Weird-வியேட்.?....ம்ம்..சரி . ஏதாவது எழுதுகிறேனே

வியேட் ஆக எதையென்றாலும் எழுத துளசியின் அழைப்பு வந்ததும்,மறுக்க முடியுமா?. ஆனா weird ஆக எதை எழுதுவது என்பதே வியேடாகத் தான் இருந்தது. உஷா அவங்களும் மனச்சாட்சியை எழுதச் சொல்லி அழைப்பு விடுத்தார்.உஷா, இது தானுங்க என் மனச் சாட்சி!, வியேடா இருக்குது, பார்த்தீங்களா!.
என்னைப் பற்றி என்ன வியேட் ஆக இருக்கு என்று யோசிச்சு பார்த்தேன். என்னோட குட்டிக்குட்டி மறதிகளைப் பற்றி எழுதப் போகிறேன்.வீட்டைப் பூட்டிட்டு போய், இரண்டு மூண்டு கீ.மீ போயிட்டுத் திரும்பி வந்து கதவை ஆட்டிப் பார்ப்பேன்; அடுப்பை நிப்பாட்டி விட்டுப் போய் (நிப்பாட்டின்னான் என்பது சரியாக நினைவிருந்தாலும்) பயங்கரக் கற்பனை எல்லாம் மூளைகுள்ள ஓடும், உடன திரும்பி வந்து அடுப்பைப் பாப்பேன்.அது ஏற்கனவே நிப்பாட்டுப்பட்டுத் தான் இருக்கும்.

பையன்களை 4 pm மணிக்கு ஏத்திக் கொண்டுவர ரயில்வே ஸ்ரேசனுக்கு போறதுக்கு முதல் மூண்டரை மணிக்கு ஒரு குட்டித் தூக்கம் போட்டு, ஃப்போன் அடிக்க எழும்பி நேரத்தைப் பார்த்தா நாலரை மணியாயிருந்தது. ஸ்ரேசனில பையன்கள் அழுதபடி இருந்தாங்கள்.அதற்குப் பின் பகல்த் தூக்கமே வர்றதில்லை.இது நடந்து 3 வருஷத்துக்கு மேலாகிறது.

ஒரு முறை காரை பாக் பண்ணிட்டு திரும்ப வந்து காருக்கு சற்றுக் கிட்டவாக நின்று கொண்டே காரை எங்கை பாக் பண்ணினேன் என்று தேடி இருக்கிறன்.சின்ன வயசில பள்ளிக்கூடத்தில லஞ் box, புத்தகங்களை மறந்து விட்டிட்டு வந்த கதையிலிருந்து இன்னும் தொடர்கிறது.இருந்தாலும் இவற்றை நினைத்துப் பார்த்தா வியேடாத் தான் இருக்கு.


சாத்திரம்(சோதிடம்) கொஞ்சம் பார்க்க தெரியும் என்றதால ஒரு தடவை ஒருத்தர் தனக்கு அதிஷ்ட லாபச் சீட்டில காசு வருமோ என்று பார்த்துச் சொல்லச் சொன்னார்.நானும் சும்மா ஹொபியாக அந்தக் குறிப்பைப் பார்த்து விட்டு குறிப்பிட்ட காலத்தின் பின் அப்படி நடக்கலாம் என்று சொல்லி,காலத்தையும எழுதிக் குடுத்தேன்.என்ன எழுதிக் கொடுத்தேன் என்றே ஞாபகமில்லை.ஐந்து வருடங்கழித்து அந்த நபருக்கு எத்தனையோ மில்லியன் கிடைத்ததாம் எனக் கேள்விப்பட்டேன். நான் சொன்னது பலித்து விட்டது என நினைக்கும்போது வியேடாகத் தான் இருந்தது.
அதன் பின் ஒரு அம்மா எனக்கு அம்மன் வாலாயம் இருக்கிறதோ? எனக் கேட்டார்.ஏனென்றால் நான் சொல்வது பலிக்கிறதாம். அதற்குப் பிறகு சாத்திரம் யாருக்கும் சொல்வதில்லை.ஏனென்றால் என்னை அம்மனாக்கி அபிஷேகம் செய்துவிடுவார்களோ என்ற பயந்தான்.இவற்றை நினைக்கும்போது வியேடா இருக்குதுங்கோ!


