இலக்கியத்தில் வரும் உணவுகள்.

தமிழிலுள்ள ஞான நூல்களில் தலையாயது "சிவஞானபோதம்" என்ற நூல் ஆகும் சிவஞானபோதத்தை இயற்றியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருள்மிகு மெய்கண்ட தேவநாயனார் ஆவார். அந்த சிவஞானபோதத்திற்கு பேருரை விரித்தவர் திருவாவடுதுறை அதீனத்தைச் சார்ந்த மாதவச் சிவஞான யோகிகள். இவர் ஒருமுறை விருந்தினர் வந்தபோது அவர்களுக்கு உணவு கொடுக்க சமையலாளிடம் என்னென்ன எப்படிச் செய்ய வேண்டும் என கட்டளை இடுவதை கீழ்வரும் பாடலில் காணலாம்.

சற்றே துவையல்அரை தம்பிஒரு பச்சடிவை
வற்றல் ஏதேனும் வறுத்துவை - குற்றம்இலை
காயம்இட்டுக் கீரைகடை கம்மெனவே மிளகுக்
காய்அரைத்து வைப்பாய் கறி


ஒரு துவையல், அரையல்-பச்சடி(யாழ்ப்பாணத்தில் சம்பலைப் பச்சடி என்போம்),வறுவல்- வற்றல் குழம்பு என நினக்கிறேன்,கடையல்-கீரை (யாழ்ப்பாணத்திலும் முளைக்கீரையை அவித்துக் கடைவோம்), அரையல்-கம்மென்று மணம் வீசும் மிளகை அரைத்துவைக்கும் ரசம். இந்த அரையல் பொடியாக ( மாவாக )அரைப்பதை குறிக்கிறதாக் இருக்கலாம்.

இது தவிர, இன்னொரு வேளையில், சிவஞான முனிவர் வந்த விருந்தினரை வரவேற்று என்ன உணவளிக்கிறார் என்பதை நோக்குவோம்.

அரன்சிரம் காணாப்புள்ளும்
அத்துடன் இறக்கும்பூமி
வரன்முறை யாகவந்த
வடசொலில் சுவையாம்ஒன்றும்
கரம்தனில் அள்ளிஉண்ணக்
களிதரு பாயாடொடு
உரமலர் மந்தன்கூட்டும்
உண்ண வருகுவீரே


அரன் சிரம் காணாப் புள் என்பது அன்னப் பறவை. அன்னம் சோற்றைக் குறிக்கிறாது; , சாம்+ பார் சாகும் என்றால் இறக்கும், பார் என்றால் பூமி என்பதாக இறக்கும் பூமி என்பது சாம்பார் எனக் கருத்தாகிறாது. தமிழகத்தில் சாம்பார் பிரதான கறிகளில் ஒன்று. ஆனால் யாழ்ப்பாணத்தில் சாம்பார் என்ற சமையல் இருக்கவில்லை.வடமொழியில்(சொல்) சுவை எனறால் ரசம் என்று பொருள்.பாய்+அடு + ஒடு = பாயாடொடு. இதில் பாய் என்பது பாய்கின்ற, அடு என்பது அசம் (வடமொழியில்), என பாயாடு பாயாசம் என்றாகி வருகிறது. சனீஸ்வரனுக்கு இன்னொரு பெயர் மந்தன் என்பதாகும் மலர் என்பது "பூ" வைக் குறிக்கும்.எனவே "மலர்மந்தன்" என்பது "பூசனி" யைக் குறித்து நிற்கிறது.
அன்னம், சாம்பார், இரசம், பூசனிக் கூட்டு, பாயசம் போன்ற எல்லாமுடன் விருந்து கொடுக்கிறார் பாருங்கள்!

12 Responses to “இலக்கியத்தில் வரும் உணவுகள்.”

செல்லி,
மிகவும் அருமையான பதிவு. அறிந்திராத பழைய பாடல்கள். மிக்க நன்றி.

ஆர்வக் கோளாறால் சில கேள்விகள். ஆட்சேபனை இல்லையெனின், நேரம் கிடைக்கும் போது தயவு செய்து தெரியப்படுத்துங்கள்.

(1)சிவஞானபோதம் யார்[கவிஞரா இல்லை எழுத்தாளாரா அல்லது நாவலர், யோகர்சுவாமிகள் போல் சைவத் தொண்டரா?]

(2)சிவஞானபோதம் ஈழத்தில் எவடம்?

(3)அவர் வாழ்ந்த காலப்பகுதி எது?

(4)இவர் இயற்றிய நூல்கள் எவை?

