அவுஸ்திரேலியாவில் 25 வயதிற்கு மேற்பட்டோர் பெண்கள் 27% மும், ஆண்கள் 47% ஆக 1980 களில் எடை கூடியவர்களாக இருந்தனர் எனவும், இந்த சதவீதம் 2000 ம் ஆண்டளவில் முறையே பெண்கள்47%மும், ஆண்கள் 60% மும் எடை கூடியவர தொகை கூடியுள்ளதாகப் எனப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன.இதிலிருந்து தெரிவது என்னவென்றால்,பெண்களிலும் பார்க்க ஆண்களே எடை அதிகரிப்பில் இருக்கிறார்கள் என்பதாகும். "உண்டி சுருங்குதல் பெண்டிற்கழகு" என்பதை பெண்கள் கடைப் பிடிக்கிறார்கள் போலும்.
அடிப்படையில் மனித உழைப்பு என்பது உணவுக்காகத்தான் என்பதில் ஐயமில்லை.அந்த உணவை உடலின் தொழிற் பாட்டிற்கேற்ப உண்டால் எடை அதிகரிப்புப் பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்காது. உடல் செய்கின்ற தொழிலுக்கு அதிகமாகச் சாப்பிடும்போது தான் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது.
"Single diet is best;for many dishes bring many diseases" என்கிறார் பிங்கி(Pinky).
எடை அதிகரிப்பை எப்படி அளப்பது?
உடற் திணிவு சுட்டெண் (Body Mass Index -BMI)எடை அதிகரிப்பைக் கண்டு கொள்ள உதவுகிறது.இது எவ்வாறு கணிப்பிடப்படுகிறது என்பதைப் பாப்போம்.
உடலின் நிறை கிலோ.கிராம்
------------------------------------- = உ.தி.சு.எ (BMI)
உடலின் உயரம் மீற்றர்(வர்க்கம்)
அதாவது உங்கள் உடல் நிறையை உங்கள் உயரத்தால் பிரிக்க(வகுக்க) வருவதாகும்.உங்களுக்கு எடை அதிகரிப்பு இருக்கா என்று அறிய இங்கே சென்று பார்க்கவும்.
உ.தி.சு.எ.விவரிக்கும் விளைவுகளக் கீழே காணலாம்.
19 க்குக் குறைவாயின் - எடைக் குறைவு உள்ளது. ஆதாவது ஆரோக்கியத்திற்குத்
தேவையான எடையின் அளவை விடக் குறைய உள்ளது
என்பதாகும்.
20 – 25 - இது ஆரோக்கியமான எடையின் அளவு.
26 - 30 - இது எடை அதிகரிப்பு உள்ள நிலை ஆகும். நோய்கள் எதுவும்
தோன்றக் கூடிய
நிலை ஆகும். உணவுக் கட்டுப்பாடு, உடற் பயிற்சி கட்டாயம்
செய்ய வேண்டும்.
30 க்கு மேல் - இது உடலில் கொழுப்பின் அளவு கூடியுள்ள நிலையைக்
குறிக்கிறது. பல நோய்களின் ஆபத்தான நிலையுமாகும்.
எடையைக் குறைக்க என்ன வழி?
உண்வுக் கட்டுப்பாட்டினாலும்,தினசரி உடற்பயிற்சி செய்வதாலும் உடலில் அள்வுக்கு அதிகமாக இருக்கும் கொழுப்பின் அளவைக் குறைக்கலாம்.
உணவுக் கட்டுப்பாடு
சிலர் உண்ணுகிற அளவைக் குறைத்தால் சரி என நினைத்து விரதம் இருக்கிறார்கள்.
பின்னர் விரதமிருந்த பட்டினிக்கும் சேர்த்து கூடுதலாக சாப்பிடுகின்றனர்.ஆகவே, விரதம் இதற்கு சரியான அணுகுமுறை அல்ல.