எதிகாலத்திற்கு திட்டம் போடுறது, ஓய்வு காலத்திற்கு சேமிக்கிறது அதுக்காக இன்வெஸ்மன்ற்க்கு வீடு வாங்கிறதெல்லாம் செய்யிறதில்லையுங்கோ.ஏனென்றால் சிறுவயசிலிருந்தே போர்க் காலச் சிக்கலில தப்பிப் பிழைத்ததால் மரணம் என்பது தூசாகிவிட்டது. எப்பவுமே அதற்குத் தயார். ஆனா அப்பிடியானவங்களுக்கு மரணம் கெதியா வராதாமே! என்று எங்க அம்மா சொல்லுவா.இது உங்களுக்கு வியேடாத் தெரியலையா?

இப்போதைக்கு இது போதும் என நினைக்கிறேன். இனி அடுத்து வியேடா யாரு வரப் போறாங்க பார்ப்போமே!
இந்த விளையாட்டுக்கு நான் அழைக்கிறேன்

யோகன் - அவனுக்கு வியரடி!!( Weird )
வெற்றி
சந்திரவதனா - WEIRD - 14வது மாடிக்கு நடந்தே போகிறேன்
சின்னக்குட்டி -...விசித்திரமாண குணாம்சமா. உளபிறள்வா.
வசந்தன்

"வியேட்" பற்றி எழுத என்னை அழைத்தவர்களின் அனுபவப் பதிவுகள்:
கிறுக்ஸ் & கிறுக்ஸ்(weird)
'வியர்ட்' மனதின் இரட்டைநிலை...
நான் ரிஸ்க் எடுப்பேன் !
நானொரு 'வியர்டூ'ங்க
"நான் ஒரு வியர்டு தானே! தெரியாது?"
"தொட்டிற் பழக்கம் - ஒரு weird பதிவு"

39 Responses to “Weird-வியேட்.?....ம்ம்..சரி . ஏதாவது எழுதுகிறேனே”

david santos said...

Hello!
Thank,s for you work ande have a good week

This is a good comment from a weird person.

If you click http://www.blogger.com/profile/08976825493652779441

you could see david santos's blogpost.

This action,I' pretty sure, has been done by a person from Europe.
Best wishes for this wonderful job, guy.
I have taken this as hnour.

செல்லி,
நல்லாவே பதிஞ்சு இருக்கீங்க.
மறதி எப்படின்னால் நான் கடைக்குப் போகும்போது பணத்தையும் கொடுத்துவிட்டு வாங்கின பொருட்களையும் விட்டு வந்திருக்கிறேன்!

மதியத் தூக்கம் இனிப் பசங்க வளர்ந்த பிறகு தான்.
அடடா ஒரு நல்ல ஜோசியரை இழந்துட்டோமா.:-)

ப்ளோக் அம்மனா வர்ற நல்ல ச்சான்ஸை
இப்படிக் கோட்டை விட்டுட்டீங்களே?(-:

உண்மைக்குமே முதல் காமெண்ட் வியர்டாத்தான் இருக்கு:-))))))

வாங்க துளசி
// ப்ளோக் அம்மனா வர்ற நல்ல ச்சான்ஸை இப்படிக் கோட்டை விட்டுட்டீங்களே?(-://
ஐயையோ! அதெல்லாம் வேண்டாமப்பா!. சாதாரண மனுசியாவே இருந்திட்டுப் போறேனே!

// உண்மைக்குமே முதல் காமெண்ட் வியர்டாத்தான் இருக்கு:-)))))) //
சில வேளை மாறி நினைச்சிட்டாங்களாக்கம். அதாவது,
பதிவு weird என்றதால comment ஐயும் அப்பிடிப் போடவேணும் என்று நினைச்சிட்டாங்களாக்கம்!:-)))
வருகைக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் மிக நன்றி.

படிக்கப் படிக்க சிரிப்பா இருந்தது, மனச்சாட்சி நல்லாக் காட்டிக்குடுத்திட்டுது. நல்லாயிருக்கு.

உங்களை துளசிம்மாவும் கூடவே, உஷாவும் கூட பதிவுக்கு அழைத்திருந்தார்கள்.

டேவிட் எனக்கும் ஒரு பின்னூட்டம் போட்டவர், மனுஷன் தமிழ் படிச்சிட்டார்.

