தொழிலற்றவர்களுக்கு கொடுக்கப்படும் சலுகைப் பணம் (dole) பெறுவதற்கு social security(1997 ற்குப் பின் centerlink என்று மாற்றப்பட்டுள்ளது) யில் பதிவு செய்ய வேண்டும்;
C.E.S இல் (Commonwealth Employment Service -தற்போது தனியார் முகவர் நிலையங்கள் இந்தச் சேவையைச் செய்கின்றன) தொழிலுக்குப் பதிவு செய்யவேண்டும்;
இலவச மருத்துவ வசதியைப் பெற Medicare க்குப் பதிய வேண்டும்;
வங்கியில் புதுக் கணக்கு ஆரம்பிக்க வேண்டும்;
வாடகைக்கு இடம் தேடவேண்டும் என்பனவாகும். இவை தெரிந்தால்த் தான் இக் கவிதை உங்களுக்குப் புரியும்.
வந்தநாடும் புதிது
வாய்த்தவரும் புதிது
வயிற்றிலும் புதிது
வாந்தியும் புதிது
வருந்தலைச் சுற்றும் புதிது
வந்ததுமே குந்தியிருந்தா
வந்திடுமா dole உடனே
social security இல் பதிய
C.E.S இல் தொழிலுக்குப் பதிய
வங்கியில கணக்குத் திறக்க
வாடகைக்கு அறை எடுக்க
அடுக்கடுக்காய் இவ்வலுவலுக்கு
அலைஞ்சதனால் தலைசுற்றி
அருந்திடத் தேநீரை
ஆவலாய்த் தேடினேன்
அங்கெலாம் இருந்ததோ கோப்பிக்கடை!
ஊர்க் கோப்பியை நினைத்து
உள்ளே நுழைந்தவுடன்
"ஒரு குவளை கோப்பி"யென்றேன்
"பிரச்சனை" இல்லையென்றவள்,
"கறுப்பா? வெள்ளையா? அதற்குச்
சீனி ஒன்றா? இரண்டா?
Expresso வா? Moccona வா?"
என்றேதேதோ சொன்னாள்...
ஏற்கனவே சுற்றியதலை
இன்னும் சுற்றியது.
ஊர்த் தேநீரை நினைக்க
ஊறியது வாயில் உமிழ்நீர்
"மனதை மாற்றிவிட்டேன், மாறாக
ஒரு குவளை தேநீர் "என்றேன்.
"கவலையில்லை" என்றவள்..
"பச்சையா? கறுப்பா?
English Breakfast ரா?
China Jusmine னா?"
இதைக் கேட்டதும் தலை
இன்னும் சுற்றியது.
"மனமில்லைத் தேநீருக்கு, அதனால்
பச்சைத் தண்ணீர் போதும்" என்றேன்.
விளக்கம்
பிரச்சனை இல்லை - No problem
கவலையில்லை - No worries
கறுப்பா? -அதாவது, பால் கலக்காதது
வெள்ளையா? -பால் கலந்தது
சீனி ஒன்றா? இரண்டா? - சீனி(சர்க்கரை-தமிழகத்தில்) ஒரு கரண்டியா? இரண்டு கரண்டியா?
Expresso, Moccona -கோப்பியின் வகைகள்
பச்சையா ? - Green tea
கறுப்பா? - Black tea , ஊரிலே இதை plain tea என்பார்கள்.
English Breakfast ,China Jusmine - தேயிலை வகைகள்
___________________________________________________________________
வருகைக்கு நன்றி, ஒரு வரி எழுதீட்டுப் போனீங்க என்றால் அதுக்கும் ஒரு நன்றி. அன்புடன் செல்லி.
12 Responses to “"ஒரு குவளை தேநீர்.......".....”
எங்கட பழைய ஞாபகத்தை எல்லாம் கிளறுறீங்க. அந்தக் கால முதல் அனுபத்தை, homesick யும் மறக்கமுடியுமா?
