலவற்றை குறிப்பாக யானையும் போரும், இறைவனும் மளிகைக்கடைசெட்டியாரும், போன்ற சிலேடைகளை இடலாமென இருக்கிறேன்.

Unknown said...

ரொம்ப சின்ன வயசுல பள்ளியில படிச்ச செய்யுள்!!!

மறுபடியும் படிக்க வச்சுட்டீங்க!!! :)

சிலேடைக்கவிதைகள் என்றாலே நினைவிற்கு வருவது கவி காளமேகம் தானே. நல்ல சிலேடைக்கவி இது செல்லி. மீண்டும் படிக்க வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

பெரிய விடமே சேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணும் உப்பு மேலாடும்
தீம்பொழியும் சோலை திருமலைராயன்வரை
பா........... பழம்.






ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகங்காட்டும்
......... .............
.......... ..............

வணக்கம் சுல்தான்

//உங்களின் அடுத்த பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.//
அடுத்து வானவில்,விஷ்ணு, வெற்றிலை என மூன்று பொருள் உள்ள பாடல் என் பதிவில் போடவிருக்கிறேன்.
படித்துப்பார்த்து உங்க பதிலைச் சொல்லுங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

அருட்பெருங்கோ, குமரன்

வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.

வணக்கம் அழகு

//பெரிய விடமே சேரும் பித்தர்//
பாம்புக்கும்,எலுமிச்சம் பழத்துக்கும் உவமித்தது

//ஆடிக் குடத்தடையும் //
பாம்புக்கும், எள்ளுக்கும் உவமை.
நன்றி.

வைசா வணக்கம்
//விநோத ரச மஞ்சரி என்ற புத்தகத்தில் ஓர் அத்தியாயம் முழுவதும் காளமேகப் புலவரின் இத்தகைய பாடல்கள் இடப் பெற்றிருந்தன.//
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

வருகைக்கு நன்றி.

செல்லி,
ப்ரியா என்னும் பதிவரும் இதே போல காளமேகப் புலவரின்
சிலேடைகளை வெளியிட்டு வந்தார்.
மிக்க நன்றி.
படித்தவற்றை மறக்காமல் இருக்க
மீண்டும் பள்ளி நாட்களுக்கு அழைத்துப் போய்விட்டீர்கள்.

வணக்கம் வல்லி

//ப்ரியா என்னும் பதிவரும் இதே போல காளமேகப் புலவரின்
சிலேடைகளை வெளியிட்டு வந்தார்.//
அப்படியா, நான் இன்னும் அதைப் பார்க்கவில்லை. தேடிக் கண்டு பிடிக்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி

Priya's website address

http://aanmeegham.blogspot.com/
இதுபோன்ற பல பாடல்கள் உள்ளன அவைகளைத் தொகுத்து இடுங்கள்

நன்றி தி.ரா.ச
நல்லதொரு ஆன்மீக விடயங்களைக் கொண்ட வலைப்பதிவு.Priya's website

அரைபிளேடும் புரிந்து கொள்ளும் வகையில் படங்களுடன் விளக்கம்.

ரொம்ப நன்றி.

அரை பிளேட்

//அரைபிளேடும் புரிந்து கொள்ளும் வகையில் படங்களுடன் விளக்கம்.//
பரிசு எல்லாம் வாங்கின பிளேடுக்கு பட விளக்கமெல்லாம் தேவைதானா?
வெளிநாட்டில் வாழும் சில இளம்பிள்ளைகள் தமிழ் பேசுவார்கள்.தமிழ் நன்றாக எழுத வாசிக்கத் தெரியும். ஆனால் தென்னை மரம், தேங்காய் எப்பிடியிருக்குமென்று தெரியாது.ஏனென்றால் அவர்கள் ஊர்ப் பக்கம் இன்னும் திரும்பிப் போகவில்லை.ஊரில் இருப்பவற்றை படங்களில்த்தான் காண்கிறார்கள். அவர்கட்காக இப்பிடி ஒரு விளக்கம்.
வருகைக்கு நன்றி