பெண் பதிவர்களை இவர்களுக்குப் பிடிக்காதோ?
இதற்காக பதிவே இனிப் போடமாட்டேன் என்று மட்டும் அனோனிகளே எண்ணவேண்டாம். உங்களின் கீழ்த்தரமான செயல் மேலும் மேலும் என்னை எழுதத் தூண்டுகிறது என்பதையும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒரு விதத்தில் பார்த்தால் என்னை உற்சாகப் படுத்திவிட்டீர்கள் என்றே சொல்வேன். அதற்கு மிக நன்றி
15 Responses to “அனோனிகளின் அநியாயம், ஆனால் எனக்கது உற்சாகம்”
இதென்ன மூட்டைப்பூச்சிகளுக்கு பயந்தா வீட்டை கொளுத்துவது? மாடரேஷன் இருக்கிறதல்லவா? அப்புறம் என்ன? அசிங்கப் பின்னூட்டங்களை குப்பையில் போடுங்கள். உங்கள் வேலையை கவனிக்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Hello,
Always have comment moderation in your settings and DECIDE which comment you want to exibit.Be ruthles in it.
Do not bow away with out writing fearing these cowards..
Happy writing !
வாங்க டோண்டு சார்
//அசிங்கப் பின்னூட்டங்களை குப்பையில் போடுங்கள்.//
குப்பையிலே போட்டிட்டேன் என்பதையும் உதுகளுக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என்பதயும் தெரியப் படுத்தவே இந்தப் பதிவைப் போட்டேன்.
உங்க வருகைக்கு மிக நன்றி
அறிவன்
உங்க ஆலோசனைக்கும் ஆதரவுக்கும் மிக நன்றி
பிரபா
கொஞ்சம் அவசரப் பட்டிட்டேன்.:-(
இனி திரும்பவும் அதை பதிவிடப் போறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தெருவில் நடக்கும்போதுகூட சில சங்கடங்கள் ஏற்படுகின்றன.அதற்காக
தெருவில் நடக்கமாட்டீர்களா?
தவிர்க்கவேண்டியவற்றை நீக்கிவிட்டு
அப்பதிவை மீள்பதிவிடவும்
உங்களுக்குமா?
காலைத் தூக்குகிறார்கள்...அப்போ பிரபலியமாகிவிட்டீர்கள்.
பார்த்து குப்பையில் போட்டுவிட்டு சிவனே என்றிருங்கள்.
இடுகையையே குப்பைக்க போட்டிட்டு, பிறகு வந்து ஒண்டுக்கும் பயப்பிடாத ஆள்மாதிரி கதை விட்டு்க்கொண்டிருக்கிறியள்?
சிவா ஞானம்ஜி
//தெருவில் நடக்கும்போதுகூட சில சங்கடங்கள் ஏற்படுகின்றன.அதற்காக
தெருவில் நடக்கமாட்டீர்களா?//
முதற் தாடவை இல்லியா, கொஞ்சம் ஈடாடிப்போயிட்டேன்
//தவிர்க்கவேண்டியவற்றை நீக்கிவிட்டு
அப்பதிவை மீள்பதிவிடவும//
நிச்சயமாக மீள்பதிவிடப் போறேன்.
நன்றி
யோகன்
//அப்போ பிரபலியமாகிவிட்டீர்கள்.//
ஆகா.. என்னைப் பிரபல்யமாக்கி விட்டாங்களே! மிக்க சந்தோசம்.
நன்றி யோகன்
வசந்தன் வாங்க:-) வாங்க:-) கன நாளைக்கு பிறகு.
//இடுகையையே குப்பைக்க போட்டிட்டு, //அவசரக் குடுக்கையாயிட்டேன்
//பிறகு வந்து ஒண்டுக்கும் பயப்பிடாத ஆள்மாதிரி கதை விட்டு்க்கொண்டிருக்கிறியள்?//
ஏதோ துணிஞ்சு அதைப் பற்றி பதிவு போட்டிட்டேனே அதுவே காட்டுந்தானே நான் பயப்பிடேலயெண்டு:-)
அனானிப் பெருமக்கள் திட்டுற அளவுக்கு அப்பிடி என்ன எழுதினீங்கள்? :-))
பின்னூட்ட மட்டறுத்தல் வைச்சிருக்கிறீங்கள் தானே? சத்தம் சந்தடி இல்லாமல் வரும் தேவையற்ற பின்னூட்டங்களை விலக்கி விட்டு தொடர்ந்து எழுதுங்கள்.
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், இந்தப் பதிவில் நான் முன்னர் போட்ட பின்னூட்டம் எங்கே ;))
பிரபா
மன்னிக்கவும்.
தவறுதலாக ஏதோ நடந்துவிட்டது.
மின்னஞ்சலை செக் பண்ணிப் பாத்தேன்
//பின்னூட்டத்தை அழித்து விட்டுப் பதிவை மட்டும் விட்டிருக்கலாமே? // உங்க பின்னூட்டம் இப்பிடி இருந்தது.
இதை பப்ளிஸ் பண்ணாட்டிலும் இதற்கு பதில் ஏற்கனவே போட்டிருக்கேன்.கொஞ்சம் மேல பாருங்க
//
// பிரபா
கொஞ்சம் அவசரப் பட்டிட்டேன்.:-(
இனி திரும்பவும் அதை பதிவிடப் போறேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி//
அப்பிடீன்னு இருக்கு.
//எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும், இந்தப் பதிவில் நான் முன்னர் போட்ட பின்னூட்டம் எங்கே ;))//
என்ன இப்ப ok யா?:-))
வெற்றி
//பின்னூட்ட மட்டறுத்தல் வைச்சிருக்கிறீங்கள் தானே? //
வாசித்த அதிர்ச்சியில மூளை அதைப் பத்தி யோசிக்கவே இல்லை
// தொடர்ந்து எழுதுங்கள்.//
நிச்சயமாக
நன்றி
Post a Comment