எந்தப் பாம்பு என்றாலும் பாம்புதானே! ...ஒரு பாட்டும் கேட்கலாம்

பாம்பைக் கண்டா சாதரணமாக படையே நடுங்கும். அவுஸ்திரேலியாவிலே மண்ணிற பாம்பென்றால் (Brown Snake) எல்லாருமே மிகவும் பயப்பிடுவார்கள்.ஏனென்றால் இது உலகிலுள்ள மிகவும் விசமுள்ள தரைப் பாம்புகளிலேயே இது இரண்டாவதாம்.
இரண்டு மீற்றர் நீளமுள்ள இந்தப் பாம்பு தரையில் துரிதமாக ஊரும். இந்தப் பாம்பு ஒருமுறை கடித்துவிட்டு ஓடிவிடாது. இதற்கு விரைவில் கோபம் வந்திடுமாம்.யாராவது தன்னைத் தாக்க வருகிறார்கள் எனும்போதுதான் அது கோபத்தில் திரும்பத் திரும்ம்பக் கொத்துகிறதாம்.இவை மக்கள் வாழும் இடங்களை அண்டி வாழுகின்றன. காரணம் என்னவெனில் அங்கு தான் இவைக்கு தேவையான உணவு அதாவது எலி, தவளை, முயல் போன்றன கிடைக்கிறது. இதனால் அவுஸ்திரேலியாவின் சிறு நகர்ப்புறங்களில் இவற்றின் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.(1)இவை ஆவுஸ்திரேலியாவிலேயே குயின்ஸ்லாந்தில்த் தான் அதிகமாக் காணப்படுகின்றன. எங்கள் பக்கத்து சிறு நகரமான வெஸ்ற்லேக்கில்(Westlake) மண்ணிறப் பாம்பொன்று கடந்த வாரம் ஒரு நாயைக் கடித்திருக்கிறது. அதுவும் வீட்டிற்குள்ளே வந்து தாக்கி இருக்கிறது. எந்தப் பொந்துக்குள்ளும் இலகுவில் இந்த வகைப் பாம்புகள் நுழையக் கூடியவை என்பதால் இவை வீடுகளுக்குள் (யன்னல் ஊடாக) செல்வதில் ஆச்சரிய்ப்பட ஒன்ற்மில்லை.

நாயைக் கொத்துவதைக் கண்ட அந்த வீட்டுப் பெண் துவாய் ஒன்றை பாம்பிற்கு எறிந்து அது மூடுப்பட்டவுடன் அந்த நாயை அந்த இடத்தை விட்டு அகற்றி இருக்கிறார். பின்னர் பாம்பு பிடிப்பவரின் உதவியை நாடினார். தனது நாய்க்கு இந்த ஆபத்து ஏற்பட்டதால் அயலவருகு இச் சப்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் என அந்தப் பெண் வேன்டிக் கொண்டார்.(2)

இதே போல் மாசி மாதம் 2007 இல் மிடில் பாக்(Middle Park) எனும் இடத்தில் கெயித் ற்றவேஸ் (Keith Travers) என்பவரை ஒரு மண்ணிறப்பாம்பு கடித்து அந்த நபர் இரண்டு நாள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றாராம் என பாம்பு பிக்க உதவுபவர் குறிப்பிட்டார். பதினாறு வயதுப் பையன் ஒருவனும் 13/1/2007 இல் சிட்னியில் இந்தப் பாம்புக் கடியால் மரணமடைந்திருக்கிறான்.(1) 1998 இல் இந்த பாம்பு கொத்தி 6 பேர் இறந்திருக்கிறார்களாம். வருடத்திற்கு சராசரியாகப் பார்த்தால் 2 பேர் இறக்கிறார்களாம்.(3)