சத்துள்ள உணவுகளை உண்பது அவசியம். சத்துள்ள உணவுகள் எனும்போதுமாச்சத்துக் குறைந்த உணவுகள்
கொழுப்புக்(எண்ணெய்) குறைந்த உணவுகள்
அதிகளவு மரக்கறி(காய்கறி)கள், பழங்கள் போன்றவற்றை அன்றாட உணவிற் சேர்த்துக் கொள்வதோடு, தினமும் 8 லீற்றார் நீர் அருந்துதல் நல்லது.
உடற் பயிற்சி எனும்போது, ஜிம்முக்கு போவது நல்ல தீர்வாக சிலர் நினைக்கிறார்கள். இவர்கள் அங்கு போவதை விடுமுறைக்காகவோ அல்லது நோய் அல்லது வேறு காரணங்களுக்காக நிறுத்தியவுடன் இழந்த கொழுப்பை திரும்பவும் அடையக் கூடிய நிலை ஏற்படுகிறது.உண்மையில் எந்தவித ஜிம்முக்கான செலவுமில்லாமல் அன்றாடம் 30 - 40 நிமிடம் நடைப் பயிற்சி செய்வதே போதுமானது. இதை கட்டாயமாக்கிக் கொள்ளவது அவசியம்.
சத்துள்ள உணவை உண்பதும், உடற்பயிற்சி செய்வதுமான ஆரோகியப் பழக்கத்தை கடைப் பிடித்தால் எடல் அதிகரிப்பினால் ஏற்படக் கூடிய நோய்களிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறலாம்.
6 Responses to “எடை அதிகரிப்பை கண்டு பிடிப்பது எப்படி?”
செல்லி உங்கள் பதிவுடன் சம்பந்தமாக நான் முன்னர் எழுதிய சில பதிவுகளின் இணைப்புக்கள்.
http://jeyachchandran.blogspot.com/2005_08_01_archive.html
http://jeyachchandran.blogspot.com/2005_11_01_archive.html
வி.ஜே
உங்க பதிவைப் பார்ந்தேன்.நல்லயிருக்கு.
பிழை திருத்தியதற்கு மிக நன்றி.
மீண்டும் நன்றி, வி.ஜெ.
அப்பப்ப இப்படி உபயோகமான பதிவு போடறீங்க.. நன்றி :-)
//எடை அதிகரிப்பை கண்டு பிடிப்பது எப்படி? //
இந்தத் தலைப்புக்கு,
'அடிக்கடி தராசில நிறுத்தால் கண்டுபிடிக்கலாம்' எண்டு ஒற்றைவரியில பதிலிருக்கு.
அதைவிட்டிட்டு இவ்வளவு பெரிய இடுகை தேவையா?
வாங்க, வாங்க, வாங்க வசந்தன்
என்ன கநாளா சிலமனைக் காணேல?
exam எல்லாம் முடிஞ்சுதுதானே!
//அடிக்கடி தராசில நிறுத்தால் கண்டுபிடிக்கலாம்' எண்டு ஒற்றைவரியில பதிலிருக்கு.
அதைவிட்டிட்டு இவ்வளவு பெரிய இடுகை தேவையா?//
அது.. சரி!
தராசில நிறுக்கலாந்தான், ஆனா அது உம்மட உயரத்துக்கு ஏத்த நிறையோ எண்டதல்லோ முக்கியம்.
இப்ப உம்மட நிறை 60கிலோ எண்டு வைச்சுக் கொள்வம். உம்மட உயரம் 5'1" எண்டால் நீர் 7கிலோ எடையை குறைச்சா நல்லது, தம்பி.:-)))
எப்பிடி உம்மட நிறை 60கி எண்டு எனக்கு தெரியுமெண்டுதானே யோசிக்கிறீர் , உம்மட டான்ஸ்சை சயந்தன் போட்ட வீடியோவில பாத்தனானல்லோ .அதில எடுத்த ஊகந்தான்:-))).
கருத்துக்கு நன்றி.
Post a Comment