"நிற்பதுவே நடப்பதுவே" என்ற பாட்டில் எங்கும் "காண்பது சக்தியாம்"என்னும் பாரதியார் கீழ்வரும் பாடலில் எங்கும் எதிலிம் கண்ணனைக் காண்கிறார். அதாவது, காய், கனி, காற்று, திக்கிலே மட்டுமல்ல நோய்,விரதம்,கனவு, சூடு, குளிர், என்பவற்றிலும் கண்ணனைக் காண்கிறார். கண்ணனை நாம் ஏற்று நின்றால், போற்றி நின்றால் அவன் எமைக் காத்து நிற்பான். மெய்யரைக் காப்பான்; பொய்யரை மாய்ப்பான்.
பாரதி பாடல்கள் ஒவொன்றுமே தனித்தன்மை வாய்ந்தவை. படிக்கப் படிக்கத் தெவிட்டாதவை; கேட்கக் கேட்க இனிமயானவை. இந்தப் பாடலைக் சுதா ரகுநாதன் பிந்து மாலினி ராகத்தில் பாடியிருக்கிறார். நீங்களும் இங்கே கேட்கலாம்.
கண்ண பெருமானே
காயிலே புளிப்ப்தென்னே? கண்ண பெருமானே,
கனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே,
நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே,
நோன்பிலே உயிர்ப்பதென்னே? கண்ண பெருமானே
காற்றிலே குளிர்ந்ததென்னே? கண்ண பெருமானே
கனவிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே,
திக்கிலே தௌiந்நதென்னே? கண்ண பெருமானே,
ஏற்று நின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே,
எளியர் தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே
போற்றினோரைக் காப்பதென்னே? கண்ண பெருமானே,
பொய்யர் தம்மை மாய்ப்பதென்னே? கண்ண பெருமானே.
9 Responses to “கேட்டு மகிழ (2) காயிலே புளிப்ப்தென்னே?”
செல்லி! உங்க வலைத்தளத்துக்கு வரச் சொல்லி எனக்கு அழைப்பு விட்டீங்க வந்துவிட்டேன்.
என்ன நீங்களும் கண்ணன் கட்சியா?:)
அங்கே ஒருத்தர் அரங்கனையும் கண்ணனையும் அமைதியாய் மணக்க மணக்க அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார். இங்கே நீங்களும் அளிப்பதில் மகிழ்ச்சி. காயிலே புளிக்கிறவன் கனியிலே இனிக்கிறானாம். இந்தப்பாட்டில் ஆழ்ந்த வாழ்க்கை தத்துவமே இருக்கிறது என கேள்விப்பட்டிருக்கிறேன்.
சுதாவின் சுகந்தக்குரலில் கனிந்து இனிக்கத்தான் செய்கிறது
ஷைலஜா
செல்லி
பாரதியின் கண்ணன் பாட்டைத் தந்தமைக்கு மிக்க நன்றி!
பிந்துமாலினி ராகமா? புதிப் பெயராக இருக்கிறதே!
சுதாவின் குரலில் கனியிலே இனிக்கிறான் கண்ணன்!
//எங்கெங்கு காணினும் சக்தியடா//
இது பாரதிதாசன் பாடல்!
//காயிலே புளிப்ப்தென்னே? கண்ண பெருமானே,//
இந்தப் பாடலைக் கண்ணன் பாட்டு வலைப்பூவிலும் இட்டு விடலாமா? one stop shop ஆக இருக்கும்! என்ன நினைக்கிறீர்கள்?
மேலும் கண்ணன் பாடல்கள், தனி மடலில் தந்தால், அதையும் உங்கள் பெயர் சொல்லி - செல்லி எனச் சொல்லி - கண்ணன் பாட்டு வலைப்பூவில் இடலாம்! நன்றி செல்லி!
வாங்க பஞ்சவர்ணக்கிளியே-வருவீங்கன்னு
எனநெஞ்சு நினைக்கையிலே
//என்ன நீங்களும் கண்ணன் கட்சியா?:)//
அது மட்டுமல்ல சக்தி, ஆஞ்சனேயன், பிள்ளையார் எல்லாரோட கட்சியுந்தான்.
//அங்கே ஒருத்தர் அரங்கனையும் கண்ணனையும் அமைதியாய் மணக்க மணக்க அரங்கேற்றிக்கொண்டிருக்கிறார்//
ஆமாம், ரவி கண்ணன் பாட்டு என்ற தலைப்பில் போடுகிறார். அந்தப் பாட்டுகளும் ரவியின் பதிவில் கேட்கிறேன். நானும் ஒரு க்ண்ணனடிமை.
இந்தப் பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல். வருகைக்கு நன்றி. மீண்டு வருக!
வணக்கம் ரவி
//பிந்துமாலினி ராகமா? //
Bindhu malini ராகம்.
//எங்கெங்கு காணினும் சக்தியடா.இது பாரதிதாசன் பாடல்//
திருத்தியமைக்கு நன்றி.
//இந்தப் பாடலைக் கண்ணன் பாட்டு வலைப்பூவிலும் இட்டு விடலாமா?//
தாராளமாக போடலாம்.ஆமாம், உங்க கண்ணன் பாட்டு தலைப்புக்கு இது பொருத்தமாக இருக்கும்.
//கண்ணன் பாடல்கள், தனி மடலில் தந்தால், அதையும் உங்கள் பெயர் சொல்லி//
முயற்சிக்கிறேன்.
மீண்டும் வந்து உங்க கருத்தைச் சொன்னதிற்கு மிகவும் நன்றி.
கனவிலே சுடுவதென்ன கண்ணபெருமானே. கனவில் நடப்பது நமக்கு தெரியாது . ஆனால் பாரதிக்கோ சூடு குளிர்ச்சி போன்ற உணர்வுகள் தெரிகிறது.பிந்துமாலினி நல்ல ராகம். தியாகராஜரும் இதில் எந்த முத்தோ என்ற பாட்டைப் பாடியுள்ளார்
வணக்கம் தி.ரா.சி
பாரதி மெஞ்ஞானியல்லவா!. அதனால் அவரால் குளிர் சூடு போன்ற உணர்வுகளில் கூட கண்ணனைக் காணமுடிகிறது.
மிக்க நன்றி
ஷைலஜாவை அழைக்கப் போய் அவரைத் தொடர்ந்து நானும் வந்து விட்டேன்!
பொய்யர்தம்மை மாய்க்கும் நாள் எந்நாளோ!
வணக்கம் எஸ்.கே
எப்பிடியோ எளியோன் இல்லம் ஏகி, பின்னூட்டமும் பரிவோடு தந்திருக்கிறீர்கள், நன்றி.
மாய்க்க மாய்க்க பொய்யர் முளைத்தால் மாலும்தான் என்ன செய்வான்?
மாய்க்கும் தொழிலே தொடருகிறது அவனுக்கு.
மீண்டும் வந்து கருத்துக்களைச் சொல்லுங்கள்.
நன்றி.
Post a Comment