இந்த பாம்புகள் பற்றிய தகவல்கள், கதைக்ளை அறியும்போது யாழ்ப்பாணத்தில் எங்கள் ஊரில் அடிக்கடி எங்கும் காணக் கூடிய சாரைப் பாம்பின் நினைவுதான் வருகிறது. சாரை ஊரும்போது சர சர என எழுப்பும் என்ற ஒலிக் குறிப்பின் அடப்படையில் சாரை என்று பெயர் வந்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். ஆனால் வேகமாகப் போகும் பாம்பிற்குச் சாரைப் பாம்பு என்றும் பெயர் உண்டாம் என்கிறார் ராம். கி. (4)
அத்துடன், முத்திரப் பிடையன், கோடாலிப் பாம்பு பற்றியும் கேள்விப் பட்டிருக்கிறேன். இவை விசமுள்ள பாம்புகள் என்பர். ஆனால் சாரையைக் கண்டால் யாரும் அங்கு பயப்பட்டதாகத் தெரியவில்லை. இது விவசாயிக்கு தோட்டத்தை நாசம் செய்யும் எலி,தவளை,முயலை இது பிடித்துத் தின்பதால் "விவசாயியின் நண்பன் " என்றும் சொல்லப்படுவதுண்டு.(5) வீடுகளில் வரும் சாரை கோழிக் குஞ்சைத் தின்றுவிடும் என்றும் பயப்படுவர். கோழியின் முட்டையையும் இது தின்பதால் இதனைக் கண்டால் வீடுகளில் துரத்திவிடுவர்.எங்கள் வீட்டில் பாம்ப வித்தியாசமான முறையில் துரதி ஓட்டம் பிடிக்கச் செய்வோம். மண்ணெண்ணையை ஒரு சேலைத் துணியில் நனைத்து நீளமான தடியில்க் கட்டி பாம்பின் முகத்தில் அல்லது உடம்பில் தேய்க்க அது ஒரே ஓட்டமாய் ஓடிவிடும். ஏனென்றால் மண்ணெண்ணை பட்டால் அதற்கு உடம்பு எரிவதுபோல் இருக்குமாம்.

இறுதியாக ஒரு பாடலை கேட்டு மகிழுங்கள். இது பேய் பிசாசு பற்றிய பாட்டு. இதிலே, "சருகுமேலே சாரைப் பாம்பு சர சரக்குதே" என ஒரு வரி வருகிறது.சாரைப் பாம்பென்றாலும் என்றாலும், பாம்பு பாம்புதானே! பயம் வராமல் இருக்குமா?
உசாத்துணை உதவிகள்
1. http://en.wikipedia.org/wiki/Pseudonaja_textilis
2. South-West News Paper 7.3.2007
3. www.burkesbackyard.com.au/1999/archives/25?p=2000
4. http://www.treasurehouseofagathiyar.net/01400/1479.htm
5. http://www.cviewmedia.com/Herp_News%5CHN02707.htm
படம்: www.pbase.com, www.qm.qld.gov.au/features/snakes/snakedetail...
பாடல்:ravianbil.com/kummiruttulae.mp3
________________________________________________________________________________________
படித்துப் பார்த்து உங்க கருத்தைச் சொன்னீங்க என்றால் மிகவும் நன்றியாயிருப்பேன். அன்புடன் செல்லி

44 Responses to “எந்தப் பாம்பு என்றாலும் பாம்புதானே! ...ஒரு பாட்டும் கேட்கலாம்”

வெள்ளிக்கிழமை அதுவுமா பயப்பிடுத்திப் போட்டியள் , நல்ல தகவல்கள்

வணக்கம் பிரபா

//பதினாறு வயதுப் பையன் ஒருவனும் 13/1/2007 இல் சிட்னியில் இந்தப் பாம்புக் கடியால் மரணமடைந்திருக்கிறான்.//

கவனம். புதருகளைப் பாத்து நடவுங்கோ!

வருகைக்கு நன்றி

போன வெள்ளிக்கிழமை பின்னேரம் எங்கட garage கதவில குடியிருந்த red back ஐ spray அடிச்சுக் கொலை செய்தேன். இன்டைக்குப் பாத்தா நீங்க பாம்புக் கதையோட வந்திருக்கிறீங்க.. :O))

(சிலந்தி வலையிட இழை எவ்வளவு உறுதியானது என்டு வியந்து போனன். குச்சியால பிய்க்கப் பார்த்தும் பிய்யேல்ல.. சிலந்தியோட தொடர்பை அறுக்க விரும்பாம இருந்துது..)

பதினாறு வயசுப் பையனின்ர கதையை திரும்பவும் மேற்கோள்காட்டி கானாபிரபாவை எச்சரிப்பதில் ஏதாவது சூட்சுமம் இருக்கிறதா?
தனக்குப் பதினாறு வயசுதான் எண்டு உங்களுக்கும் சொல்லியிருந்தாரா?

சிட்னியில நடந்ததெண்டதைத்தான் மேற்கோளிட்டனான் எண்டு சளாப்பக் கூடாது.
__________________
யாழ்ப்பாணத்தில் முத்திரைப் புடையனும் நாகமும்தான் ஆபத்தான இனங்கள்.

