"தசையினை தீச்சுடினும்
சிவசக்தியை பாடும் நல்அகம் கேட்டேன்" என்று என்ன வரம் கேட்கிறார் பாருங்கள்! கவி ஆற்றல மிக்க இந்த கவிஞன் வாழ்கின்ற காலத்தில் யாரும் அவன் கவித்திறனைக் கண்டுகொள்ளவுமில்லை; நல்லதொரு வீணை இந்த்க் கவிஞன். அவனை கடைசிவழி போகும்வரை அந்தப் பெருங்கவிஞனை யாரும் பாராட்டவுமில்லை.
"மாநிலம் பயனுற வாழ்வதற்கே
நிலச்சுமையென வாழ்ந்திட புரிகுவையோ"
இந்த வரிகளிலே பாரதியின் பொதுநலத்தைப் பாருங்கள். பூமிக்குப் பாரமாக அன்றி பூமிக்கு பயனுற வாழ அருள் செய் என்று கேட்கிறார். இந்த பொதுநோக்கு சாதாரணமானவர்க்கு வராது,மெஞ்ஞானிகளுக்குத்தான் வரும். அஞ்ஞானிகள் கடவுளிடம் தமக்கு போலி கௌரவத்தைத் தரும் பெரியவீடு, புது கார், பெரிய உத்தியோகம், உயர்ந்த பதவி, நன்மக்கள் என்பன வேண்டித்தான் கும்பிடுகிறார்கள். நேர்த்தி வைக்கிறார்கள்.இவர்கட்கு மண்நலத்தைவிட
தன்னலம்தான் முன்னிற்கும். மாநிலம் பயனுற செய்யமுடியாவிட்டாலும், நாலுசனம் பயனுற நாமும் ஏதும் செய்யலாந்தானே!
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம பிறந்த மண் ஞாபகந்தான் வரும்.
எப்போதுமே பசுமையும், வளமும் கொளிக்கும் அந்த நல்ல மண்ணிலே இப்படி நாளாந்தம் குண்டு, வெடி பொழிந்து, குண்டும் குழியும், புழுதியுமாய்க் கிடக்கிறது. அந்த மண்ணின் அமைதிக்காக தினமும் சிவசக்தியை வேண்டுகிறேன்.
மேலும்,வெளிநாட்டுக்கு வந்தபின் பிறந்த நாட்டில் பெற்ற உயர்கல்வித் தராதரங்களுக் கேற்ற வேலை கிடைக்காமலும், தம் கல்வித் தமைக்கேற்ற ஒரு வேலை கூடக் கிடைக்காமலும் இருப்பவர்க்கும் இந்தப் பாடல் இதயத்தை இதமாக்கிச் செல்லும்.
கஷ்டப் பட்டு படித்தோரை
நஷ்டப் பட இங்கே விடுதல் நலந்தானோ?
இதோ இனி இப்பாடலைக் கேட்டு மகிழுங்கள்.
நியூயோர்க் ராஜா இசையில் உன்னிக் கிருஷ்ணன் பாடியது
சிறீகாந் இசையில் சிறீனி பாடியது
மதுவந்தி ராகத்தில் நித்யசிறீ பாடியது
பாரதி படத்தில், இளையராஜா,மனோ பாடிய பாடல்
(இப் பாடலை இப் பதிவுக்கு தந்தவர்: ஹரிஹரன் . நன்றி: )
நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனை சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
நிலசுமையென வாழ்ந்திட புரிகுவையோ
விசையுறு பந்தினைப் போல்
உள்ளம் வேண்டியபடி
செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும் உயிர்கேட்டேன்
தசையினை தீச்சுடினும்
சிவசக்தியை பாடும் நல்அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ?
நல்லதோர் வீணை செய்தே
அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ
____________________________________________________________________
இனி உங்க கருத்தையுந்தான் சொல்லுங்களேன்.
8 Responses to “கேட்டு மகிழ (4) நல்லதோர் வீணை”
//இவை அருள்வதில் உனக்கெதும் தடையுளதோ//
கொடுப்பதால் உனக்கு ஏதாச்சும் கஷ்டமா?
அம்மாவிடம் மட்டும் தான்
கொடுப்பியா, கொடுக்க மாட்டியா என்று சற்று அதட்டலாகவே கேட்க முடியும்!
அதைப் போலவே பாரதி கேட்பதும் அருமை! நன்றி செல்லி!
நன்றி ரவி
//அம்மாவிடம் மட்டும் தான்
கொடுப்பியா, கொடுக்க மாட்டியா என்று சற்று அதட்டலாகவே கேட்க முடியும்!//
ஆமாம் ரவி, உறவென்றால் உரிமையும் கூடவே வந்திடுகிறதல்லவா/
அதுவும் அம்மா என்றால் விசேடம் (special)தானே!
இளையராஜாவின் குரலில் பாரதி திரைப்படத்தில் வந்த இந்தப் பாட்டைக் கேட்டு இருக்கின்றீர்களா? அருமையாக இருக்கும்!
பாடலிலே அனைத்து வரிகளுமே அருமையாக இருக்கும். பாரதி சீரிய அடுத்த தலைமுறைகளுக்காகவே படைப்புக்களைப் படைத்தவன்!
வாழ்த்துக்கள் செல்லி.
தசையினை தீச்சுடினும்
சிவசக்தியை பாடும் நல்அகம் கேட்டேன்
எனக்கு மிகவும் பிடித்த வரிகள். இங்கு தசையினை தீச்சுடினும் என்பதுஇறப்பை குறிபிடுகிறார் பாரதி.இறக்கும் போதும்கூட கவிதைதான் மூச்சாக இருக்கும்
வணக்கம் தி.ரா.ச.
வருகைக்கு ந்ன்றி.
ஆயுள்வரை ஆதிசக்தியையே பாடுகின்ற மனதை கேட்கிறார்.
வணக்கம் ஹரிஹரன்
//இளையராஜாவின் குரலில் பாரதி திரைப்படத்தில் வந்த இந்தப் பாட்டைக் கேட்டு இருக்கின்றீர்களா? //
கேட்கவில்லை இன்னும். இருந்தால் தந்து உதவுங்களேன்.
//பாரதி சீரிய அடுத்த தலைமுறைகளுக்காகவே படைப்புக்களைப் படைத்தவன்!//
முற்றிலும் உண்மை.
வருகைக்கு ந்ன்றி.மீண்டும் வருக!
செல்லி,
இந்த தளத்தில் பாரதி படத்தின் அனைத்துப் பாடல்களும் இருக்கின்றன.
இளையராஜா பாடிய நல்லதோர்வீணை ஏழாவது பாடல்.
http://www.oosai.com/tamilsongs/bharathi_songs.cfm
கேட்டு மகிழுங்கள்
ஹரிஹரன்
உங்க உதவிக்கு மிகவும் நன்றி.
Post a Comment