வெற்றி

ஆர்வக் கோளாறால் சில கேள்விகள்.
(1)சிவஞானபோதம் யார்[கவிஞரா இல்லை எழுத்தாளாரா அல்லது நாவலர், யோகர்சுவாமிகள் போல் சைவத் தொண்டரா?]இது ஒரு ஞான நூல் , இயற்றியவர் மெய்கண்ட தேவநாயனார்

(2)சிவஞானபோதம் ஈழத்தில் எவடம்?
பிறந்த ஊர் தென் ஆற்காட்டின் திருப்பெண்ணாகடம். இவர் வாழ்ந்திருந்த இடம் திருவெண்ணெய்நல்லூர்.

(3)அவர் வாழ்ந்த காலப்பகுதி எது?13ம் நூற்றாண்டு

(4)இவர் இயற்றிய நூல்கள் எவை? சிவஞானபோதம் மட்டுந்தான் என நினைக்கிறன்
வருகைக்கும் ஆர்வத்திற்கும் நன்றி

செல்லி,

வெற்றி கேக்காம விட்டது............

இவரும் ஒரு பதிவரா?

:-))))

துளசி
:-))))
சரியான சிப்புத்தான் போங்க.

எந்தக் காலத்தில் வாழ்ந்தார்? எனக் கேட்டார் அல்லவா, அதனால் நிச்சமா இந்தக் கேள்வியைக் கேட்கத் தோன்றியிருக்காது.
நன்றி, துளசி.

வெற்றி

நீங்க கேட்காத ஒரு கேள்விகுப் பதில்:
இவர் ஒரு வலைப் பதிவர் அல்ல,அல்ல,அல்ல!

க.பொ.த வில் சைவ சமயம் எடுத்தவர்களுக்கு இந்த சைவசித்தாந்த பரம்பரை பற்றிய முழு விளக்கமும் கொடுக்கப்பட்டுஇருக்கும். சைவசித்தாந்த குருசீடமரபில் தலையாயவர் மெய்கண்டார். மெய்கண்ட சத்திரங்கள் 14 இல் தலையாயது சிவஞானபோதம்.

மேலும் விபரம் அறிய உடனே நாடுங்கள் விக்கிபீடியா ;-)

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D

பிரபா

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.

செல்லி!
அருமையான அறிந்திராத பாடல்கள்; தாங்கள் அவற்றுக்குரை சொன்ன பாங்கே தனி!!
தொடரவும்.
வெற்றியையும் கைபிடித்துக் கூட்டிச் செல்வோம்.

வறுவல்- வற்றல் குழம்பு என நினக்கிறேன்,

வறுவல் என்பது எண்ணையில் பொரித்து சாப்பிடும் பொருள். உருளை,நேந்திரங்காய் வறுவல் போன்றது.

பழையபாடல்களை சுவையோடு தருகிறீர்கள்

வாருங்கோ யோகன்

//அருமையான அறிந்திராத பாடல்கள்; தாங்கள் அவற்றுக்குரை சொன்ன பாங்கே தனி!தொடரவும்.வெற்றியையும் கைபிடித்துக் கூட்டிச் செல்வோம்.//
பாராட்டுக்கு நன்றி.
வெற்றியையும் வெற்றிகரமா கூட்டிக் கொண்டு போவோம்.:-).
வருகக்கு நன்றி, யோகன்.

வாங்க தி.ரா.ச. சார்

//வறுவல் என்பது எண்ணையில் பொரித்து சாப்பிடும் பொருள். உருளை,நேந்திரங்காய் வறுவல் போன்றது.//
ஆனா வற்றலை எப்படி வறுப்பது தான் சந்தேகமாக இருந்தது.
எப்பிடி,சார் இருக்கீங்க? தங்கமணி அம்மா நலமா இருக்காங்களா?
நான் சுகம் விசாரித்ததாகச் சொல்லுங்க.
நன்றி

Anonymous said...

"வற்றல் ஏதேனும் வறுத்துவை"

கத்திரிக்காய், கொத்தவரங்காய்,மிளகாய் இவற்றை வெய்யிலில் வைத்து காயவைத்து பின்பு எண்ணயில் பொரித்து வற்றல் குழம்பிலோ அல்லது அப்படியேயும் சாப்பிடும் வழக்கம் தமிழகத்தில் உண்டு.

வாங்க தி.ரா.ச. சார்

எங்க ஊரிலும் கதரிக்காய், பாவற்காய் வற்றல் போட்டுக் குழம்ம்பு வைப்போம்.
//நேந்திரங்காய் என்றால் என்ன?
உங்க மீதிப் பதிலை இங்கு இடவில்லை.

தாராளமாக ப்ரிஸ்பேன் அனுப்பலாம்.
மார்கழி என்றால் வேலை,ஸ்கூல் விடுமுறை இருக்கும்.
வருகைக்கு நன்றி ,ஐயா.