//அந்த வீட்டுப் பெண் துவாய் ஒன்றை பாம்பிற்கு எறிந்து அது மூடுப்பட்டவுடன் ...//

செல்லி, எனக்கு விளங்கலை என்ன அர்த்தமுன்னு(-:

துவாய்ன்னா என்ன?

வாங்க துளசி
//துவாய்ன்னா என்ன?//
துவாய் என்றால் Towel= ரவல்.அதாவது பாம்பு நாயைக் கடித்த பின் அந்த இடத்தை விட்டுப் போகாமல் அது நாய்க்கு முனாலேதான் நின்றது. அதனால் அந்தப் பெண் பாம்பை துரத்துவதற்காக ரவலை எறிந்திருக்கிறாள். அந்த ரவல் பாம்பை மூடிவிட்டது, அதன் பின் நாயைக் கலைத்துவிட்டாள்

வருகைக்கு நன்றி

ஐய்யோ.இப்ப ரவல்ன்னா என்னன்னு கேக்கணுமா? :-))))))

ச்சும்மா:-))))

said... எண்டு மாயாவி மாதிரி வந்து போறவ இன்னும் தன்ர பேரைத் திருத்தேலயோ?

வாங்க ஷ்ரேயா

பதிவில் உங்க பின்னூட்டத்தில மட்டும் உங்க பேர் விழல, ஏன் என்று தெரியல. தனியே செட்(said) என வந்திருக்கு.
//சிலந்தியோட தொடர்பை அறுக்க விரும்பாம இருந்துது..//
சிவப்புச் சிலந்திக்கு பாவம் பாக்காதீங்க, கொடியில காயப் போடுற உடுப்புகளுக்க கூட ஒளிச்சிருக்குமாம்
வருகைக்கு நன்றி

வாங்க வசந்தன்

எதுக்கும் உமக்கொரு கால் கட்டுப் போட்டாச் சரியாயிடும். உம்மட அம்மாவின்ர போன் நம்பரைத் தாரும்

//பதினாறு வயசுப் பையனின்ர கதையை திரும்பவும் மேற்கோள்காட்டி கானாபிரபாவை எச்சரிப்பதில் ஏதாவது சூட்சுமம் இருக்கிறதா?//

ஒரு சூட்சுமமும் இல்லை

தனக்குப் பதினாறு வயசுதான் எண்டு உங்களுக்கும் சொல்லியிருந்தாரா? //
பிரபாவாவது வயசைச் சொல்லுறதாவது. என்ன மிஞ்சி மிஞ்சிப் போனா ஒரு 52 ஆகியிரும்னு நினைக்கிறன், சரியா?
சிட்னியில நடந்ததெண்டதைத்தான் மேற்கோளிட்டனான்.இதில சளாப்பிறதுக்கு என்ன இருக்கு.உண்மையைத்தானே சொல்றேன்

வருகைக்கு நன்றி

வசந்தன்

said... எண்டு மாயாவி எண்டுமில்லப்பா.
அவவினுடய பேர் அதில விழவில்ல ஏனெண்டு தெரியல.

அது சரி, எக்ஸாம் எல்லாம் நல்லா செய்து முடிஞ்சுதா?
வருகைக்கு நன்றி

வசந்தன் - மாயாவியா வந்து போறது நானென்டு தெரியுதெல்லோ..பேந்தேன் பேரை மாத்த? ;O)
மீயுரைய மாறச் சொல்லுங்க.. நானும் மாறுறன்.. :OD

- 'மழை' ஷ்ரேயா(Shreya)

செல்லி!
அவுஸ்ரேலியப் பாம்பினங்களை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன். ஈழத்தில் நாகம்; புடையன்;சுருட்டை வகைகள் விசமுள்ளவை ஆனால் கோடலி;சாரை,நீர்ப்பாம்புகள் விசமற்றவை.
மண்ணெய் பாம்பு விரட்ட நல்ல மருந்து;அத்துடன் வசம்பு உரைத்தும் தெளிப்பர்.
நல்ல விடயங்கள்