வாருங்கோ பிரபா

//படிக்கப் படிக்க சிரிப்பா இருந்தது, மனச்சாட்சி நல்லாக் காட்டிக்குடுத்திட்டுது. நல்லாயிருக்கு.//
பானையில இருக்கிறதானே அக(ஏ)ப்பையில வரும், அதுமாதிரி அகத்தில இருக்கிறது எழுத்தில வந்திட்டுது.

// உங்களை துளசிம்மாவும் கூடவே, உஷாவும் கூட பதிவுக்கு அழைத்திருந்தார்கள்.//
நீங்க சொன்னாப் பிறகுதான் " நுனிப் புல்"லில் என் பெயரையும் பார்த்தேன்.அதன் பின் உஷாவைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். நன்றி நினைப்பூட்டியதிற்கு.

//டேவிட் எனக்கும் ஒரு பின்னூட்டம் போட்டவர், மனுஷன் தமிழ் படிச்சிட்டார். //
ஆச்சரியமா இருக்கு. இதுதான் முதல் முறையாக டேவிட்டினுடைய பின்னூட்டம் கிடைத்தது. அப்படி என்றா தமிழில் எழுதத் தெரியாதா?:-/

வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி, பிரபா.

வல்லி
//நல்லாவே பதிஞ்சு இருக்கீங்க.
நன்றி
//வாங்கின பொருட்களையும் விட்டு வந்திருக்கிறேன்!// இப்பிடி எனக்கும் நடந்திருக்கு.ஒருமுறை வாங்கி பொருட்களுள்ள bag ஐ train இல் வரும்போது அதை எடுக்க மறந்திட்டேன். இறங்கின பிந்தான் bag ஞாபகம் வந்தது. உடனே ஸ்ரேசன் மாஸ்ரரிடம்" அடுத்த ச்ரேசனுக்கு ஃபோன் பண்ணி எடுக்கமுடியா?" என்று கேட்டேன். "எத்தனையாவது compartment இல் இருந்தாய்" என்று பையையே எடுக்க மறந்த நான் இதை என்கை நினைவில் வைத்திருப்பேன்? துலைஞ்சது,துலைஞதுதான் என்று விட்டிட்டேன். இது கூட வியேட் தான், இல்லையா?

//மதியத் தூக்கம் இனிப் பசங்க வளர்ந்த பிறகு தான்.//
அதுவும் கஷ்டமாமே! வளர்ந்த பையன்களாஇத் தானாம் 24 மணித்தியால கண்காணிப்பு வேணுமாம் என அனுபவப் பட்ட அம்மாக்கள் சொன்னாங்க
ஆகவே நாம பகல் தூக்கத்தை அடியோட மறக்கிறதா நல்லது என நான் நினைக்கிறேன்.
//அடடா ஒரு நல்ல ஜோசியரை இழந்துட்டோமா.:-)//
பரவாயில்லை. ஏதும் அவசியம் என்றா ரகசியமா பாக்கிறேனே!:-))
வருகைக்கும், பராட்டுக்கும், கருத்துக்கும் ரொம்ப நன்றி, வல்லி.

\\வீட்டைப் பூட்டிட்டு போய், இரண்டு மூண்டு கீ.மீ போயிட்டுத் திரும்பி வந்து கதவை ஆட்டிப் பார்ப்பேன்; அடுப்பை நிப்பாட்டி விட்டுப் போய் (நிப்பாட்டின்னான் என்பது சரியாக நினைவிருந்தாலும்) பயங்கரக் கற்பனை எல்லாம் மூளைகுள்ள ஓடும், உடன திரும்பி வந்து அடுப்பைப் பாப்பேன்.அது ஏற்கனவே நிப்பாட்டுப்பட்டுத் தான் இருக்கும்.\\

நீங்கள் இரண்டாம் நம்பர் இல்லைத்தானேa?

டேவிட் விஜே ட blog லயும் உதே கொமன்ற்தான் போட்டிருக்காரு

சினேகிதி

// நீங்கள் இரண்டாம் நம்பர் இல்லைத்தானேa?//
நான் மூண்டாம் நம்பர். இர/ன்டாம் நம்பருக்கு இப்பிடிக் குணங்கள் இருக்குமோ?

