பாம்பைக் கண்டா சாதரணமாக படையே நடுங்கும். அவுஸ்திரேலியாவிலே மண்ணிற பாம்பென்றால் (Brown Snake) எல்லாருமே மிகவும் பயப்பிடுவார்கள்.ஏனென்றால் இது உலகிலுள்ள மிகவும் விசமுள்ள தரைப் பாம்புகளிலேயே இது இரண்டாவதாம்.

இரண்டு மீற்றர் நீளமுள்ள இந்தப் பாம்பு தரையில் துரிதமாக ஊரும். இந்தப் பாம்பு ஒருமுறை கடித்துவிட்டு ஓடிவிடாது. இதற்கு விரைவில் கோபம் வந்திடுமாம்.யாராவது தன்னைத் தாக்க வருகிறார்கள் எனும்போதுதான் அது கோபத்தில் திரும்பத் திரும்ம்பக் கொத்துகிறதாம்.இவை மக்கள் வாழும் இடங்களை அண்டி வாழுகின்றன. காரணம் என்னவெனில் அங்கு தான் இவைக்கு தேவையான உணவு அதாவது எலி, தவளை, முயல் போன்றன கிடைக்கிறது. இதனால் அவுஸ்திரேலியாவின் சிறு நகர்ப்புறங்களில் இவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.(1)

இவை ஆவுஸ்திரேலியாவிலேயே குயின்ஸ்லாந்தில்த் தான் அதிகமாக் காணப்படுகின்றன. எங்கள் பக்கத்து சிறு நகரமான வெஸ்ற்லேக்கில்(Westlake) மண்ணிறப் பாம்பொன்று கடந்த வாரம் ஒரு நாயைக் கடித்திருக்கிறது. அதுவும் வீட்டிற்குள்ளே வந்து தாக்கி இருக்கிறது. எந்தப் பொந்துக்குள்ளும் இலகுவில் இந்த வகைப் பாம்புகள் நுழையக் கூடியவை என்பதால் இவை வீடுகளுக்குள் (யன்னல் ஊடாக) செல்வதில் ஆச்சரிய்ப்பட ஒன்ற்மில்லை.
நாயைக் கொத்துவதைக் கண்ட அந்த வீட்டுப் பெண் துவாய் ஒன்றை பாம்பிற்கு எறிந்து அது மூடுப்பட்டவுடன் அந்த நாயை அந்த இடத்தை விட்டு அகற்றி இருக்கிறார். பின்னர் பாம்பு பிடிப்பவரின் உதவியை நாடினார். தனது நாய்க்கு இந்த ஆபத்து ஏற்பட்டதால் அயலவருகு இச் சப்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என அந்தப் பெண் வேன்டிக் கொண்டார்.(2)
இதே போல் மாசி மாதம் 2007 இல் மிடில் பாக்(Middle Park) எனும் இடத்தில் கெயித் ற்றவேஸ் (Keith Travers) என்பவரை ஒரு மண்ணிறப்பாம்பு கடித்து அந்த நபர் இரண்டு நாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றாராம் என பாம்பு பிக்க உதவுபவர் குறிப்பிட்டார். பதினாறு வயதுப் பையன் ஒருவனும் 13/1/2007 இல் சிட்னியில் இந்தப் பாம்புக் கடியால் மரணமடைந்திருக்கிறான்.(1) 1998 இல் இந்த பாம்பு கொத்தி 6 பேர் இறந்திருக்கிறார்களாம். வருடத்திற்கு சராசரியாகப் பார்த்தால் 2 பேர் இறக்கிறார்களாம்.(3)
இந்த பாம்புகள் பற்றிய தகவல்கள், கதைக்ளை அறியும்போது யாழ்ப்பாணத்தில் எங்கள் ஊரில் அடிக்கடி எங்கும் காணக் கூடிய சாரைப் பாம்பின் நினைவுதான் வருகிறது. சாரை ஊரும்போது சர சர என எழுப்பும் என்ற ஒலிக் குறிப்பின் அடப்படையில் சாரை என்று பெயர் வந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் வேகமாகப் போகும் பாம்பிற்குச் சாரைப் பாம்பு என்றும் பெயர் உண்டாம் என்கிறார் ராம். கி. (4)
அத்துடன், முத்திரப் பிடையன், கோடாலிப் பாம்பு பற்றியும் கேள்விப் பட்டிருக்கிறேன். இவை விசமுள்ள பாம்புகள் என்பர். ஆனால் சாரையைக் கண்டால் யாரும் அங்கு பயப்பட்டதாகத் தெரியவில்லை. இது விவசாயிக்கு தோட்டத்தை நாசம் செய்யும் எலி,தவளை,முயலை இது பிடித்துத் தின்பதால் "விவசாயியின் நண்பன் " என்றும் சொல்லப்படுவதுண்டு.(5) வீடுகளில் வரும் சாரை கோழிக் குஞ்சைத் தின்றுவிடும் என்றும் பயப்படுவர். கோழியின் முட்டையையும் இது தின்பதால் இதனைக் கண்டால் வீடுகளில் துரத்திவிடுவர்.எங்கள் வீட்டில் பாம்ப வித்தியாசமான முறையில் துரதி ஓட்டம் பிடிக்கச் செய்வோம். மண்ணெண்ணையை ஒரு சேலைத் துணியில் நனைத்து நீளமான தடியில்க் கட்டி பாம்பின் முகத்தில் அல்லது உடம்பில் தேய்க்க அது ஒரே ஓட்டமாய் ஓடிவிடும். ஏனென்றால் மண்ணெண்ணை பட்டால் அதற்கு உடம்பு எரிவதுபோல் இருக்குமாம்.
இறுதியாக ஒரு பாடலை
கேட்டு மகிழுங்கள். இது பேய் பிசாசு பற்றிய பாட்டு. இதிலே, "சருகுமேலே சாரைப் பாம்பு சர சரக்குதே" என ஒரு வரி வருகிறது.சாரைப் பாம்பென்றாலும் என்றாலும், பாம்பு பாம்புதானே! பயம் வராமல் இருக்குமா?
உசாத்துணை உதவிகள்
1. http://en.wikipedia.org/wiki/Pseudonaja_textilis
2. South-West News Paper 7.3.2007
3. www.burkesbackyard.com.au/1999/archives/25?p=2000
4. http://www.treasurehouseofagathiyar.net/01400/1479.htm
5. http://www.cviewmedia.com/Herp_News%5CHN02707.htm
படம்: www.pbase.com, www.qm.qld.gov.au/features/snakes/snakedetail...
பாடல்:ravianbil.com/kummiruttulae.mp3
________________________________________________________________________________________
படித்துப் பார்த்து உங்க கருத்தைச் சொன்னீங்க என்றால் மிகவும் நன்றியாயிருப்பேன். அன்புடன் செல்லி