வாங்க யோகன்

//ஈழத்தில் நாகம்; புடையன்;சுருட்டை வகைகள் விசமுள்ளவை ஆனால் கோடலி;சாரை,நீர்ப்பாம்புகள் விசமற்றவை.//நல்ல தகவல்.
முத்திரைப் புடையனை நான் ஊரில் எங்கள் வீட்டில் பார்த்தேன்.அதன் உடம்பின் மேற்பகுதி முத்திரை வடிவமாகத்தான் இருந்த்தது. அப்பா என்ன செய்தார் என்றால் "எடடா பொல்லை அடிச்சுக் கொழுத்துவம்" என்றார். ஆனா அம்மா அந்தப் பாம்பின் வாலுக்கு மேலும் நடு உடம்புக்கு மேலும் இரண்டு தடிகளால அமத்திக் கொண்டு, வாயொடுங்கின நீட்டுப் போத்தலின் (=நெல்லிரச போத்தல் என நினைக்கிறன்) வாயை பாம்பின் முகத்திற்கு நீட்ட அது முகத்தை உள்ளே விட்டதும் அமத்திக் கொண்டிருகிற தடிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி, பாம்பு முழுதாக உள்ளே போனபின் போத்தலின் வாயை மூடிவிட்டா.இப்படி பாம்பை பிடித்து விட்டார். பிறகு அது எல்லருக்கும் காட்சிப் பொருளாகியது. பின் அந்தப் பாம்பை தூரமாக பற்றைகளுக்குள் விட்டு விட்டோம்.
என் அம்மாவின் கொள்கை"பாம்பை அடிக்கக் கூடாது" என்பதுதான்.

உங்க வருகைக்கும்,தகவலுக்கும், பாராட்டுக்கும் நன்றி

வசந்தன்
// 'மழை' ஷ்ரேயா(Shreya) said...

வசந்தன் - மாயாவியா வந்து போறது நானென்டு தெரியுதெல்லோ..பேந்தேன் பேரை மாத்த? ;O)
மீயுரைய மாறச் சொல்லுங்க.. நானும் மாறுறன்.. :OD//

இப்ப என்ன பதில் சொல்லப் போறீர்?

இவ ஒருத்திக்காக கிட்டத்தட்ட ரெண்டாயிரம் வலைப்பதிவிலயும் மீயுரை (கோடிங்) மாத்த வேணுமாம்.
நல்ல கதையா இருக்கே?

செல்லி,
ஒரு பிரச்சினையுமில்லை. அவ தன்ர டிஸ்பிளே நேமில சின்னதா ஒரு மாற்றம் செய்தாச்சரி. இல்லை, தனக்கந்த மேற்கோட்குறி வேணும் எண்டு அடம்பிடிச்சா நாங்கள் என்னதான் செய்ய?
திருத்த வேண்டியது அவதான்.

நாங்கள் நாலைஞ்சு பேர் உவவின்ர பின்னூட்டங்களை வெளியிட மாட்டம் எண்டு முடிவெடுத்தா அம்மணி தன்ரபாட்டுக்கு வழிக்கு வருவா.

இதென்ன வம்பாப் போச்சு?
நான் கதைச்சதுக்கும் கால்கட்டுப் போடுறதுக்கும் என்ன தொடர்பு?
உங்கினேக்க தரகர் வேலையளும் பாக்கிறியளோ?

கேக்காமலே பொம்பிளை மாப்பிள்ளை பாக்கிறதில எங்கட பெண்டுகளுக்கு அலாதிச் சந்தோசம் எண்டது ஏற்கனவே தெரியும். கடசிப்பதிவிலயும் சொல்லியிருக்கிறன்.

வசந்தன்

//இவ ஒருத்திக்காக கிட்டத்தட்ட ரெண்டாயிரம் வலைப்பதிவிலயும் மீயுரை (கோடிங்) மாத்த வேணுமாம்.
நல்ல கதையா இருக்கே?//
மன்னிக்கவும் வசந்தன். எனக்கு இதெல்லாம் ஒன்றும் தெரியாது. ஏதோ தமாசுக்காக இரண்டு பேரும் எழுதியறாளாக்கம் எண்டு நினைச்சன். பிரச்சனை இதுவா?
// செல்லி, ஒரு பிரச்சினையுமில்லை. அவ தன்ர டிஸ்பிளே நேமில சின்னதா ஒரு மாற்றம் செய்தாச்சரி. இல்லை, தனக்கந்த மேற்கோட்குறி வேணும் எண்டு அடம்பிடிச்சா நாங்கள் என்னதான் செய்ய? திருத்த வேண்டியது அவதான்.
நாங்கள் நாலைஞ்சு பேர் உவவின்ர பின்னூட்டங்களை வெளியிட மாட்டம் எண்டு முடிவெடுத்தா அம்மணி தன்ரபாட்டுக்கு வழிக்கு வருவா.//
என்ன்மோப்பா நீங்களாச்சு, மழையாச்சு!