//டேவிட் விஜே ட blog லயும் உதே கொமன்ற்தான் போட்டிருக்காரு //
டேவிட் விஜே? யாரு இவரு?
வருகைக்கு நன்றி, சிநேகிதி.

ம்ம்ம், நல்ல வியர்டு தான். ஏன் ப்ளாக்கர் செய்யற அக்கிரமத்தைப் பத்தி எழுதல்லை? அதையும் எழுதி இருக்கலாம். நாம் மட்டும் வியர்டு இல்லை, அதுவும் வியர்டுன்னு எல்லாருக்கும் சொல்லி இருக்கலாம் இல்லையா? :-)

வாங்க கீதா
என்னோட வியேட் பதிவில் உங்க வியேட் பதிவுக்கு தொடுப்புக் குடுத்திருக்கிறேன். இன்னும் பலரையும் சென்றடைய வேணுமில்லியா, அதுக்காகத் தான்.
//ஏன் ப்ளாக்கர் செய்யற அக்கிரமத்தைப் பத்தி எழுதல்லை? அதையும் எழுதி இருக்கலாம். நாம் மட்டும் வியர்டு இல்லை, அதுவும் வியர்டுன்னு எல்லாருக்கும் சொல்லி இருக்கலாம் இல்லையா? :-)//
முக்கியமானதை மட்டும் மறாந்திட்டேன். சரி, இன்னொரு ச்சான்ஸ் கிடைக்காமலா போகப்போகுது.
நன்றி, கீதா.

David santos enbavar V.Jeyachandran in blog laum same comment podirukaru.
http://viriyumsirakukal.blogspot.com/2007/03/blog-post_25.html

சினேகிதி

// David santos enbavar V.Jeyachandran in blog laum same comment podirukaru.//

தகவலுக்கு மிக மிக நன்றி, சிநேகிதி.

கிறுக்குதனங்கள் படிக்க படிக்க சுவையாய் இருக்கு:-) பிரபா அவர் பதிவில் சொன்ன மாதிரி
நம்முடைய கிறுக்க்குதனங்களைப் பட்டியல் போட்டதும், மனதில் பாரம் குறைந்ததுப்போல இருக்கிறது.
செல்லி, நீங்க நேற்று அனுப்பிய கமெண்டை பப்ளிஷ் செய்யவில்லை, அதை தனிமடலாய் பாவிக்கிறேன்.

உஷா
ரொம்ப நன்றி.புரிந்துணர்வுக்கு மிகமிக நன்றி.
//நம்முடைய கிறுக்க்குதனங்களைப் பட்டியல் போட்டதும், மனதில் பாரம் குறைந்ததுப்போல இருக்கிறது.//
உண்மைதான் .மனசு கொஞ்சம் லேசாக இருக்கிறது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, உஷா.

செல்லி கதவை பூட்டினதோ எண்டு அடிக்கடி இல்லா விட்டாலும் நானும் திரும்பி போய் சரி பார்த்த சந்தர்ப்பங்கள் உண்டு.







//Hello!
Thank,s for you work ande have a good week
//

அப்ப உங்களுக்கு எனக்கு , பிரபா ... எல்லாரோட பதிவும் போர்த்துகேயம் வரை பிரபலம் எண்டுறீங்க :))))


சினேகிதி சொல்லீட்டா எண்டாலும் எனக்கு டெவிட் என்பவரின் பின்னூட்டம் ஆச்சரியத்தை கொடுத்தது. அவர் போர்த்துகல்லில் இருந்து பின்னூட்டம் போட்டிருக்கிறார். எப்பிடி தமிழ் வலைப்பதிவுகளுக்குள் நுளைந்தார்???

