கேட்டு மகிழ -12 காண ஆயிரம் கண் வேண்டும் -

சிட்னி முருகனுக்காக இந்தப் பாடற் பதிவு. பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் அழகான அலங்காரத்துடன் தேர்க்கோலம் பூண்ட சிட்னி முருகன் அழகைக் காண ஆயிரம் கண் வேண்டும்.

இப் பாடலின் சரணத்தில் முருகனின் நாமங்களை நித்யசிறீ பாடும் அழகே தனி!இந்தப் பாடல் நித்யசிறீயின் குரலிலே கேட்கக் கேட்க தெவிட்டாதது.நீங்களும் கேட்டுப்பாருங்கள்.
ராகம்: பீம்பிளாஸ்,
தாளம்: ஆதி,
பாடல்: அருளவன்

நித்யசிறீ பாடியதைக் கேட்க

வீடியோவில் பார்க்க இதோ..







இதையும் கேளுங்க


சந்தணமும் ஜவ்வாதும் சேர்ந்து மணங்கமழ
பாலபிஷேகமுடன் வெற்றித் திருநீறணிந்து
தங்க ரதத் தேரினிலே பக்தர்படை சூழ்ந்துவர
வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் -முருகா..முருகா
வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் -உன்னழகை

காண ஆயிரம் கண் வேண்டும் உன்னைக்
காண ஆயிரம் கண் வேண்டும் முருகனைக்
காண ஆயிரம் கண் வேண்டும் முருகனைக்
காண கண் ஆயிரம் வேண்டும்

உலகளந்த வல்லவனை வண்ணமயில் வாகனனை
கணபதி சோதரனை தந்தை சுவாமி ஆனவனை (காண)

செங்கதிரும் முழுமதியும் சேர்ந்தணிந்த சுந்தரனை
விண்ணகமும் மண்ணகமும் காத்து நிற்கும் அருளகனை(காண)
முருகனைக் காண குமரனைக் காண
கந்தனைக் காண வேலனைக் காண
குகனைக் காண கடம்பனைக் காண
ஆறு முகனைக் காண சரவணனைக் காண
சிவகுமரனைக் காண கார்த்திகேயனக் காண
சண்முகனைக் காண அழகனைக் காண
பாலனைக் காண மயில்வாகனனைக் காண
அழகனைக் காண வேலனைக் காண
பழனி வேலனைக் காண முருகா..முருகா


கே.ஜே.யேசுதாஸ் பாடியதைக் கேட்க.


நன்றி,படம்:sydneymurugan.org.au
______________________________________________________________________________________

8 Responses to “கேட்டு மகிழ -12 காண ஆயிரம் கண் வேண்டும் -”

//செங்கதிரும் முழுமதியும் சேர்ந்தணிந்த சுந்தரனை//

செல்லி!
அருமையான பாடல் ;இந்த அடியும் அழகான அடி ;எனக்குப் பிடித்த நித்திய சிறி குரல்; என் இஸ்ட தெய்வம் முருகன் புகழ்...மணக்கும் பாடல்
நன்றி

தாங்கள் ஏன் முருகன் அருள் கூட்டுப் பதிவில் இணைந்து முருகன் பாடல்களை இடக்கூடாது? இணைவதில் தடையில்லை என்றால் நானோ சிபியோ அழைப்பை அனுப்புகிறோம்.

யோகன்
முருகனை யாருக்குத் தான் பிடிக்காது!
அழகன்,அருளகன்,ஆறுமுகன் முருகனைக் கும்பிடுவோருக்கு அடுத்தடுத்து வரும் பகையெலாம்
கழுத்தறுந்து போய் மடியுமாம்!
வரவுக்கு நன்றி.

குமரன்
முருகன் அருள் கூட்டுப் பதிவில் இணையும்படி தி.ரா.ச. சாரும் முன்பு கேட்டிருந்தார்.
முதலில் பாட்டுகள் கொஞ்சம் சேர்த்துவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்.
நன்றி

அருமையான பாடல் முருகன் என்றாலே அழகு. அவ்னைப்பற்றிய பாடலும் அழகுதான்.படத்தில் முருகன் எவ்வளவு அழகாக இருக்கிறான்.

"வேலவனே வேலவனே வெற்றி வடி வேலவனே
புள்ளி மயில் ஏறிடும் வள்ளி மணவாளனே.சொக்கத்தங்கம் தெய்வாணை சொக்கும் வடி வேலவனே"

தி. ரா. ச.சார்


இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

//அருமையான பாடல் முருகன் என்றாலே அழகு. அவ்னைப்பற்றிய பாடலும் அழகுதான்.படத்தில் முருகன் எவ்வளவு அழகாக இருக்கிறான்.//

முருகு என்றால் அழகு.முருகன் என்றால் அழகன்.
உலகளந்த வல்லவன்: ஞானப்பழத்திற்காக உலகத்தை வலம் வந்தவன்
தந்தை சுவாமி ஆனவன்:
தந்தைகே குருவானவன்.பிரணவத்தின் பொருள் என்னவெண்று தன் தந்தைக்கே உபதேசித்தவன்.
மேலும், நித்தியச்றீயின் குரல் இனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். 6 கட்டை சுதியில் அவர் பாடும்போது கேட்க அருமையாக இருக்கும்.
வரவிற்கும் கருத்திற்கும் நன்றி

செல்லி,
நல்ல பாடல். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களின் கனவுகள் யாவும் நனவாகி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் ஆண்டாக இந்த ஆண்டு அமைய இறைவனை வணங்கி நிற்கிறேன்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி, வெற்றி

ஆஹாஹா.. நல்லதொரு பாடல். நல்ல பதிவு. மிக்க நன்றி.