வசந்தன்

இதென்ன வம்பாப் போச்சு?
//நான் கதைச்சதுக்கும் கால்கட்டுப் போடுறதுக்கும் என்ன தொடர்பு?
உங்கினேக்க தரகர் வேலையளும் பாக்கிறியளோ?// இதென்ன புதுக் கதை! தரகர் வேலையோ? அப்பிடி நான் ஒன்றும் கதைக்கேலையே.

// கேக்காமலே பொம்பிளை மாப்பிள்ளை பாக்கிறதில எங்கட பெண்டுகளுக்கு அலாதிச் சந்தோசம் எண்டது ஏற்கனவே தெரியும். கடசிப்பதிவிலயும் சொல்லியிருக்கிறன்//
வசந்தன், சத்தியமா எனக்கு இதில ஒன்றும் விளங்கேலை. நான் ஒரு பெண்டுகளோடையும் கூட்டுச் சேரலையப்பா. ஏதோ முசுப்பாத்திக்கு நான் எழுதப் போய் இப்பிடி எல்லாம் ஆகிப் போச்சு. இனிமே இந்தமாதிரிப் பண்ணமாட்டனப்பா.ம.கொ.ங்க.

என்ன செல்லி ரொம்பவும் பயமுறுத்தல்.நான் அவுஸ்த்திரேலியா வரவேண்டாமா?
இங்கே நான் இருப்பது பாம்பு பண்ணைக்குப் பக்கத்தில்தான்.

பாம்பைப் பற்றி பலவிஷயங்களைத் தேடி எடுத்துபோட்டுஅப்படியே கல்யாணம் வரை கொண்டுபோயாச்சு.

வாங்க தி. ரா. ச.
//ரொம்பவும் பயமுறுத்தல்.நான் அவுஸ்த்திரேலியா வரவேண்டாமா?//

சிட்னிக்குத்தானே வாறீங்க,இந்தப் பாம்பு குயின்ஸ்லாந்தில்த்தான் அதிகமாம். பயப்பிடாம வாங்க, சார்.

//இங்கே நான் இருப்பது பாம்பு பண்ணைக்குப் பக்கத்தில்தான்.//
என்றாலும் பாம்புக்கு பயப்பிடிறீங்க, பாத்தீங்களா.
எப்ப சிட்னி வர்றீங்கன்னு இன்னும் சொல்லவே இல்லை.
உங்க வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி.

பாம்பா.. யம்மாடி தப்பிச்சாச்சு..

சயந்தன்
பாம்புக்கு அவ்வளவு பயமா?
நாங்க எந்தப் பாம்பென்றாலும் பயப்படாம பிடிப்போம்.
எப்பிடி?
யோகனின் பின்னூட்ட பதிலில் எப்பிடி பாம்பைப் (பிச்சோம்)பிடிக்கிறதுன்னு போட்டிருக்கேன்.
எப்பவோ ஒருக்கா இங்கால்ப் பக்கம் வராமயா போப்போறீங்க.
உங்கள் வருகைக்கும், ஆதரவுக்கும் நன்றி

Anonymous said...

சயந்தன் இப்ப அவுஸ்ரேலியாவில இல்லைத்தானே. அப்பாடி.... இப்பதான் நிம்மதியா உலாவ முடியுது.

பாம்பு

வாங்க அனானி
//சயந்தன் இப்ப அவுஸ்ரேலியாவில இல்லைத்தானே. அப்பாடி.... இப்பதான் நிம்மதியா உலாவ முடியுது.//
ஆரம்பிச்சாசா attack பண்ண.
சயந்தனைப் பாம்பென்றால் அவரேன் பாம்புக்குப் பயப்படுறார், கொஞ்சம் logical ஆக think பண்ணிப் பாருங்க அனானி.
உங்களுக்கு சயந்தன் மீது ஏதோ தனிப்பட்ட கோபம் இருக்குன்னு நினைக்கிறேன்.
எனினும், உங்க வருகைக்கு நன்றி.