வி.ஜே.சந்திரன்
//அப்ப உங்களுக்கு எனக்கு , பிரபா ... எல்லாரோட பதிவும் போர்த்துகேயம் வரை பிரபலம் எண்டுறீங்க :))))//
நான் நினைக்கிறன் போர்த்துகேயரின் 15ம்நூற்றாண்டு காலனித்துவ காலத்தில தாயகத்தில இந்தாளுக்கும் எங்களுகும் ஏதும் விட்ட குறை தொட்ட குறை எண்டு ஏதும் பூர்வீகத் தொடர்பு இருக்குமோ?:-))))

//சினேகிதி சொல்லீட்டா எண்டாலும் எனக்கு டெவிட் என்பவரின் பின்னூட்டம் ஆச்சரியத்தை கொடுத்தது. அவர் போர்த்துகல்லில் இருந்து பின்னூட்டம் போட்டிருக்கிறார். எப்பிடி தமிழ் வலைப்பதிவுகளுக்குள் நுளைந்தார்???//
இதுதான் எனக்கும் ஆச்சரியமாக இருந்தது.பிறகு அந்தாளின் பதிவுக்குப் போய் உண்மையிலேயே ஒரு பெரிய காய்போல கிடக்கு. Good heart எண்டு ஒரு மணியான கவிதை எழுதியிருக்கிறார்.
நானும் பின்ன என்ர பதிவுக்கு வந்ததிற்கு நன்றி சொல்லி, நல்ல கவிதை(உண்மையிலேயே திறமான கவிதை, வேணுமெண்டாப் போய்ப் படிச்சுப் பாருங்கோ)எனப் பின்னூட்டம் போட்டிருக்கிறன்.
இதைவிட
இப்பிடி ஒரு கொமென்ற் விஜேக்கும் வந்த்ததென்று தமிழிங்கிலிஸில சினேகிதி எழுதியிருந்தா.டேவிட் புதிரைவிட இதென்ன "விஜே" அடுத்தபுதிரா இருக்கே என்றிருந்தது.
பிறகு தான் சினேகிதி உங்கட பதிவுச் சுட்டியைத் தந்தா.
அதுசரி, உங்கட பதிவுக்கு போனாப் பிறகு நெருப்புநரியை நிப்பாட்டினாப் பிறகும் அந்த music நிக்குதில்லியே?
ஏன்? :-(
அதால உங்க பதிவுக்கு வரப் பயமாக் கிடக்கு.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

//அதுசரி, உங்கட பதிவுக்கு போனாப் பிறகு நெருப்புநரியை நிப்பாட்டினாப் பிறகும் அந்த music நிக்குதில்லியே?
ஏன்? :-(
அதால உங்க பதிவுக்கு வரப் பயமாக் கிடக்கு.
வருகைக்கும் கருத்துக்கும் //

இப்ப தான் முதல் முதல் இப்பிடி ஒரு பிரச்சனை என்னொட வலைப்பதிவுக்கு வர ஏற்படுதெண்டு அறியிறன். :(
எந்த பாட்டு நிக்குதில்லை ? எல்லா பாட்டையும் பிளேய அமத்தினா தானே பாட கூடிய தா அமைச்சிருக்கிறன். தன்னிச்சையா பாடுற மாதிரி தெரிவு செய்ய இல்லையே. என்ன எண்டு வடிவா சொன்னியள் எண்டா திருத்தம் செய்யலாம்.

என்னிடம் 2 இணைய உலாவிகளும் இருந்தாலும், IE தான் பொதுவா பாவிக்கிறனான். அதாலை எனக்கு அப்பிடி ஏதும் தெரியேல்லையோ??

//பிளேய அமத்தினா தானே பாட கூடிய தா அமைச்சிருக்கிறன். தன்னிச்சையா பாடுற மாதிரி தெரிவு செய்ய இல்லையே.//
Stop அமத்தி உடன பாட்டு நிண்டது, ஆனா ஒரு "பொய்உங்" பினணி இஅசை தான் நிக்கவில்லை.
இப்போ ctrl+delete அமத்தின்னான். இதுக்குப் பிறகு அந்த இசை வரவில்லை. அப்பாடா!:-)))
எனக்கு எப்பிடி விளக்கிறதெண்டொ தெரியேல. இனி அப்பிடி வந்தா சொல்லுறன்.
நன்றி.

யாருங்க இந்த போத்துகீசிய பின்னூட்டக்காரர்.??

ஈழத்து பதிவர்களாய் பார்த்து பின்னூட்டமிடுகிறார்.

எனக்கும் போட்டிருக்கிறார் அது தான் கேட்டேன்.

வாருங்கோ சின்னக்குட்டி

//யாருங்க இந்த போத்துகீசிய பின்னூட்டக்காரர்.??//
உங்களுக்கு போட்டிருக்கிறாரா?:-))))

-L-L-D-a-s-u said...