என்ன இஞ்சினியர் சார், வீடெல்லாம் கட்டிட்டீங்க, பேரும்"துணிவே துணை" ன்னு வச்சிட்டீங்க, ஆனா எழுத துணிச்சல் வரலியோ?
வீடு empty யாவே இருக்கு.
வருகைக்கு நன்றி.
வந்தநாடும் புதிது
வாய்த்தவரும் புதிது
வயிற்றிலும் புதிது
வாந்தியும் புதிது
வருந்தலைச் சுற்றும் புதிது
"வரைந்த கவிதையும் புதிது."
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் செல்லி.
அலுவல் நிமித்தமாக நிறைய வெளியூர்ப்பயணங்கள் அதனால்தான் தாமதம்
வணக்கம் தி. ரா. ச. சார்,
நலமா?
என்ன, இந்தப் பக்கம் இன்னும் காற்று வீசலையேன்னு பாத்தேன்.
//"வரைந்த கவிதையும் புதிது."
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் செல்லி.//
பாராட்டுக்கு நன்றி, சார்.
//அலுவல் நிமித்தமாக நிறைய வெளியூர்ப்பயணங்கள் அதனால்தான் தாமதம் //
வெளியூர்ப் பயணமெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
accaa
kavithai kalakkuthu.
anupavam pEsuthu.
mm.. thodarnthu ezthungko!
nanri
anpudan
Kanesan
uni தொடங்கிட்டுது எண்டு தெரியுது.
ஆளின்ர சத்ததையே காணெலை.
Blues நீலமாய் தெரிகிறது!
:-)
வாங்க ஜீவா
//Blues நீலமாய் தெரிகிறது!//
என்னசொல்லுறீங்க? புரியலை
என்றாலும், வருகைக்கு நன்றி
நிதர்சனமானவரிகள் வாழ்த்துக்கள். நீங்கள் வசிக்கும் நாட்டில் கறுப்பா வெள்ளைக்கோப்பியா எனக்கேட்டார்கள் அதுவரையில் சந்தோசப்படுங்கள். நான் வசிக்கும் நெதர்லாந்து நாட்டில் Coffee shop (கோப்பி சொப்) என்றால் புகைத்தலிக்கான கஞ்சா விற்கும் கடைதான்
வணக்கம் இலக்கியன்
// நிதர்சனமானவரிகள் வாழ்த்துக்கள்// உங்கள் ஆதரவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.
//நீங்கள் வசிக்கும் நாட்டில் கறுப்பா வெள்ளைக்கோப்பியா எனக்கேட்டார்கள் அதுவரையில் சந்தோசப்படுங்கள்.//
நாடு புதுசு, homesick அதிகமா இருந்திச்சு.யாழ்ப்பாணத்தில கடையில் ஒரு தேத்தண்ணி எண்டு கேட்டாப் போதும், இவங்களை மாதிரி ஆயிரத்தெட்டு choice அங்கை இல்லை. தலைச்சுற்றிற்கு அவசரமா ஒரு தேத்தண்ணி குடிக்க முடியலையே என்ற ஆதங்கம் தான் இந்தக் கவிதை.
//நான் வசிக்கும் நெதர்லாந்து நாட்டில் Coffee shop (கோப்பி சொப்) என்றால் புகைத்தலிக்கான கஞ்சா விற்கும் கடைதான்//
இது ரொம்பக் கொடுமையாயிருக்கே !
இங்கெல்லாம் coffee shop இல Ladies ஐத்தான் அதிகமாக காணலாம்.
ஆண்களை Pub இல்த்தான்( அதுதான் நம்ம ஊர்த் தவறணை) அதிகம் காணலாம்
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி
vaazha nalamudan valamudan
RR
வாங்க ஆரார்
நீங்க ஆராயிருக்கலாம் எண்டு யோசிக்கிறன்
//vaazha nalamudan valamudan
RR//
வந்து வாழ்த்தியதற்கு நன்றி.
Post a Comment