பாம்பு

//சயந்தன் இப்ப அவுஸ்ரேலியாவில இல்லைத்தானே. அப்பாடி.... இப்பதான் நிம்மதியா உலாவ முடியுது.//
சயந்தன் போன பிறகு தானாம் பாம்புகளே நிம்மதியா உலவுகின்றனவாம். ஆனாப் பாரும் பாம்பு எனக்கு பாம்பை படத்தில கூட பாக்கப் பயம்.
(அதென்னமோ தெரியல்லை.. எனக்கு மட்டும் பூனைகளும் பாம்புகளும் பின்னூட்டமிடுகின்றன :))

சயந்தன்
இப்பியும் ஆக்கள் இருக்கிறாங்களா?
//(அதென்னமோ தெரியல்லை.. எனக்கு மட்டும் பூனைகளும் பாம்புகளும் பின்னூட்டமிடுகின்றன :))//
நம்பவே முடியலப்பா!

Anonymous said...

paampai paakkave payamaak kidakku.

uurp paampukal nalla
thakavalkal
nanri

Anonymous said...

ஊரில ""கொம்பரி மூக்கன்"" ஒரு பாம்பு
இருக்கிறதாம், அது ஆக்களைக் கடிச்சுப் போட்டு
மரத்தில் கொப்புகளுக்கு மேல ஏறி இருந்துடுமாம்.
பிறகு கடிபட்டவர் இறந்தவிட்டால் சுடலையில்
கொண்டு போய் எரித்த பின்பு தான் மரத்தை விட்டு
இறங்குமாம். மெய்யோ பொய்யோ தெரியாது ஊரில கேள்விப்
பட்டிருக்கிறன்.

அதோட பாம்புகள அடிச்சுக் போட்டா, உடன எரிச்சுப்
போடவேணும் இல்லாட்டி காத்துப்பட்டா பாம்பு உயிர்த்து
பழிவாங்கும். என்றும் சொல்லுறவ.

அனானி
//சுடலையில் கொண்டு போய் எரித்த பின்பு தான் மரத்தை
விட்டு இறங்குமாம்.எரிக்க வேணும் இல்லாட்டி காத்துப்பட்டா பாம்பு உயிர்த்து பழிவாங்கும்.//

இவை வெறும் கதைகள்தான். உண்மையல்ல.
உயிரினங்களைப்பற்றி பல தவறான, அறிவியலுக்குப் பொருத்த மற்ற கதைகள் ஊடகங்கள் மூலம் பரப்பப்படுகிறது.
பலர் பாதிக்கப்பட்டனர் என்ற செய்தி
அதே போல பாம்புகளைப் பற்றி பல தவறான கதைகள் நாளிதழ்களில் அவ்வப்போது வருகின்றது.. நல்ல பாம்பு பழி தீர்க்கும் என்றும், அது பால் குடிக்கும் என்றும், சாரைப் பாம்புடன் இணை சேர்கிறது என்றும், நச்சுப்பாம்பால் தீண்டப்பட்டவரை மந்திரிப்பதன் மூலம் காப்பாற்றலாம் எனவும் பல கதைகள். பாம்புக்கதைகளில் அடிக்கடி சொல்லப்படுவது.
பாம்பு போன்ற உயிரினங்களைப்பற்றிய அறிவியல் சார்ந்த விவரங்களுக்கு இதழ்கள் எதிலும் இடமில்லாமல் போய்விட்டது என்கிறது ஊடகங்களும், காட்டுயிர்களும் என்ற கட்டுரை ஒன்று.
நன்றி

செல்லி, எனக்கும் தெரியும் அது நான் போடுற single quoteஆல வாற பிரச்சனை என்டு.(பேரெழுதுற விதத்தை மாத்திற யோசினையிலதான் இருக்கிறன்.)

சும்மா பகிடிக்கு நானும் வசந்தனும் விளையாடிக் கொண்டிருக்கிறம்.. நீங்கள் சீரியசா எடுக்காதீங்க.. :O))

- `மழை` ஷ்ரேயா(Shreya)

ஷ்ரேயா
வலைப்பதிவு உலகிற்கு நான் புதிது என்பதால் உண்மையில் இது என்னவென்றே விளங்கவில்லை.
//சும்மா பகிடிக்கு நானும் வசந்தனும் விளையாடிக் கொண்டிருக்கிறம்.. நீங்கள் சீரியசா எடுக்காதீங்க..//
இது பகிடிக்காகத்தான் என்றால் மனதிற்கு கொஞ்சம் நிம்மதி!
வசந்தனும் இப்படிச் சொன்னாத்தான் இன்னும் நிம்மதியாயிருக்கும்.

gopi said...

dear selvi madam,
verygood article.. why not u make a article about australian citizenship,employment oppertunities,life style,culture etc., it will be useful for us..
gopinath g(feelgopi@gmail.com)

கோபி
பாராட்டுக்கு நன்றி.நேரம் இருக்கும்போது நீங்க கேட்டவற்றை எழுத இருக்கிறேன். கீழே இருக்கும் வலைப் பக்கங்களையும் பார்த்தால் நிறைய தகவல்கள் அறியலாம்.
http://www.migrantlaw.com/students.htm
http://www.migrationint.com.au/skilledregion.asp
http://www.careers.usyd.edu.au/contactus/faq.shtml

வருகைக்கு நன்றி.