காரை பாக் பண்ணிட்டு திரும்ப வந்து காருக்கு சற்றுக் கிட்டவாக நின்று கொண்டே காரை எங்கை பாக் பண்ணினேன் என்று தேடி இருக்கிறன்.
weird . :).. இங்கே இணைக்கப்படுகிறது

படித்துவிட்டு ஒரே சிரிப்புத்தான்.சிலவற்றை நினைக்க நைனைக்கச் சிரிப்பு வருது.
ரொம்ப நன்றி தாஸ்.

செல்லி,
இன்னும் உங்களின் பதிவை வாசிக்கவில்லை. பேந்து வாசிச்சுவிட்டுக் கருத்துச் சொல்கிறேன்.

செல்லி, உங்களின் அழைப்புக்கு மிக்க நன்றி. நான் தற்சமயம் சரியான busy. சித்திரை மாதக் கடைசி வரை busy. அதனால் உடனடியாக எழுத முடியாதென்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தயவு செய்து கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள். நேரம் அனுமதிக்கும் போது எழுதுகிறேன். தயவு செய்து குறை நினைக்காதீர்கள்.

மிக்க நன்றி.

செல்லி!
//எதிகாலத்திற்கு திட்டம் போடுறது, ஓய்வு காலத்திற்கு சேமிக்கிறது அதுக்காக இன்வெஸ்மன்ற்க்கு வீடு வாங்கிறதெல்லாம் செய்யிறதில்லையுங்கோ//

நான் நீங்கள் எழுதியதைப் படிக்காமல் தான்;என் "வியரை" எழுதினேன். ஆனால் இந்த விடயம் அச்சொட்டாக இருக்குது;
"அம்மனாகி" விடுவார்கள் என்ற பயம் இருக்கா????இருக்கட்டும்.

வணாக்கம் யோகன்

//"அம்மனாகி" விடுவார்கள் என்ற பயம் இருக்கா????இருக்கட்டும்.//

சத்திரம் அவர்கள் என்னிடம் கேட்க,நானும் சொல்லப் போக, அதுவும் பலிக்க, அம்மன் வாலாயமோ எண்டு கேட்க சாத்திரம் பாக்கிறதையே, நிப்பாட்டி விட்டன்,என்னை அம்மனாக்கி அபிஷேகஞ் செய்துபோடுவினமோ எண்ட பயத்தில.
அதுதான் எனக்குப் பொல்லாத பயமா இருந்தது.
நன்றி வருகைக்கும், கருத்திற்கும்.

வெற்றி

// உங்களின் அழைப்புக்கு மிக்க நன்றி. நான் தற்சமயம் சரியான busy. சித்திரை மாதக் கடைசி வரை busy. அதனால் உடனடியாக எழுத முடியாதென்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தயவு செய்து கொஞ்சம் கால அவகாசம் தாருங்கள். நேரம் அனுமதிக்கும் போது எழுதுகிறேன். தயவு செய்து குறை நினைக்காதீர்கள்.//

பரவாயில்லை.இருப்பினும் உங்க இந்தப் பதிலுக்கு மிக நன்றி.

என்ன இருப்பினும், நாம் செய்யிற தொழிலும் முக்கியமல்லவா?
நன்றி, வெற்றி

மிக்க நன்றி.

Anonymous said...

உங்களையும் இந்த ஆட்டதில் இழுத்துட்டாங்களா?

Anonymous said...

//.ஏனென்றால் நான் சொல்வது பலிக்கிறதாம். அதற்குப் பிறகு சாத்திரம் யாருக்கும் சொல்வதில்லை//

செல்லி இந்த மாதிரி இரகசியத்தை எல்லாம் வெளியே விடலமா?அப்புறம் வலையுலகில் உங்களை அனைவரும் கேட்க போகின்றார்கள் :)))

Anonymous said...

//பையன்களை 4 pm மணிக்கு ஏத்திக் கொண்டுவர ரயில்வே ஸ்ரேசனுக்கு போறதுக்கு முதல் மூண்டரை மணிக்கு ஒரு குட்டித் தூக்கம் போட்டு, ஃப்போன் அடிக்க எழும்பி நேரத்தைப் பார்த்தா நாலரை மணியாயிருந்தது. ஸ்ரேசனில பையன்கள் அழுதபடி இருந்தாங்கள்//

உங்கள் பையன்கள் உங்களைச் சும்மாவா விட்டார்கள்??ஒன்றும் திட்டவில்லையா?

