ஆகியோப் பாடுகின்றனர்.
பல்லவி முதற்கொண்டு தொடர்ந்து வரும் 11 சரணங்களில் 2 ம், 3 ம், 5 ம் சரணங்கள் இந்த ஒலிவடிவில் இடம்பெறவில்லை.
கடுவெளிச் சித்தர்
பல்லவி
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே
சரணம் 4
நந்த வனத்திலோ ராண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந் தானொரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி. (பாபஞ்செய் யாதிரு)
சரணம் 6
நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு.
சரணம் 7
நல்லவர் தம்மைத் தள்ளாதே - அறம்
நாலெட்டில் ஒன்றேனும் நாடித்தள் ளாதே
பொல்லாக்கில் ஒன்றுங்கொள்ளாதே - கெட்ட
பொய்மொழிக் கோள்கள் பொருந்த விள்ளாதே.
சரணம் 8
வேத விதிப்படி நில்லு - நல்லோர்
மேவும் வழியினை வேண்டியே செல்லு
சாத நிலைமையே சொல்லு - பொல்லாச்
சண்டாளக் கோபத்தைச் சாதித்துக் கொல்லு.
சரணம் 9
பிச்சையென் றொன்றுங்கே ளாதே - எழில்
பெண்ணாசை கொண்டு பெருக்கமாளாதே
இச்சைய துன்னையாளாதே - சிவன்
இச்சை கொண்டதவ்வழி யேறிமீளாதே. 9
சரணம் 10
மெஞ்ஞானப் பாதையி லேறு - சுத்த
வேதாந்த வெட்ட வெளியினைத் தேறு
அஞ்ஞான மார்க்கத்தைத் தூறு - உன்னை
அண்டினோர்க் கானந்த மாம்வழி கூறு. 10
சரணம் 11
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே.( நந்த வனத்திலோ)
பாபஞ்செய் யாதிரு மனமே - நாளைக்
கோபஞ்செய் தேயமன் கொண்டோடிப் போவான்
பாபஞ்செய் யாதிரு மனமே.
________________________________________________
வந்ததுதான் வந்தீங்க, உங்க கருத்தையும் சொல்லீட்டுப் போங்களேன்.
8 Responses to “கேட்டு மகிழ (3) கடுவெளி சித்தரின் பாடல்கள்”
நல்ல பாடல். முழு ஒலித்தட்டு எங்கே கிடைக்கும்?
hi
this is nice work keep it up
havea a nice day
saravanan g
chennai
சித்தர்களின் பாடல்களின் தத்துவம் தெவிட்டாதது.
பதிவிற்கு நன்றி
ஊரோடி பகீ
அருமையான கருத்தாழம் மிக்க அதே சமயம் பாமரரும் புரிந்து கொள்ளூம் விதத்தில் அமைந்திருப்பதே இப்பாடலகளின் தனிச் சிறப்பு.
அதனை ஒலிவடிவிலும் கேட்கையில், இன்னும் மகிழ்ச்சி மிகுகிறது!
மிக்க நன்றி, செல்லி அவர்களே!
//நல்ல பாடல். முழு ஒலித்தட்டு எங்கே கிடைக்கும்?//
"இங்கே" என்ற சொல்லை வலப்பக்கதில் சொடுக்கி (right click) save as link என்பதை click செய்து save பண்ணி எப்பவுமே இணையத்திற்கு வராமலே கேட்கலாம்; உங்க mp3 யிலும் இதைச் சேர்க்கலாம்.
வருகைக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சரவணன்.
பண்டிதர்க்கு மட்டுமல்ல பாமரர்க்கும் சித்தர்களின் பாடல்களின் தத்துவம
எளிதில் விள்ங்குகிறது.இதுதான் அவற்றின் தனித்தன்மை.
வருகைக்கு நன்றி, பகீ.
வணக்கம் sk
//அருமையான கருத்தாழம் மிக்க அதே சமயம் பாமரரும் புரிந்து கொள்ளூம் விதத்தில் அமைந்திருப்பதே இப்பாடலகளின் தனிச் சிறப்பு.//
எந்தவொரு இலக்கிய வடிவமும் பாமர மக்களைப் போய்ச் சேர வேண்டும்.இல்லையேல் அவற்றால் பயனே இல்லை.
//அதனை ஒலிவடிவிலும் கேட்கையில், இன்னும் மகிழ்ச்சி மிகுகிறது!//
இந்தப் பாடல்களின் ஒலிவடிவம் கிடைத்ததும் நானும் கூடச் சந்தோசப்பட்டேன், ஏனென்றால் இவை ஒலி வடிவில் கிடைப்பது மிகவும் அரிது.
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி.
Post a Comment