பழச் சாறு சிறுவரின் எடை அதிகரிப்பைக் கூட்டுகிறதா?

பழச் சாறுகள்(fruit juice).பழ ரசங்கள்(Cordial) இயற்கையானவை; வைற்றமின்கள் உள்ளவை; ஆரோக்கியமானவை என நம்ப வைப்பது மிகவும் இலகுவானது. ஆனால் அவற்றில் இருக்கும் உடற் கொழுப்பைக் கூட்டக் கூடிய அளவுக்கு அதிகமான சீனியை அதாவது இனிப்புத்தன்மையை யாரும் பெரிதுபடுத்துவதில்லை பழச்சாறு, இவற்றை அதிகளவு அருந்தும் பிள்ளைகளுக்கு பசி இன்மை, வயிற்றோட்டம், பற்சூத்தை, எடை அதிகரிப்பு, போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.(1)
விக்டொரியா மாநிலத்திலுள்ள் டேக்கின் பல்கலைக் கழக(Deakin University) ஆய்வு (2)ஒன்று் குறிப்பிடுவது யாதெனில், பழச் சாறு உடற் கொழுப்பினால் ஏற்படும் ஆபத்தை இரணடு மடங்கு ஆக்குகிறது;தினமும் பழச் சாறும், மென் பானங்களும் அருந்தும் ஆரம்பப் பாடசாலை சி்றுவர்கள் எடை அதிகரிப்பு ஏற்படும் நிலையில் இருக்கிறார்கள்; பிள்ளைகளின் உடற் கொழுப்பை அதிகரிப்பில் பழச் சாறும் ஏனைய பழ ரசங்கள் (கோடியல்) உட்பட பெருப் பிரச்சனைகளாக உள்ளன என்பதுவுமாகும்.(2)

இந்த ஆய்வுக்கு 2200 விக்ரோரிய சிறுவர்களைக் உட்படுத்தப்பட்டனர்.ஒருதடவைக் கணிப்பீட்டில் 75% மான சிறுவர் ஒரு கிளாஸ் பழச்சாறு அருந்துகிறார்கள்; 25% மானவர் 3 கிளாஸ் குடிக்கிறார்கள் எனவும், அதேவேளை16% மானவர்தான் மென் பாங்களை அருந்துவதாகவும் அறியப்பட்டுள்ளது. சிறுவரைப் (12 வயதிற்குட்பட்ட)பொறுத்தவரை பழச் சாறுகள் தான்பிரச்சனையேதவிர, மென்பானங்கள் உண்மையில் பிரச்சனையில்லை இந்த ஆய்வ எழுதிய அன்றீயா சனிகோஸ்கி சொல்லுகிறார் (2).

பழச் சாறு, பழ ரசங்கள் போன்றவற்றில் வைற்றமின்கள் இருப்பினும், அவற்றில் உள்ள அதிகளவு சீனி கொழுப்பாக மாறி சிறுவரின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கிறது என்பதுதான் அப்பட்டமான உண்மை.அதனால் இவற்றுக்குப் பதிலாக பழங்களையும் தண்ணீரைம் பயன்படுத்தமுடியும் என இந்த ஆய்வு பரிந்துரை செய்கிறது.
மேலும், இயற்கையானவையோ, செயற்கையானவையோ இந்த சீனித்தன்மையுள்ள பானங்கள் சிறுவரின் பற்களையும் பாதிப்பதுடன்,அவர்களின் எடை அதிகரிப்புக்கும் காரணமாவதால்,உண்மையில் பிள்ளைகட்கு பழரசம் அல்லது பழச் சாறு தேவைதானா என்று பெற்றார் யோசிக்க வேண்டுமாம்.
மறுபுறத்தில், அவுஸ்திரேலிய பழச் சாறு சங்கம் (Australian Fruit Juice Association)இதற்கு எதிரான தமக்குச் சாதகமான கருத்து மிகவும் சுவாரஸ்சியமானது.
அவுஸ்திரேலிய பழச் சாறு சங்கம் பல்லுக்கு ஆபத்து தரும் (பழச் சாறு தவிர்ந்த) காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:
அடிக்கடி நொறுக்குத்தீனி (snack)கொறிப்பதும்,
பாற்பொருள் உணவு(cheese,yoghurt) உண்ணாமையும்,
புளோரை பற்பசை பாவிக்காததும்,
பழச் சாற்றை குடிச்சு பிள்ளையள் நித்திரை கொள்வதும்
புளோரைட் தண்ணி இல்லாத சமூகத்தில் வாழுவதும் காரணமே தவிர என
அறிவிக்கிறது.
ஆகவே, பழச் சாறுதானே என்று எடுத்த எடுப்பிலேயே பிள்ளைக்கு நல்லது; எவ்வளவும் பிள்ளை அருந்தலாம் எனத் தப்பாக விளங்கிக் கொள்ளக் கூடாது.பதிலாக பிள்ளைகள் பழங்கள் சாப்பிட ஊக்குவிக்கலாம்.நீர் அருந்தும் பழக்கத்தையும் சிறுவயதிலிருந்தே பழக்குவதும் பிள்ளைகளின் நிகழ்காலத்திற்கு மட்டுமல்ல எதிர்கால ஆரோக்கியத்திற்கும் சிறந்ததாகும்.
உசாத் துணை:
1.Water, milk, juice and soft drinks y Raising Children Network (Article)
2. The Age, Chantal Rumble (News paper)
__________________________________________________________________________________________-