துர்க்கா

//உங்களையும் இந்த ஆட்டதில் இழுத்துட்டாங்களா?//
ஆமாம். நானும் 5 பேருக்கு அழைப்பு விடுத்தேனே!.
ஆனா, நம்ம முகராசி அப்பிடி, அதில இரண்டு பேர்தான் ஆட்டத்தில கலந்தாங்க.

//செல்லி இந்த மாதிரி இரகசியத்தை எல்லாம் வெளியே விடலமா?அப்புறம் வலையுலகில் உங்களை அனைவரும் கேட்க போகின்றார்கள் :)))//
நாந்தான் இனிப் சாத்திரம் பாக்கப் போவதில்லை என்று முடிவு எடுத்திட்டேனே! அது மாறாவே மாறாது என்று எல்லாருக்கும் தெரியும். அதனால ஒருத்தரும் கேட்கமாட்டாங்க.

//உங்கள் பையன்கள் உங்களைச் சும்மாவா விட்டார்கள்??ஒன்றும் திட்டவில்லையா?//

சும்மா விட்டாங்களாவா,,?
இப்பகூட ஸ்கூலுக்குப் போகும்போது "அம்மா,மூணரை மணிக்கு நித்திரை கொண்டிடாதீங்க " என்று எச்சரிச்சுட்டுத்தான் போவாங்கள்.

மனமுவந்து வந்து,வாசித்து, ரசித்து,கருத்துகளையும் சொன்ன உங்களுக்கு மிக மிக நன்றி, துர்க்கா.

Chandravathanaa said...

செல்லி
என்னை அழைத்ததற்கு நன்றி.
Weird இன் பொருள் சரியாக விளங்காமலே எழுதினேன். அது எனது Weird ஆக இருக்கலாம் என்று நம்புகிறேன்.

நட்புடன்
சந்திரவதனா

சந்திரவதனாவின் கடைசி 4-5 மனவோசை பதிவுகளை பார்க்க முயற்சித்தால் பக்கம் தீடிரென தோன்றி தீடிரென மறைகிறது. எனது கொம்பியூட்டருக்குரித்தான விசித்திர குணாம்சமா எல்லாருக்கும் பொதுவான பிரச்சனையா அறிய தாருங்கள்

சின்னக்குட்டி

எனக்கு அப்படி ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை.
திரும்ப முயற்சி செய்துபாருங்கோ.

சின்னக்குட்டியர்

எனக்கும் அதே பிரச்சனை, சந்திரவதனா அக்காவிடமும் குறிப்பிட்டிருந்தேன். கடந்த 2 மாதத்துக்கு மேல் அவரின் பதிவுகளைப் பார்க்கமுடியவில்லை.

செல்லிக்கு இருப்பது ஞானக்கண் எனவே பதிவு பிரச்சனையில்லாமல் தெரியும் ;-)

பிரபா


//செல்லிக்கு இருப்பது ஞானக்கண் எனவே பதிவு பிரச்சனையில்லாமல் தெரியும் ;-)//
இதென்ன பகிடியாக் கிடக்கு.
சின்னக்குட்டியருக்கும், பிரபாவுக்கும் சொல்லிவச்ச மாதிரி ஒரே நேரத்தில ஒரேமாதிரிப் பிரச்சனையாக் கிடக்கு.

இதை தீர்க்க வேற வழி ஏதுமில்லியோ?

//சின்னக்குட்டியருக்கும், பிரபாவுக்கும் சொல்லிவச்ச மாதிரி ஒரே நேரத்தில ஒரேமாதிரிப் பிரச்சனையாக் கிடக்கு.

இதை தீர்க்க வேற வழி ஏதுமில்லியோ? //

ஹிஹி... இருக்கு..கேரளாவுக்கு தான் போகணும்

//இதை தீர்க்க வேற வழி ஏதுமில்லியோ? //

ஹிஹி... இருக்கு..கேரளாவுக்கு தான் போகணும்//
பிரபா ஏற்கனவே போனவர். இப்பதானே விளங்குது என்னத்திற்குப் போனவர் எண்டு:-))