Vasanthan said...

//இது பகிடிக்காகத்தான் என்றால் மனதிற்கு கொஞ்சம் நிம்மதி!
வசந்தனும் இப்படிச் சொன்னாத்தான் இன்னும் நிம்மதியாயிருக்கும்.//


செல்லி,
பகிடிக்குத்தான் எண்டதை இப்ப சொல்லிறன்.

நீங்களிட்ட பின்னூட்டத்தை உடனேயே வாசிச்சிட்டன். நீங்கள் பிசகா விளங்கீட்டியள் எண்டதும் விளங்கீட்டுது. இதுக்கெல்லாம் போய் திருப்ப விளக்கம் குடுத்துக்கொண்டிருக்க விரும்பேல. ஆனா நான் வந்து சொன்னாத்தான் உங்களுக்கு நிம்மதி வருமெண்டு சொன்னதால - நாங்கள் செய்த இந்தப் பாதகச் செயலால நீங்கள் மனமுடைஞ்சு நிம்மதி கெட்டு மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறியள் எண்டது விளங்கினதால - உடனயே 'அது பகிடிக்குத்தான்' எண்ட ஒப்புதல் வாக்குமூலத்தைத் தரவேண்டியதாப் போச்சு. (ஒரு கிழமையா உங்கட நிம்மதியைக் குலைச்ச பாவத்தை எங்க போய்த் துலைக்கிறதெண்டு தெரியேல.)
** இது பகிடிக்கு.

ஒரு விசயத்தை எழுதிப்போட்டு பிறகு அதை எந்தப்பொருளில எழுதினான் எண்டு திரும்பத்திரும்ப விளங்கப்படுத்திறது விசர் வேலை. எப்பிடி விளங்கினமோ அப்பிடியோ போகட்டும் எண்டு இருந்திட்டன்.
உது எனக்கு வேற இடத்திலயும் நடந்திருக்கு. நீங்கள் என்ர பதிவில எழுதின ரெண்டு மூண்டு பின்னூட்டங்கள் தொடர்பான பதிலிலயே நான் தெளிவாக் குறிப்பிட்டிருக்கிறன் (அதாவது ஒன்றை எழுதிவிட்டு, அது பகிடிக்குத்தான் எண்டு விளங்கப்படுத்திறது பற்றி). உங்களுக்கு அதுகளும் விளங்கேலயோ தெரியேல. நீங்கள் எழுதிற பின்னூட்டங்கள் மாதிரி ஒவ்வொரு இடத்திலயும் 'இது பகிடிக்கு' எண்டு குறிப்புச் சொல்லியிருந்தா உங்களுக்குப் பிரச்சினையாக இருந்திருக்காது. என்னைப்பொறுத்தவரை அது பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது.
** இதுவும் பகிடிக்கு.

அந்தந்த இடத்தில அவையவைக்கேற்ற மாதிரிக் கதைக்கோணுமெண்டதை விளங்கீட்டன்.
இஞ்ச அலைவரிசை சரிவரேல. மாத்தவேணும்.
** இதுவும்கூட பகிடிக்குத்தான்.
_____________________
எல்லாம் உந்த சிட்னிக்காரியால வந்தவினை. பேசாமல் முதலே ஒழுங்காப் பேரை மாத்தித் துலைச்சிருக்கலாம். கொழுவி விடுறதுக்கெண்டே இருக்கினம்.
*** இதுவும் பகிடிக்குத்தான் (இந்த விளக்கமும் செல்லிக்குத்தானேயன்றி ஷ்ரேயாவுக்கன்று)

செல்லி அக்கா!
என்ன இது பாம்பைப் பற்றிப் பதிவு போட்டு பயமுறுத்துகிறீர்களே!