8 Responses to “பழச் சாறு சிறுவரின் எடை அதிகரிப்பைக் கூட்டுகிறதா?”

செல்லி!
மிக அருமையான விடயம்; பழச்சாறு பிளியப் பஞ்சிப்பட்டுக் காசைக் கொடுத்து நோயை வாங்குகிறார்கள்.
இந்த விடயம்; நம் வானொலிகளிலும்; தொலைக்காட்டிகளிலும் ஏன் வீடியோ கசட்களிலும் கூட விளம்பரமாக பதிந்து யாரவது புகழ் பெற்ற நடிகர் ; நடிகை மூலம் சொன்னால் சில சமயம்
நம் மக்கள் புரிந்து உணரலாம்.
பூனைக்கு யார் மணிகட்டுவது.

யோகன்
//பழச்சாறு பிளியப் பஞ்சிப்பட்டுக் காசைக் கொடுத்து நோயை வாங்குகிறார்கள்.//
உண்மைதான். பஞ்சிக்கு இன்னொரு பேர் நேரமின்னமை.
மனதுவைத்தால் "கட்டாயம் தேவை" என்பவற்றை செய்யமுடியும்,இல்லையா?
//விளம்பரமாக பதிந்து யாரவது புகழ் பெற்ற நடிகர் ; நடிகை மூலம் சொன்னால் சில சமயம்
நம் மக்கள் புரிந்து உணரலாம்.//
இது பாமர மக்களுக்கு புரிய வைக்க நல்ல செலவுமிக்க வழி.
வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

நல்ல விஷ்யம்.பழம் உண்ணுவது சாறை விட நல்லது.அது சரி தங்கமணி இப்போதான் தர்பூஸ் சாறு அளிக்கிறார்கள்.செல்லி அவர்களே குடிக்கலாமா வேண்டாமா சொல்லுங்கள்

தி.ரா.ச. சார்
//தங்கமணி இப்போதான் தர்பூஸ் சாறு அளிக்கிறார்கள்.செல்லி அவர்களே குடிக்கலாமா வேண்டாமா சொல்லுங்கள்//
இனிப்புத் தன்மை மிகவும் குறைந்தால் நல்லது என நினைக்கிறேன்.இன்ப்புக் கூடினா நீர் கலந்தால் நல்லது.
நன்றி

செல்லி ஒரு நல்ல விடயத்தை பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்.
பழச்சாறுகள் பற்றி அதன் உற்பத்தியாளர்கள் சொல்லும் அத்தனை விடயங்களும் நம்பும் படியானவையல்ல என்பதற்கு தங்கள் நாட்டில் இருந்தே ஒரு உதாரணம். அதை கண்டுபிடித்ததில் பங்குவகித்தவர் புலம்பெயர் தமிழ் மாணவி.
http://www.dnaindia.com/report.asp?NewsID=1091029

//பல்லுக்கு ஆபத்து தரும் (பழச் சாறு தவிர்ந்த) காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:
அடிக்கடி நொறுக்குத்தீனி (snack)கொறிப்பதும்,
பாற்பொருள் உணவு(cheese,yoghurt) உண்ணாமையும்,
புளோரை பற்பசை பாவிக்காததும்,
பழச் சாற்றை குடிச்சு பிள்ளையள் நித்திரை கொள்வதும்
புளோரைட் தண்ணி இல்லாத //

அவர்கள் சொல்லும் மேலே சொன்ன காரணங்களையும் நிராகரித்துவிட முடியாது.

வி.ஜே

//உற்பத்தியாளர்கள் சொல்லும் அத்தனை விடயங்களும் நம்பும் படியானவையல்ல//
ஓம், றைபீனா (Ribena) என்ற பழரசம்(cordial) அதிகளவு வைற்றமின் சீ யைக் கொண்டது என்ற உற்பத்தியாளரின்(GSK) கூற்று பொய் என ஆராய்ச்சி மூலம் நிரூபணமாகி உள்ளது.

Sri Lanka-born Devathasan and Suo இந்த ஆய்வைச் செய்து
நிரூபித்துள்ளனர். இந்த ஆய்வு இங்கு வெகுசனத் தொடர்பு ஊடகங்கள் மத்தியில் முக்கிய இடம்பெற்றது.
தகவலுக்கு நன்றி

வி. ஜெ.
//பல்லுக்கு ஆபத்து தரும் (பழச் சாறு தவிர்ந்த) காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது:
அடிக்கடி நொறுக்குத்தீனி (snack)கொறிப்பதும்,
பாற்பொருள் உணவு(cheese,yoghurt) உண்ணாமையும்,
புளோரை பற்பசை பாவிக்காததும்,
பழச் சாற்றை குடிச்சு பிள்ளையள் நித்திரை கொள்வதும்
புளோரைட் தண்ணி இல்லாத //

அவர்கள் சொல்லும் மேலே சொன்ன காரணங்களையும் நிராகரித்துவிட முடியாது.//

இவற்றில் நியாயங்கள் உண்டு. ஆனால் இவற்றைக் கூறித் தாம் தமது பிழையை நியாயப் படுத்த முனைவதுதான் தவறு.