அடுத்த பதிவாக மான், மயில், குயில், கிளி என்று சற்று ஆறுதலான
பதிவாகப் போடுங்கள்!

செல்லி அக்கா!
என்ன இது பாம்பைப் பற்றிப் பதிவு போட்டு பயமுறுத்துகிறீர்களே!

அடுத்த பதிவாக மான், மயில், குயில், கிளி என்று சற்று ஆறுதலான
பதிவாகப் போடுங்கள்!

வாங்க வசந்தன்
//நான் வந்து சொன்னாத்தான் உங்களுக்கு நிம்மதி வருமெண்டு சொன்னதால - நாங்கள் செய்த இந்தப் பாதகச் செயலால நீங்கள் மனமுடைஞ்சு நிம்மதி கெட்டு மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறியள் //
ஏனென்றால் நான் ஒன்றும் தவறாக நினைக்கவுமிலை; அப்படி அர்த்தத்துடன் (யாரையும் மறாஇமுகமாக துன்புறுத்தும்) எழுதுவதுமில்லை. அப்படி இருக்க அப்படியாகிவிட்டதே என்ற கவலை இருந்தது.

//ஒவ்வொரு இடத்திலயும் 'இது பகிடிக்கு' எண்டு குறிப்புச் சொல்லியிருந்தா உங்களுக்குப் பிரச்சினையாக இருந்திருக்காது. //
உண்மையில் நானும் அப்படித்தான் நினைத்தேன்.வலைப் பதிவு உலகம் எனக்கு மிக மிகப் புதிது(இதை அடிக்கடி சொல்லியிருக்கிறேன்) என்பதால் "பகிடி" என்றோ :-)) என குறியீடு போட்டிருந்தா இந்த தவறான புரிந்துணர்தலைத் தவிர்க்கும் என்பது தெரியாமற் போய்விட்டது.அதற்காக நான் மன்னிப்புக் கேட்கிறேன்

இப்படி ஒரு விபரமான பதிலைத் தந்தமைக்கு மிக மிக நன்றி.

வாங்க SP.VR. சுப்பையா சார்

// என்ன இது பாம்பைப் பற்றிப் பதிவு போட்டு பயமுறுத்துகிறீர்களே!//
உண்மையில் அந்தப் படத்தில் இருக்கும் பாம்பைப் பார்க்க யாருக்கும் பயம் வரும்.அப்படியான ஒரு கடும் சீற்றம் கொண்ட பாம்பு.

//அடுத்த பதிவாக மான், மயில், குயில், கிளி என்று சற்று ஆறுதலான
பதிவாகப் போடுங்கள்!//
அதற்கென்ன அப்படிப் போட்டாப் போச்சு!
உங்க சோதிடப் பதிவுகள் ரொம்ப அருமை! எல்லாத்தையும் படிக்கிறேன், ஆனா பின்னூட்டம் எல்லாவற்றுக்கும் போடவில்ல.
உங்க வருகைக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி, சார்

//எல்லாம் உந்த சிட்னிக்காரியால வந்தவினை. பேசாமல் முதலே ஒழுங்காப் பேரை மாத்தித் துலைச்சிருக்கலாம்.//

மாத்தீட்டனே... இனிமேற்பட்டு பெயர் ".. said" என்டு அருவமா வராது என்டு நம்பலாம் :O))

-`மழை` ஷ்ரேயா(Shreya)

வாங்க ஷ்ரேயா
சிட்னி,(ஷ்ரேயா) மெல்போன்(வசந்தன்) இந்த இரண்டு மாநிலங்களுக்கிடையிலான பிரச்சனை குயின்ஸ்லாந்தினால்(செல்லி)முடிவுக்கு வந்திட்டுது, அதாவது இனி மழை (எண்ட பேச்சு) வராது. ஆனா மழை எங்களுக்கு வேணும், வசந்தன் தண்ணீர் கட்டுப்பாட்டைக் குறைக்க:-))(பகிடி)
மிக மிக நன்றி ஷ்ரேயா.:-))))
I'm rea.....lly rea...lly happy.
Let's keep smiling!:-)))

Anonymous said...

அக்கா
பயங்கரமான பாம்பாய்க் கிடக்கு. உங்கால்ப் பக்கம் வரவேண்டாம் எண்டு சொல்லுறியள் போல.
அன்புடன்
கணேசன்

பாம்புக்கு பயப்பிடுறவை இஞ்ச வாறது நல்லதில்லை எண்டுதான் நான் நினக்கிறன்.
நன்றி.